இந்திய ஐடி மற்றும் டெக் நிறுவனங்கள் மத்தியில் சில மாதங்களுக்கு முன்பு கெட்டவார்த்தையாக பார்க்கப்பட்ட மூன்லைட்டிங் இன்றளவும் வெளிநாடுகளில் உள்ளது. இந்தியாவில் தான் ஊழியர்களை நிறுவனத்தால் பல கொள்கை வாயிலாக கட்டுப்படுத்த முடியும், அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளில் அதற்கெல்லாம் இடமே இல்லை. சரியாக 9 மணிக்கு வந்துவிட்டு மாலை 5 மணிக்கு ஷார்ப்பாக கிளம்பிவிடும் வழக்கம் உள்ளது.
இந்த நிலையில் கலிபோர்னியாவில் ஒரு ஐடி ஊழியர், வீட்டில் இருந்த படியே இரு நிறுவனத்தில் வொர்க் ப்ரம் ஹோம் கீழ் பணியாற்றிக்கொண்டு, வருடத்திற்கு 2.5 கோடி ரூபாய் சம்பதிக்கிறார். இவருடைய ப்ரோபைல் இப்போது இளம் டெக் ஊழியர்கள் மத்தியில் அதிகளவில் பிரபலமாகியுள்ளது.

கடந்த 2 வருடமாக இரண்டு வேலையில் பணியாற்றி, வருடத்திற்கு 2.5 கோடி ரூபாய் சம்பாதித்தாலும் தான் பணக்காரராக உணரவில்லை என பிஸ்னஸ் இன்சைடர் பத்திரிக்கை இண்டர்வியூவில் தெரிவித்துள்ளார். வருடத்திற்கு 2.5 கோடி ரூபாய் என்றால் கிட்டத்தட்ட 3 லட்சம் டாலராகும்.
இதேபோல் இந்த ஐடி ஊழியர் 3வதாக ஒரு நிறுவனத்திலும் பணியாற்ற கடந்த 2 வருடத்தில் 2 முறை முயற்சி செய்துள்ளார், ஆனால் அதை சமாளிக்க முடியாது என்பதை உணர்ந்து கைவிட்டு உள்ளார். இதற்கு காரணம் உடல்நிலை ஒத்துழைக்காது என்பது இல்லை, நேரம் போதாது என்பது தான்.
இந்தியாவிலும் பல டெக் ஊழியர்கள் ஓரே நேரத்தில் இரண்டு - மூன்று இடத்தில் பணியாற்றுவோர் எண்ணிக்கை இன்றும் அதிகமாகவே உள்ளது. ஆனால் அனைத்தும் ரகசியமாக கடைப்பிடிக்கப்படுகிறது.
இன்னும் பலர் ஒரு நிறுவனத்தில் பணியாற்றிக்கொண்டே சொந்தமாக பிஸ்னஸ் செய்யும் பணிகளையும் செய்து வருகின்றனர். இதேபோல் காலையில் ஒரு ஜப்பான் வாடிக்கையாளருக்கும், மாலையில் அமெரிக்க வாடிக்கையாளருக்கும் பணியாற்றும் போக்கு அதிகமாகவே உள்ளது.
இப்போ புரியுதா இந்திய நிறுவனங்கள் ஏன் WFH கட் செய்துவிட்டு அலுவலகத்திற்கு வந்து பணியாற்ற அழைக்கிறது என்று.


Click it and Unblock the Notifications