மூன்லைட்டிங்கிற்கு ஆதரவு.. விப்ரோவும் ஸ்விக்கியும் ஒன்றல்ல.. ஹர்ஷ் கோயங்கா பரபர கருத்து!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

moonlighting: மூன்லைட்டிங்கிற்கு எதிராக சிலர் ஆதரவு தெரிவித்தாலும் பலரும் இதற்கு எதிர்ப்பு குரலையே கொடுத்து வருகின்றனர். குறிப்பாக மூன்லைட்டிங்கினை காரணம் காட்டி விப்ரோ பணி நீக்கம் செய்தது பெரும் விவாத பொருளாகவே மாறியுள்ளது.

ஒரு தரப்பு கூடுதல் வருமானத்திற்காக வேலை நேரம் போக மற்ற நேரத்தில் மற்றொரு பணியில் ஈடுபடுவதை தவறல்ல என்று கூறினாலும், பலரின் வாதமும் இது சரியான நெறிமுறையல்ல. பணிபுரியும் நிறுவனத்திற்கு உண்மையாக இருக்க வேண்டும் என்ற கருத்தினையே பலரும் முன் வைக்கின்றனர்.

சம்பளம் அதிகமா கொடுங்க.. மூன்லைட்டிங் பிரச்சனை வராது.. ஐடி நிறுவனங்களுக்கு அதிகரிக்கும் நெருக்கடி! சம்பளம் அதிகமா கொடுங்க.. மூன்லைட்டிங் பிரச்சனை வராது.. ஐடி நிறுவனங்களுக்கு அதிகரிக்கும் நெருக்கடி!

விப்ரோவுக்கு ஆதரவு

விப்ரோவுக்கு ஆதரவு

இது இப்படி எனில் மற்றொரு தரப்பு ஒரு வேலை செய்யவே இங்கு நேரம் போதவில்லை. அப்படிருக்கையில் இங்கு மற்றொரு வேலையா? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இதற்கிடையில் ஆர்ஜிபி எண்டர்பிரைசஸ் தலைவர் ஹர்ஷ் கோயங்கா இந்த வார தொடக்கத்தில் பணி நீக்கம் செய்த, விப்ரோ நிறுவனத்துக்கு தனது ஆதாரவினை தெரிவித்துள்ளார்.

விப்ரோ Vs ஸ்விக்கி ஒன்றாகாது?

விப்ரோ Vs ஸ்விக்கி ஒன்றாகாது?

இந்தியாவின் முன்னணி ஐடி சேவை வழங்குனர்களில் ஒருவரான விப்ரோவினை, உணவு டெலிவரி செய்யும் நிறுவனமான ஸ்விக்கியுடன் ஒப்பிட முடியாது. குறிப்பாக மூன்லைட்டிங்கினில் விப்ரோ Vs ஸ்விக்கியினை ஒப்பிட முடியாது. ஏனெனில் விப்ரோ இன்று 500 ஃபார்ச்சூன் வாடிக்கையாளார்களுடன் ஓப்பந்தம் செய்கிறது. ஆக அவர்களுக்கு ஒரு ரகசிய தரவு இருக்கும். அதனை சமரசம் செய்ய முடியாது.

ஸ்விக்கி வேறு

ஸ்விக்கி வேறு

வாடிக்கையாளர்கள் தரவுகளில் ஏதேனும் குளறுபடிகள் ஏற்பட்டால் அதனை சமரசம் செய்து கொள்ள மாட்டார்கள். ஆக இது ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று. ஊழியர்கள் ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்து கொண்டே கூடுதலாக வருமானம் ஈட்ட மற்றொரு கூடுதல் பணியினை பகுதி நேரமாக செய்வதாலும், தரவுகள் ரகசியமாக இருக்க வேண்டியது அவசியம்.

ஐடி நிறுவனங்கள் பாதிக்கும்

ஐடி நிறுவனங்கள் பாதிக்கும்

ஸ்விக்கி போன்ற சில நிறுவனங்கள் இதனை ஆதரித்தாலும், அவர்கள் நிறுவனத்திற்கு வெளியில் இருந்து பணிபுரிகின்றனர். இது அவர்களின் வணிகத்தினை பெரிதும் பாதிக்காது. ஆனால் ஐடி நிறுவனங்களான விப்ரோ, இன்ஃபோசிஸ், விப்ரோ, ஐபிஎம் போன்ற ஐடி நிறுவனங்களில் இது தாக்கத்தினை ஏற்படுத்தலாம். குறிப்பாக விப்ரோவின் சி இ ஓ ரிஷாத் பிரேம்ஜி இதனை ஒரு ஏமாற்று வேலை என்று விமர்சித்தார்.

 No two timing, No moonlighting

No two timing, No moonlighting

விப்ரோவின் இந்த அறிவிப்புக்கு பிறகு பல நிறுவனங்களும் இதனை உன்னிப்பாக கவனிக்க ஆரம்பித்துள்ளன. நிறுவனம் ஊழியர் மற்றொரு நிறுவனத்தின் பணிபுரிவதை கண்டறிந்தால், அவர்களை பணி நீக்கம் செய்யலாம் எனவும் பல நிறுவனங்களும் எச்சரித்து வருகின்றன. ஐடி நிறுவனங்கள் " No two timing, No moonlighting" என கூறி வருகின்றன.

கடுமையான நடவடிக்கை

கடுமையான நடவடிக்கை

விப்ரோவின் பணி நீக்க நடவடிக்கையினை மிக கடுமையான நடவடிக்கை என பல தரப்பினரும் கூறி வருகின்றனர். மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் மூன்லைட்டிங்கினை ஆதாரித்து கருத்து தெரிவித்திருந்தார். எனினும் ஒப்பந்த மீறல்கள் கூடாது என்றும் எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Moonlighting updates: Harsh Goenka says Wipro and Swiggy are not the same

Moonlighting updates: Harsh Goenka says Wipro and Swiggy are not the same/மூன்லைட்டிங்கிற்கு ஆதரவு.. விப்ரோவும் ஸ்விக்கியும் ஒன்றல்ல.. ஹர்ஷ் கோயங்கா பரபர கருத்து!
Story first published: Sunday, September 25, 2022, 20:20 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X