இந்த தீபாவளிக்கு இதுதான் இந்தியாவிலேயே காட்ஸ்லியான ஸ்வீட்.. 1 பவுன் தங்கத்தை விட அதிக விலை!

ஒவ்வொரு தீபாவளி பண்டிகைக்கும் புதிய வகையான ஸ்வீட் அறிமுகம் செய்வதை பல கடைகள் வழக்கமாக கொண்டு இருக்கும் வேளையில், சில பிரபலமான கடைகள் ஒரு படி மேலே சென்று தனது பிராண்ட் மதிப்பையும், புகழையும் அதிகரிக்கும் வண்ணம் காஸ்ட்லியான ஸ்வீட் தயாரிப்பதை தற்போது டிரெண்டாகியுள்ளது.

இன்னும் சொல்லப்போனால் யார் காஸ்ட்லியான ஸ்வீட் தயாரிக்கிறார் என்பதில் பெரும் போட்டியே தற்போது பலகார கடைகள் மத்தியில் உருவாக்கியுள்ளது. இதேபோல் இந்த காஸ்ட்லியான ஸ்வீட்-ஐ வாங்குவிதையம் பெருமையாக கருதும் நிலை மக்கள் மத்தியில் உருவாகியுள்ளதால் ஆடம்பர பொருட்களை வைத்து காஸ்ட்லியான ஸ்வீட் தயாரிப்பது ஒவ்வொரு தீபாவளிக்கும் வர்த்தக மாடலாகவே மாறியுள்ளது.

 இந்த தீபாவளிக்கு இதுதான் இந்தியாவிலேயே காட்ஸ்லியான ஸ்வீட்.. 1 பவுன் தங்கத்தை விட அதிக விலை!

அந்த வகையில் ஜெய்ப்பூரில் உள்ள ஒரு கடை ஒரு கிலோ இனிப்பின் விலை ரூ.1.23 லட்சம் என்ற வகையில் மிகவும் ஆடம்பரமான இனிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் ஜெய்ப்பூர் மற்றும் அதை சுற்றிள்ள பணக்காரர்கள் இதை வாங்குவதிலும், சோஷியல் மீடியா இன்ப்ளூயன்சர்கள் இதை வீடியோ, ரீல்ஸாக பதிவிட்டு வருகின்றனர்.

அஷர்ஃபி (Asharfi) என்று பெயரிடப்பட்டுள்ள இந்த இனிப்பு ஒரு பீஸ் வெறும் 9 கிராம் எடை மட்டுமே உள்ளது, ஆனால் இதன் விலை 1,111 ரூபாய். இந்த இனிப்பை தியோஹார் (Tyohar) என்ற பொட்டிக் இனிப்பு கடையின் உரிமையாளர் அஞ்சலி ஜெயின் தயாரித்துள்ளார்.

பாதாம், தங்க பஸ்பம் அதாவது சாப்பிடக்கூடிய தங்கம் மற்றும் குங்குமப்பூ ஆகியவற்றைக் கொண்டு இந்த இனிப்பு தயாரிக்கப்பட்டு உள்ளதாக கூறும் அஞ்சலி ஜெயின், இந்த இனிப்பின் மேற்புறத்திலும் மெல்லிய தங்கம் பூசப்பட்டு உள்ளது.

வெறும் 9 பீஸ் அடங்கிய ஒரு தீபாவளி ஸ்பெஷல் ஸ்வீட் பாக்ஸ் விலை ரூ.9,999 என தியோஹார் கடை அறிமுகம் செய்துள்ளது. இந்த அஷர்ஃபி ஸ்வீட் 9 கிராம் எடை கொண்ட ஒரு பீஸ் 1,111 ரூபாய் எனில் ஒரு கிலோவுக்கு சுமார் ரூ.1.23 லட்சம் விலை கொண்டது.

இன்று ஒரு பவுன் தங்கத்தின் விலை 1,05,280 ரூபாய் மட்டுமே. இதன் மூலம் தங்கத்தை காட்டிலும் அதிக விலை கொண்ட ஸ்வீட் ஆக உருவெடுத்து இந்தியா முழுக்க டிரெண்டாகியுள்ளது.

மேலும் இந்த இனிப்பை உருவாக்கிய தியோஹார் நிறுவனத்தின் நிறுவனர் அஞ்சலி ஜெயின் கூறுகையில், மன்னர்களின் செல்வம் மற்றும் அவர்களின் மதிப்பை காட்டும் வகையில் தங்க நாணயங்களைப் பரிசளித்த பழங்கால வழக்கத்தை மையமாக கொண்டு காயின் வடிவில் இந்த ஸ்வீட் தயாரிக்கப்பட்டு உள்ளது என கூறினார்.

இதன் மூலம் மக்கள் தங்களுடைய குடும்பத்தினருக்கு இந்த தீபாவளிக்கு தங்க நாணயங்களை பரிசாக அளிப்பதற்குப் பதிலாக, இந்த சாப்பிடக்கூடிய தங்கத்தால் செய்யப்பட்ட இனிப்பை ருசிக்க கொடுக்கலாம் என தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+