2025 ஆம் ஆண்டு டெக் நிறுவனங்களில் வேலை செய்யக்கூடிய ஊழியர்களுக்கு மிக மோசமான ஒரு ஆண்டாக மாறியிருக்கிறது. உலக பொருளாதார சூழல் ,அமெரிக்க பொருளாதார மந்த நிலை , ஏஐ தொழில்நுட்பத்தின் பயன்பாடு அதிகரித்தது என அடுத்தடுத்து பல்வேறு காரணங்களால் டெக் துறையில் பெரிய அளவிலான மாற்றம் ஏற்பட்டிருக்கிறது .
பெரிய பெரிய நிறுவனங்கள் தங்களுடைய வேலைகளை ஏஐ நுட்பத்திற்கு ஏற்ப மாற்றி அமைத்து நிறுவனங்களை மறுக்கட்டமைப்பு செய்து வருகின்றன .அதாவது ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கோடிங், ஹெச்ஆர் உள்ளிட்ட பல்வேறு வேலைகளை நிறுவனங்கள் நிறைவேற்றிக் கொள்கின்றன. அந்த வேலையில் இருந்த மனிதர்கள் வேலையில் இருந்து நீக்கப்பட்டு வருகின்றனர்.

2025 ஆம் ஆண்டில் மட்டும் ஒரு லட்சத்துக்கும் அதிகமானவர்கள் தங்களுடைய வேலையை இழந்திருக்கிறார்கள். உலகின் முன்னணி நிறுவனங்களாக கருதப்படும் அமேசான், மெட்டா ,கூகுள் ,இன்டெல், டிசிஎஸ் ஆகிய அனைத்து நிறுவனங்களுமே இந்த ஊழியர்கள் பணிநீக்க நடவடிக்கையை கையில் எடுத்திருக்கின்றன.
அமேசான்: 2025 ஆம் ஆண்டில் உலகிலேயே அதிகமான ஊழியர்களை பணிநீக்கம் செய்த நிறுவனமாக அமேசான் மாறி இருக்கிறது . சுமார் 30,000 ஊழியர்களை அமேசான் தன்னுடைய நிறுவனத்தில் இருந்து பணிநீக்கம் செய்கிறது. இதில் அதிகபட்சமாக கார்ப்பரேட், ஆப்ரேஷன், டிவைசஸ் மற்றும் ஏடபுள்யூஎஸ் ஆகிய பிரிவுகளில் வேலை செய்தவர்கள் தான் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.
இன்டெல் : நிறுவனம் 24 ஆயிரம் பேரை வேலையில் இருந்து நீக்குகிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் தங்கள் நிறுவனத்தில் வேலை செய்யக்கூடிய ஒரு லட்சம் பேர் என்ற எண்ணிக்கையை இந்த ஆண்டு இறுதிக்குள் 75 ஆயிரம் என குறைப்பதாக நிறுவனம் அறிவித்தது . அமெரிக்கா மட்டுமில்லாமல் ஜெர்மனி, கோஸ்டாரிக்கா நாடுகளில் சேர்ந்த ஊழியர்களும் இதன் மூலம் பாதிக்கப்பட்டிருக்கின்றனர் .
டிசிஎஸ்: இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனமான டிசிஎஸ் 12000 ஊழியர்களை பணிநீக்கம் செய்வதாக ஜூலை மாதம் அறிவித்தது .ஆனால் உண்மையில் அந்த எண்ணிக்கை 20,000ஐ கடந்துள்ளது. செப்டம்பருடன் முடிந்த காலாண்டில் சுமார் 6000 பேரை பணி நீக்கம் செய்திருப்பதாகவும் மீதம் இருப்பவர்கள் அடுத்தடுத்த மாதங்களில் பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என்றும் அறிவித்தது. ஆனால் நிறுவனத்தின் காலாண்டு முடிவுகளில் ஊழியர்களின் மொத்த எண்ணிக்கை பார்க்கும்போது முந்தைய காலாண்டுடன் ஒப்பிடும்போது இந்த காலாண்டில் 19,705 பேரின் எண்ணிக்கை குறைந்திருக்கிறது. குறிப்பாக மிட் லெவல் மற்றும் சீனியர் லெவல் ஊழியர்கள் தான் பாதிக்கப்பட்டிருக்கின்றன.

அசெஞ்சர்: கன்சல்டிங் மற்றும் ஐடி சேவை நிறுவனமான அசெஞ்சர் தங்கள் ஊழியர்களில் பலரை வேலையை விட்டு நீக்குவதாக அறிவித்துள்ளது. குறிப்பாக ஏஐ தொழில்நுட்பத்திற்கு ஏற்ப தகவமைத்துக் கொள்ள முடியாதவர்களை வேலையில் இருந்து நீக்குவதாக தலைமை செயல் அதிகாரியான ஜூலி ஸ்வீட் அறிவித்தார். ஏற்கனவே இந்த நிறுவனத்தின் மொத்த ஊழியர்களின் எண்ணிக்கையில் சுமார் 11 ஆயிரம் பேர் குறைந்து இருக்கின்றனர் இன்னும் பலர் வேலை இருந்து நீக்கப்படுவார்கள் என சொல்லப்படுகிறது.
மைக்ரோசாப்ட்: முன்னணி டெக் நிறுவனமான மைக்ரோசாப்ட் தன்னுடைய மென்பொருள் பொறியாளர் பிரிவில் 4000 பேரை வேலையில் இருந்து நீக்கியிருக்கிறது. இது தவிர மற்ற துறைகளிலும் சுமார் 6000 பேரை வேலையில் இருந்து நீக்குவதாக அறிவித்திருக்கிறது . மொத்தம் பத்தாயிரம் பேர் மைக்ரோசாப்ட் நிறுவனத்திலிருந்து நீக்கப்படுகின்றனர் .
சேல்ஸ் ஃபோர்ஸ்: இந்த நிறுவனத்தின் மொத்த ஊழியர்களில் நான்கு சதவீத பேர் இந்த ஆண்டில் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். கஸ்டமர் சப்போர்ட் பிரிவில் இருந்த 4000 பேரை பணி நீக்கம் செய்திருக்கிறது . அந்த பிரிவில் சம்பந்தப்பட்ட ஏஐ தொழில்நுட்பங்களை இணைத்துக் கொண்டதால் மனிதர்களை அந்த வேலையில் இருந்து நீக்கி இருக்கிறது.
சிஸ்கோ: தங்கள் ஊழியர்களில் ஐந்து சதவீதம் பேர் அதாவது 4250 பேரை வேலையில் இருந்து நீக்கி நிறுவனத்தை மறுக்கட்டமைப்பு செய்வதாக தெரிவித்திருக்கிறது. செயற்கை நுண்ணறிவு, சைபர் செக்யூரிட்டி , கிளவுட் பிரிவுகளில் கவனம் செலுத்த போவதாகவும் இதன் காரணமாக நிறுவனத்தின் ஊழியர்களின் எண்ணிக்கையை மறுக்கட்டமைப்பு செய்வதாகவும் தெரிவித்துள்ளது .
கூகுள்: தங்களுடைய பல்வேறு பிரிவுகளிலும் ஊழியர்களை வேகமாக பணியில் இருந்து நீக்கி இருக்கிறது . டிவைசஸ், குரோம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வேலை செய்து வந்த சுமார் நூற்றுக்கணக்கான ஊழியர்களை வேலையில் இருந்து நீக்கி இருக்கிறது .
மெட்டா: பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா ஏஐ பிரிவில் வேலை செய்வதற்காக தேடித் தேடி ஆட்களை வேலைக்கு எடுத்தது. ஆனால் அவர்களையே தற்போது இந்த நிறுவனம் வேலை இருந்து நீக்கி இருக்கிறது . ஏஐ பிரிவில் சுமார் 600 பேரை பணிநீக்கம் செய்கிறது.
யுபிஎஸ்: அமெரிக்காவை சேர்ந்த யுபிஎஸ் எனப்படும் யுனைடெட் பார்சல் சர்வீஸ் நிறுவனம் 48 ஆயிரம் பேரை வேலையில் இருந்து நீக்குவதாக அறிவித்திருக்கிறது . இவர்கள் 34,000 பேர் டெலிவரி டிரைவர்களாக வேலை செய்கின்றனர், 14000 பேர் மேலாண்மை பதவிகளில் இருப்பவர்கள் .
ஃபோர்டு: முன்னணி வாகன தயாரிப்பு நிறுவனமான ஃபோர்டு 13,000 பேரை வேலையில் இருந்து நீக்குவதாக அறிவித்திருக்கிறது. அதேபோல பிடபிள்யூசி நிறுவனம் 5600 பேரையும் , பாராமவுண்ட் நிறுவனம் 2000 பேரையும் வேலையில் இருந்து நீக்குவதாக அறிவித்திருக்கிறது.
More From GoodReturns

நல்லா வேலைசெஞ்சா மட்டும் போதாது! - ஆரக்கிள் பணிநீக்கங்களுக்கு மத்தியில் ஒரு எச்சரிக்கை!

பெங்களூரு IT ஊழியர்களுக்கு ஷாக்!80% பேர் வேலையை இழக்கப்போகிறார்களா? AI-யால் இன்னும் என்ன ஆகுமோ?

எத்தனை AI வந்தாலும் இந்த வேலையை மனுஷங்க தான் செய்ய முடியும்!! ஒரு மணி நேரத்துக்கு ரூ.900 சம்பளம்!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!



Click it and Unblock the Notifications