10,000க்கும் அதிகமான ஊழியர்கள் ராஜினாமா.. Cognizant-க்கா இப்படி ஒரு நிலைமை?

காக்னிசன்ட் டெக்னாலஜிஸ் நிறுவனத்தில் கடந்த ஓராண்டு காலத்தில் 10,000க்கும் அதிகமான ஊழியர்கள் வேலையை ராஜினாமா செய்திருப்பது தெரியவந்துள்ளது.

தி பைனான்சியல் எக்ஸ்பிரஸ் வெளியிட்டுள்ள செய்தியின் படி அமெரிக்காவை தலைமை இடமாக கொண்டு செயல்பட்டு வரும் காக்னிசன்ட் டெக்னாலஜி நிறுவனம் டிசம்பருடன் முடிவடைந்த காலாண்டில் தங்கள் நிறுவனத்தில் இருந்து வெளியேறிய ஊழியர்களின் எண்ணிக்கை 10,700 என தெரிவித்துள்ளது.இது முந்தைய காலாண்டை விட 3300 குறைவாகும். அதேவேளையில் காக்னிசன்ட் நிறுவனம் தங்கள் ஊழியர்களின் எண்ணிக்கையை உயர்த்துவோம் என தெரிவித்துள்ளது.

10,000க்கும் அதிகமான ஊழியர்கள் ராஜினாமா.. Cognizant-க்கா இப்படி ஒரு நிலைமை?

இந்த ஆண்டு முழுவதுமே காக்னிசன்ட் நிறுவனம் தொடர்ந்து புதிய ஊழியர்களை பணிக்கு எடுக்கும் என தலைமை நிதி அதிகாரி கூறியுள்ளார். டிசம்பருடன் முடிவடைந்த காலாண்டில் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களின் மொத்த எண்ணிக்கை 3, 36,800 ஆக இருக்கிறது. கடந்த 12 மாதம் என்ற அளவில் ஒப்பீடு செய்து பார்க்கும்போது காக்னிசன்ட் நிறுவனத்தில் இருந்து ராஜினாமா செய்தவர்களின் எண்ணிக்கை 15 . 9 சதவீதம் என இருக்கிறது.

காக்னிசன்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான ரவிக்குமார் தங்கள் நிறுவனத்திலிருந்து இதற்கு முன்பு வெளியேறிய ஊழியர்கள் பலரும் மீண்டும் நிறுவனத்திற்கு திரும்பி வருவதாக கூறியுள்ளார். 2024 ஆம் ஆண்டில் மட்டும் இதற்கு முன்பு காக்னிசன்ட் நிறுவனத்திலிருந்து வெளியேறிய சுமார் 13,000 ஊழியர்கள் மீண்டும் பணியில் சேர்ந்துள்ளனர் என குறிப்பிட்டார். மேலும் 10,000 பேர் மீண்டும் காக்னிசன்ட்டில் இணைய வேண்டும் என ஆர்வத்துடன் இருப்பதாக கூறுகிறார்.

இதன் மூலம் தங்களுடைய நிறுவனம் திறமையான நபர்களை தக்க வைத்து கொள்வதில் சிறந்து விளங்குகிறது என்பது தெரிய வந்துள்ளதாக ரவிக்குமார் தெரிவித்துள்ளார். காக்னிசன்ட் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களின் எண்ணிக்கை சுருங்கி இருக்கும் நிலையில் அதன் போட்டி நிறுவனமான அசெஞ்சர் நிறுவனத்தில் தொடர்ந்து புதிதாக ஊழியர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர்.

2025 ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் அசெஞ்சர் நிறுவனம் 24,697 ஊழியர்களுக்கு வேலை வாய்ப்பினை வழங்கியது . இதன் மூலம் இந்த நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களின் எண்ணிக்கை 7,99,000 என உயர்ந்துள்ளது . அதேவேளையில் இந்தியாவை சேர்ந்த முன்னணி ஐடி நிறுவனங்களான டிசிஎஸ், இன்போசிஸ், ஹெச்சிஎல், விப்ரோ மற்றும் டெக் மகேந்திரா ஆகியவை 2025 நிதி ஆண்டின் மூன்றாவது காலாண்டில் மொத்தம் 2,587 ஊழியர்களை குறைத்துள்ளன.

காக்னிசன்ட் நிறுவனம் தங்கள் நிறுவனத்தில் ஊழியர்களின் எண்ணிக்கை குறைந்தாலும் வருவாய் விகிதம் 3.5 லிருந்து 6 சதவீதமாக உயரும் என நம்பிக்கை தெரிவித்துள்ளது.

story written by: Devika

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+