அமெரிக்காவில் அதிபர் டிரம்ப் தலைமையிலான நிர்வாகம் அரசு ஊழியர்களை தானாகவே பணியில் இருந்து விலகும் படி அறிவித்துள்ள நிலையில் இந்த நடவடிக்கைகளை கண்டித்து சுமார் 20,000 அரசு ஊழியர்கள் வேலையை ராஜினாமா செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றிருக்கும் டொனால்ட் டிரம்ப் அரசு நிர்வாகத்தை பெரிய அளவில் சீரமைக்க இருப்பதாக அறிவித்துள்ளார். இதற்காக அரசு செயல்திறன் துறை என்ற ஒரு துறையையும் அவர் உருவாக்கியிருக்கிறார். இதற்கு எலான் மஸ்க் தலைவராக பொறுப்பேற்றுள்ளார். அரசு செயல்திறனை அதிகரிப்பதற்காக பல்வேறு மாற்றங்களை இவர் கொண்டு வர இருக்கிறார்.

இந்நிலையில் அதிபர் டிரம்ப் தலைமையிலான நிர்வாகம் ஊழியர்கள் தாங்களாகவே வேலை விட்டு செல்வதற்கு ஒரு வாய்ப்பு வழங்குவதாக அறிவிப்பு வெளியிட்டது. இவ்வாறு வேலையை விட்டு செல்லக்கூடிய ஊழியர்களுக்கு 8 மாதங்களுக்கான சம்பளமும் மற்றும் பிற பலன்களும் வழங்கப்படும் என டிரம்ப் நிர்வாகம் கூறியுள்ளது. இந்த ஊழியர்கள் 8 மாதங்களுக்கு அலுவலகம் வர தேவையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
டிரம்பை பொறுத்தவரை அரசு ஊழியர்களின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என திட்டமிட்டுள்ளார். அதன் ஒரு பகுதியாக தான் ஊழியர்கள் தானாகவே வேலையை விட்டு நிற்கும்படி அறிவுறுத்தியுள்ளார். இந்த நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள அமெரிக்க அரசு ஊழியர்கள் சங்கம் டிரம்ப் நிர்வாகம் வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பு அரசின் சட்ட திட்டங்களுக்கு முற்றிலும் எதிரானது என கூறுகின்றனர். நீதிமன்றத்திலும் அவர்கள் வழக்கு தொடர்ந்து உள்ளனர்.
அதேவேளையில் தங்களுடைய எதிர்ப்பை பதிவு செய்யும் விதமாக சுமார் 20,000 அரசு ஊழியர்கள் வேலையை ராஜினாமா செய்ய இருப்பதாகவும் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். இவ்வாறு ஊழியர்களை வேலையை விட்டு போகச் சொல்வதன் மூலம் அரசு வேலைகள் பெருமளவில் பாதிக்கப்படும் என கூறுகின்றனர்.
எந்த ஊழியரும் கட்டாயம் பணியிலிருந்து வெளியேறவேண்டும் என நாங்கள் கட்டாயப்படுத்தவில்லை என விளக்கம் தந்துள்ள டிரம்ப் நிர்வாகம், இது முற்றிலும் ஊழியர்களின் சொந்த முடிவாக மட்டுமே இருக்கும் என்று தெரிவித்துள்ளது.
இவ்வாறு வெளியேற நினைக்கும் ஊழியர்களுக்கு அரசு நிதி ஆதரவை தரும் வகையில் தான் 8 மாதத்திற்கான சம்பளத்தை வழங்குகிறோம் என்று டிரம்ப் நிர்வாகம் கூறுகிறது. இதற்காக வியாழக்கிழமை வரை அரசு ஊழியர்களுக்கு டிரம்ப் நிர்வாகம் கால அவகாசம் வழங்கியுள்ளது. இந்த திட்டத்தில் பொது பாதுகாப்பு ஊழியர்கள் மற்றும் ஏர் டிராஃபிக் கண்ட்ரோலர்கள் இடம்பெற மாற்ற மாட்டார்கள் என டிரம்ப் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கடந்த வாரம் தான் டிரம்ப் நிர்வாகம் அரசு ஊழியர்கள் செயல் திறனே இல்லாமல் இருக்கின்றனர் என குற்றம் சாட்டியது. இவ்வாறு சரியாக வேலை செய்யாத ஊழியர்களை பணியில் இருந்து நீக்க வேண்டும் என கூறியது.


Click it and Unblock the Notifications