அமெரிக்க நிறுவனத்திடம் சிக்கி இருக்கும் 60 கோடி இந்தியர்கள்! CIBILக்கு பின் இவ்வளவு பெரிய கதை இருக்கா?

நாடாளுமன்றத்தில் சிவகங்கை தொகுதி எம்பி கார்த்தி சிதம்பரம் சில மாதங்களுக்கு முன் சிபில் ஸ்கோர் கணக்கிடுவதில் வெளிப்படைத்தன்மை இல்லை என குற்றம் சாட்டியுள்ளார். இது மிகப்பெரிய விவாதமாக மாறிய நிலையில், ஒரு அமெரிக்க நிறுவனம் எப்படி இந்தியாவுக்குள் வந்து 60 மக்களின் நிதி ஆதாரங்களை தனது கைப்பற்றியது தெரியுமா..?

சிபில் ஸ்கோர் இந்தியாவில் ஒவ்வொரு நபரின் ஃபைனான்சியல் ரிப்போர்ட் கார்டு இது. வங்கிகள் உங்களுக்கு கடன் வழங்கலாமா வேண்டாமா என்ற முடிவை இந்த சிபில் ஸ்கோரை அடிப்படையாகக் கொண்டுதான் எடுக்கின்றன. அதாவது உங்களுக்கு கடன் கொடுத்தால் நீங்கள் அந்த கடனை திரும்ப செலுத்துவீர்களா இல்லையா நீங்கள் ஒரு நம்பிக்கையான நபரா என்பதை தீர்மானிக்கும் ஒரு காரணி தான் சிபில் ஸ்கோர். அண்மையில் கூட மத்திய அரசு முதன்முறை கடன் பெற விண்ணப்பம் செய்பவர்களுக்கு குறைந்தபட்ச சிபில் ஸ்கோர் அவசியமில்லை என வங்கிகளுக்கு அறிவுறுத்தி இருந்தது.

அமெரிக்க நிறுவனத்திடம் சிக்கி இருக்கும் 60 கோடி இந்தியர்கள்! CIBILக்கு பின் பெரிய கதையே இருக்கு!

சிபில் ஸ்கோர்: நீங்கள் ஒரு போனுக்கு இஎம்ஐ வாங்கினாலும் சரி , வாகன கடன் வாங்க சென்றாலும் சரி, உங்கள் கனவு இல்லத்திற்காக வீட்டு கடனுக்கு விண்ணப்பம் செய்தாலும் சரி உங்களுடைய சம்பளம் எவ்வளவு , உங்களுடைய பின்னணி என்ன என்பதை எல்லாம் தாண்டி முதலில் வங்கிகளும் நிதி நிறுவனங்களும் கவனிப்பது உங்களுடைய சிபில் ஸ்கோர் எவ்வளவு என்பதுதான். இந்த சிபில் ஸ்கோர் சரியாக இருந்தால் உங்களுக்கு நீங்கள் நினைத்த கடன் கிடைக்கும் வட்டியும் கணிசமான அளவு குறைய வாய்ப்புள்ளது.

அமெரிக்க நிறுவனத்திடம் சிக்கி இருக்கும் 60 கோடி இந்தியர்கள்! CIBILக்கு பின் பெரிய கதையே இருக்கு!

எப்போது முதல் நடைமுறை: ஒருவேளை உங்களின் சிபில் ஸ்கோர் குறைவாக இருந்தால் அதிக வட்டியில் கடன் கிடைக்கும் மேலும் நீங்கள் எதிர்பார்த்த மொத்த தொகையும் கடனாக கிடைக்காமல் போவதற்கும் வாய்ப்பு உள்ளது. சில சமயங்களில் கடனே கூட கிடைக்காமல் போகலாம். 2000ஆம் ஆண்டுக்கு முன்பு வரை இந்தியாவில் சிபில் ஸ்கோர் என்ற ஒரு அமைப்பே இல்லை.

ஏன் சிபில் வந்தது?: வங்கிகளில் ஒரு பெரிய நபரின் பரிந்துரை அல்லது நாம் அடமானமாக வைக்கும் பொருட்கள் ஆகியவற்றின் அடிப்படையில் தான் கடன்களை வழங்கின. கடன் மோசடிகள், கடன் பெற்றவர்கள் திரும்ப செலுத்தாமல் தப்பி செல்வது என்பது அவற்றை டிராக் செய்வது வங்கிகளுக்கு சிரமமாக இருந்தது. அந்த சமயத்தில் ரிசர்வ் வங்கி ஒரு கமிட்டியை அமைத்தது. அந்த கமிட்டி அமெரிக்காவில் தேசிய அளவிலான கடன் அறிக்கை என்ற நடைமுறை இருக்கிறது அதே போன்ற ஒரு கடன் அறிக்கை நடைமுறையை கொண்டு வர பரிந்துரை செய்தது.

அமெரிக்க நிறுவனத்திடம் சிக்கி இருக்கும் 60 கோடி இந்தியர்கள்! CIBILக்கு பின் பெரிய கதையே இருக்கு!

டிரான்ஸ் யூனியன்: அந்த சமயத்தில் இந்திய வங்கிகள் டிஜிட்டல்மயமாகவில்லை, இந்தியாவிடம் போதிய தொழில்நுட்ப வசதிகளும் கிடையாது. எனவே அமெரிக்காவை சேர்ந்த டிரான்ஸ் யூனியன் என்ற கடன் அறிக்கை அமைப்பை இதற்குள் கொண்டு வந்தனர். இதன்படி டிரான்ஸ் யூனியன் நிறுவனம் இந்தியாவில் கடன் அறிக்கைகளுக்கான நிபுணத்துவத்தையும் தொழில்நுட்பத்தையும் வழங்கியது. இந்நிறுவனம் டிரான்ஸ் யூனியன் சிபில் என்ற நிறுவனத்தை 2000ஆம் ஆண்டு தொடங்கியது.

கடன் தரவுகள்: அப்படி தான் சிபில் என்ற வார்த்தையே இந்தியாவில் பயன்பாட்டுக்கு வந்தது. இந்தியாவில் செயல்படும் வங்கிகள் தங்களிடம் இருக்கும் கடன் சம்பந்தப்பட்ட தரவுகளை சிபிலிடம் வழங்கின. அப்போது தொடங்கி இந்தியாவில் வார்த்தைகளின் அடிப்படையில் இல்லாமல் எண்களின் அடிப்படையில் ஒரு நபர் நம்பகத்தன்மை வாய்ந்தவரா இல்லையா என்பதை நாம் வங்கிகள் கண்டறிந்து கடன் வழங்க தொடங்கின. இது மோசடிகளை தடுக்க உதவி இருக்கிறது.

60 கோடி இந்தியர்கள்: ஆனால் டிரான்ஸ்யூனியன் நிறுவனம் படிப்படியாக வளர்ந்து இப்போது இந்தியாவின் மிகப்பெரிய கடன் அறிக்கை நிறுவனமாக செயல்பட்டு வருகிறது. 60 கோடி இந்தியர்கள் 3 கோடிக்கும் அதிகமான தொழில்நிறுவனங்களின் கடன் தரவுகள் முழுவதும் டிரான்ஸ் யூனியன் நிறுவனத்தின் வசம் தான் இருக்கிறது. அதாவது 60 கோடி இந்தியர்கள் நம்பகத்தன்மை வாய்ந்தவர்களா இல்லையா என்ற அறிக்கை தரும் பொறுப்பை இந்நிறுவனம் வைத்திருக்கிறது.

அமெரிக்க நிறுவனத்திடம் சிக்கி இருக்கும் 60 கோடி இந்தியர்கள்! CIBILக்கு பின் பெரிய கதையே இருக்கு!

அமெரிக்க நிறுவனம்: அமெரிக்காவை தலைமை இடமாகக் கொண்டு இந்த நிறுவனம் செயல்பட்டு வருகிறது. நாம் வாங்கிய கடனில் ஒரு தவணை தவறினாலும் சிபில் ஸ்கோர் குறையும், சமரச ஒப்பந்தம் போட்டு சிறிதளவு வட்டி சலுகையுடன் கடனை அடைத்தாலும் சிபில் ஸ்கோர் குறையும், கடன் அட்டைகளில் 30 சதவீதத்திற்கு மேல் பயன்படுத்தினால் சிபில் ஸ்கோர் குறையும், இதுவரை க்டனே வாங்காத நபர்களுக்கும் சிபில் ஸ்கோர் குறைவாக தான் காட்டும். இந்தியர்களின் நிதி சார்ந்த தரவுகளை டிரான்ஸ் யூனியன் என்ற அமெரிக்க நிறுவனம் கையாள்வது தகவல் கசிவுக்கு வித்திடுமா என்ற கேள்வி எழுகிறது.

பங்கு இருப்பு: பிப்ரவரி 2024 நிலவரப்படி, ட்ரான்ஸ்யூனியன் தனது துணை நிறுவனமான ட்ரான்ஸ்யூனியன் சிபில் (முன்பு கிரெடிட் இன்ஃபர்மேஷன் பியூரோ (இந்தியா) லிமிடெட் என்று அழைக்கப்பட்டது) நிறுவனத்தில் 92.1% பங்குகளை கொண்டிருக்கிறது. இந்த பெரும்பான்மை பங்குகளை பல வருடங்களில் மெல்ல மெல்ல ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, ஐசிஐசிஐ வங்கி, பேங்க் ஆஃப் பரோடா மற்றும் சென்ட்ரல் வங்கிகளிடம் இருந்து வாங்கியது மூலம் தற்போது பெரும் ஆதிக்கம் செலுத்துகிறது.

அமெரிக்க நிறுவனத்திடம் சிக்கி இருக்கும் 60 கோடி இந்தியர்கள்! CIBILக்கு பின் பெரிய கதையே இருக்கு!

ரிசர்வ் வங்கி கட்டுப்பாடு: ரிசர்வ் வங்கி டிரான்ஸ் யூனியன் சிபில் நிறுவனத்திற்கு சில கட்டுப்பாடுகளையும் விதித்து இருக்கிறது. இந்தியாவை சேர்ந்த கடன்கள் தொடர்பான தரவுகள் அனைத்தையும் இந்தியாவிற்குள் தான் சேமித்து வைத்து பராமரிக்க வேண்டும், ஒரு நபர் கடனுக்காக விண்ணப்பம் செய்யும்போது மட்டும் தான் அந்த நபரின் கடன் சம்பந்தப்பட்ட விவரங்களை எடுத்து ஆய்வு அறிக்கை தயாரிக்க வேண்டும். எந்த ஒரு அங்கீகரிக்கப்படாத அமைப்பிடமும் நபரிடமும் இந்த தரவுகளை பகிரக்கூடாது, சைபர் பாதுகாப்பு தர நிர்ணயங்களை கடுமையாக பின்பற்ற வேண்டும் என கூறியுள்ளது.

கடன் அறிக்கை: இந்தியாவில் கடன் அறிக்கைகளை தயார் செய்து வழங்க மேலும் சில வந்துவிட்டன இருந்தாலும் சிபில் நிறுவனம் தான் இத்துறையில் ஆதிக்கம் செலுத்துகிறது. வலுவான தொழில்நுட்ப கட்டமைப்பு இதற்கு முக்கிய காரணம். கிட்டத்தட்ட 7500 வங்கிகள், வங்கி சாரா நிதி நிறுவனங்கள் மற்றும் ஃபின்டெக் நிறுவனங்கள் தங்களின் கடன் சம்பந்தப்பட்ட தரவுகளை சிபில் அமைப்பிடம் வழங்கி வருகின்றன.

வழக்கு: சிபில் ஸ்கோர் அமைப்பில் பல்வேறு குளறுபடிகள் இருப்பதாக பலரும் கூறுவது உண்டு. சில சமயங்களில் நீங்கள் கடனை சரியான நேரத்தில் செலுத்தி இருந்தாலும் வங்கி அதனை அப்டேட் செய்யும் வரை உங்களுடைய சிபில் ஸ்கோர் என்பது மோசமாகவே காட்டும், சிபிலிடம் நீங்கள் நேரடியாக விண்ணப்பம் செய்து அதனை மாற்ற முடியாது. ஏற்கனவே அமெரிக்க நிறுவனத்திடம் இந்தியர்களின் தரவுகளை ஒப்படைத்தது சரியா என கேட்டு ஒரு வழக்கும் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது .

தகவல் கசியுமா?: 2017 ஆம் ஆண்டு அமெரிக்காவை சேர்ந்த ஒரு கடன் அறிக்கை நிறுவனம் ஹேக் செய்யப்பட்டு 14 கோடி மக்களின் தரவுகள் கசிந்தன . அதே போல சிபிலின் தகவல்கள் ஹேக் செய்யப்பட்டால் 60 கோடி இந்தியர்களின் தரவுகள் கசியும் என்ற அச்சம் நிலவுகிறது. ஏன் இந்திய அரசாங்கமே சிபில் போன்ற ஒரு அமைப்பை ஏற்படுத்தலாமே ஆதாரை உருவாக்க தெரிந்த நமக்கு சிபில் போன்ற அமைப்பை உருவாக்க முடியாதா என்ற கேள்வி எழுகிறது. இதற்காக தான் ரிசர்வ் வங்கி பப்ளிக் கிரெடிட் ரெஜிஸ்ட்ரி என்ற ஒரு அமைப்பைக் கொண்டு வருவதற்கு தீவிரமாக இருக்கிறது. இது செயல்பாட்டுக்கு வந்தால் நம் கடன் தரவுகள் தனியார் அமைப்புகளிடம் இருந்து அரசிடம் சென்று விடுமா என்பதை நாம் காத்திருந்து தான் பார்க்க வேண்டும். ஆனால் இப்போதைக்கு நம் குடுமி அமெரிக்க நிறுவனத்திடம் சிக்கி இருக்கிறது என்பதை மறுப்பதற்கு இல்லை.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+