பங்கு வர்த்தகத்தில் ஈடுபட்டால் நிலையான வருமானம் ஒவ்வொரு மாதமும் கிடைக்கும் என்பது பலரது அனுபவமாக இருக்கும்.
ஆனால் சிலசமயம் ஜாக்பாட் அடிப்பது போல் ஒரு சில நாட்களில் பணமழை கொட்டும் அளவிற்கு ஒருசில பங்குகள் ஏராளமான வருமானத்தை தரும்.
அந்த வகையில் கடந்த 5 நாட்களில் 90 சதவீதத்துக்கும் மேல் முதலீட்டாளர்களுக்கு பணமழை கூடிய வகையில் வருமானம் கொடுத்த 5 பங்குகளை தற்போது பார்ப்போம்.
ஜெனித் எக்ஸ்போர்ட்ஸ்: 91.54 சதவீதம் ரிட்டர்ன்
ஜெனித் எக்ஸ்போர்ட்ஸ் என்பது ஒரு ஸ்மால்கேப் நிறுவனம். இதன் சந்தை மதிப்பு தற்போது ரூ.81.27 கோடி என்ற நிலையில் கடந்த வாரம் இதன் பங்கு 91.54 சதவீதம் உயர்ந்தது. இந்த பங்கு 5 நாட்களில் ரூ.76.80ல் இருந்து ரூ.147.10 ஆக உயர்ந்தது என்பதும் கடந்த வெள்ளியன்று, 10 சதவீதம் உயர்ந்து ரூ.150.60 ஆக முடிந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. மொத்தத்தில் கடந்த வாரம் மட்டும் முதலீட்டாளர்களுக்கு 91.54 சதவீத வருமானம் கொடுத்தது.
பான் எலக்ட்ரானிக்ஸ்: 59.15 சதவீதம் ரிட்டர்ன்
பான் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனம் கடந்த வாரத்தில் முதலீட்டாளர்களுக்கு அதிக லாபத்தை ஈட்டி கொடுத்துள்ளது. கடந்த வார பங்கு வர்த்தகத்தில் இந்நிறுவனத்தின் பங்கு ரூ.28.40ல் இருந்து ரூ.45.20 ஆக உயர்ந்ததால் முதலீட்டாளர்களுக்கு 59.15 சதவீதம் ரிட்டர்ன் கிடைத்தது.
யுஎச் ஜவேரி: 48.85 சதவீதம் ரிட்டர்ன்
யுஎச் ஜவேரி என்ற நிறுவனத்தின் பங்கும் அதன் முதலீட்டாளர்களுக்கு பெரும் வருவாயை அள்ளி கொடுத்தது. கடந்த வாரம் இந்நிறுவனத்தின் பங்கு 48.85 சதவீத லாபத்தை கொடுத்தது. கடந்த வாரம் யுஎச் ஜவேரியின் பங்கு ரூ.36.95ல் இருந்து ரூ.55 ஆக உயர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்டான்பாக்ஸ் இந்தியா: 46.54 சதவீதம் ரிட்டர்ன்
ஸ்டான்பாக்ஸ் இந்தியா நிறுவனம் கடந்த வாரம் மிகப்பெரிய லாபம் கொடுத்ததால் இந்நிறுவனத்தில் முதலீடு செய்தவர்கள் இன்ப அதிரச்சி அடைந்தனர். கடந்த வாரம் ஸ்டான்பாக்ஸ் இந்தியாவின் பங்கு ரூ.10.55ல் இருந்து ரூ.15.46 ஆக உயர்ந்தது. இதன் மூலம் முதலீட்டாளர்களுக்கு 46.54 சதவீதம் லாபம் கிடைத்தது.
அட்வான்ஸ் சிண்டாக்ஸ்: 46.53 சதவீதம் ரிட்டர்ன்
அட்வான்ஸ் சிண்டாக்ஸ் நிறுவனத்தின் பங்கு கடந்த வாரம் முதலீட்டாளர்களுக்கு ஜாக்பாட் அடித்து கொடுத்தது. கடந்த வாரம் இந்நிறுவனத்தின் பங்கு ரூ.10.94ல் இருந்து ரூ.16.03 ஆக உயர்ந்தது. இதனால் முதலீட்டாளர்களுக்கு 46.53 சதவீதம் லாபம் கிடைத்தது.
நிபுணர்களின் ஆலோசனை
மேற்கண்ட ஐந்து நிறுவனங்கள் கடந்த வாரம் அதிக ரிட்டர்ன்களை கொடுத்து இருந்தாலும் இதுபோன்ற நிறுவனங்களில் முதலீடு செய்வதற்கு முன் நிபுணர்களின் ஆலோசனையை பெற்று கொள்வது நலம்


Click it and Unblock the Notifications