உலகின் முன்னணி கிரெடிட் ரேட்டிங் நிறுவனமான பின்ச் ரேட்டிங்க்ஸ் நிறுவனம் உலகின் மிகப்பெரிய வல்லரசு நாடான அமெரிக்காவின் கிரெடிட் ரேட்டிங்-ஐ AAA அளவில் இருந்து AA+ ரேட்டிங் உடன் ஸ்டேபிள் அவுட்லுக் கொடுத்தது மூலம் முதலீட்டு சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இதேபோல் 2011 ஆம் ஆண்டில் S&P அமெரிக்காவின் கிரெடிட் ரேட்டிங்-ஐ AAA இருந்து AA+ ஆக குறைத்து negative outlook கொடுத்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் அமெரிக்காவின் மிகப்பெரிய முதலீட்டு சேவை நிறுவனமான மார்கன் ஸ்டான்லி இந்திய சந்தைகளின் தரத்தை Equal Weight என்பதில் இருந்து OverWeight ஆக உயர்த்தியுள்ளது. இது இந்திய சந்தைக்கு மிகவும் சாதகமான விஷயமாக இருந்தாலும் இந்த சூழ்நிலையில் மோர்கன் ஸ்டான்லி ரேட்டிங்-ஐ வைத்து வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்க முடியுமா என்பது பெரும் சந்தேகம். ஆனால் குறுகிய கால அடிப்படையில் சிறப்பாக பலன் அளிக்கும்.

மோர்கன் ஸ்டான்லி இந்தியாவின் ரேட்டிங்-ஐ உயர்த்திவிட்டு, மறுமுனையில் சீனா-வின் ரேட்டிங்-ஐ OverWeight-ல் இருந்து Equal Weight ஆக குறைத்துள்ளது. இதன் மூலம் வளரும் நாடுகள் சந்தையில் மிகவும் விருப்பத்தக்க சந்தையாக இந்தியா 6வது இடத்தில் இருந்து முதல் இடத்திற்கு உயர்ந்துள்ளது.

மோர்கன் ஸ்டான்லி இந்தியாவின் ரேட்டிங்-ஐ உயர்த்த முக்கியமான காரணம் கடந்த சில மாதங்களாக அன்னிய முதலீட்டின் வருகை, மேக்ரொ பொருளாதாரத்தின் நிலைதன்மை, சாதகமான காலாண்டு முடிவுகள் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த ரேட்டிங் கொடுக்கப்பட்டு உள்ளது.

இதைவிட முக்கியமாக சீனாவின் பொருளாதார, வர்த்தக நிலைமை தற்போது மிகவும் மோசமாக உள்ளது. உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் பெரும் பாதிப்பை எதிர்கொண்டு வருவதை பார்க்கும் போதும் இந்தியாவின் வர்த்தகம் மற்றும் உற்பத்தி சூழல் சிறப்பாக உள்ளது. இதனை மையமாக கொண்டும் சீன-வின் ரேட்டிங்-ஐ குறைத்து இந்தியாவின் ரேட்டிங்-ஐ உயர்த்தியுள்ளது.


Click it and Unblock the Notifications