இந்திய ரிசர்வ் வங்கி இந்த மாத இறுதியில் தன்னுடைய நிதி கொள்கை கூட்டத்தை நடத்த இருக்கிறது. ஏற்கனவே இந்த ஆண்டில் மட்டும் நான்கு நிதிக் கொள்கை கூட்டம் நடந்து முடிந்திருக்கிறது.
பணவீக்க விகிதம், விலைவாசி உயர்வு, சர்வதேச பொருளாதார சூழல் உள்ளிட்டவற்றை எல்லாம் கவனத்தில் கொண்டு இந்திய ரிசர்வ் வங்கி 2025 ஆம் ஆண்டு தொடக்கம் முதல் தற்போது வரை ரெப்போ வட்டி விகிதத்தை 1 சதவீதம் வரை குறைத்திருக்கிறது. இதன் மூலம் நம்முடைய வீட்டுக் கடன் , வாகன கடன்களுக்கான வட்டியும் ஒரு சதவீதம் வரை குறைந்து இருக்கிறது. இதனால் நாம் செலுத்தும் இஎம்ஐ தொகையிலும் பெரிய சேமிப்பும் உண்டாகி இருக்கிறது.

இத்தகைய சூழலில் தான் இந்த மாத இறுதியில் மீண்டும் ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை கூட்டம் நடைபெற இருக்கிறது. செப்டம்பர் 29 முதல் அக்டோபர் 1ஆம் தேதி வரை ரிசர்வ் வங்கியின் கூட்டம் நடைபெறுகிறது. இந்த முறை வட்டி குறைப்பு நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. அதற்கு சாதகமான சூழலே நிலவுவதாக மார்கன் ஸ்டான்லி அறிக்கை வெளியிட்டுள்ளது.
இந்தியாவின் நுகர்வோர் விலை குறியீடு 2026 ஆம் நிதி ஆண்டில் 2.4 சதவீதமாக நீடிக்கும் என மார்கன் ஸ்டான்லி அறிக்கை வெளியிட்டிருக்கிறது . இது தவிர மத்திய அரசு கொண்டுவரக்கூடிய ஜிஎஸ்டி வரி சீர்திருத்தம் உள்ளிட்டவை பல்வேறு பொருட்களின் விலையை குறைக்கும் என அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது . பல்வேறு சாதகமான சூழல்கள் இருப்பதால் ரிசர்வ் வங்கி எதிர் வரக்கூடிய நிதிக் கொள்கை குழு கூட்டத்தில் ரெப்போ வட்டி விகிதத்தை 25 அடிப்படை புள்ளிகள் வரை குறைக்கும் வாய்ப்பு இருப்பதாக தெரிவித்திருக்கிறது.
உணவுப் பொருட்களின் விலை குறைவு , வேளாண் உற்பத்தி அதிகரிப்பு , ஜிஎஸ்டி வரி சீர்திருத்தம் ஆகிய மூன்றும் பண வீக்கம் குறைவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தி இருப்பதாக தெரிவித்து இருக்கிறது. பருவமழையும் சாதகமாக இருப்பதால் இப்படி ஒரு நம்பிக்கையை தெரிவித்துள்ளது. தொடர்ந்து 7ஆவது மாதமாக ஹெட்லைன் சிபிஐ 4 சதவீதத்திற்கும் கீழ்தான் இருக்கிறது. இது உணவுப் பொருட்களின் விலை குறைவதையே காட்டுவதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது.
அதேபோல அடிப்படை பணவீக்கமும் நான்கு சதவீதத்திற்கும் குறைவாகவே இருக்கிறது . தற்போது 3.1 சதவீதம் என்ற அளவிலேயே நீடிப்பதால் இது மேற்கொண்டு ரிசர்வ் வங்கி வட்டி குறைப்பு நடவடிக்கை எடுப்பதற்கான சாதகத்தை ஏற்படுத்தி இருப்பதாக மார்கன் ஸ்டான்லி அறிக்கை கூறுகிறது.
அமெரிக்க மத்திய வங்கியும் வட்டிகுறைப்பு நடவடிக்கையை அறிவிக்கும் என்பதால் அதனையே ரிசர்வ் வங்கியும் பின் தொடர வாய்ப்புள்ளது. எனவே ரெப்போ வட்டி விகிதம் குறைந்தால் நம்முடைய வீடு மற்றும் வாகன கடன்களுக்கான இஎம்ஐ தொகையும் குறைந்து நமக்கு கூடுதல் சேமிப்பை ஏற்படுத்தி தரும்.
More From GoodReturns

அட்சய திருதியை நாளில் தங்கம் விலை எப்படி இருக்கும்? நகை வாங்குவோர் கவனிக்க வேண்டியது என்ன?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!

தமிழ்நாட்டில் விவசாயம் செய்யும் மாதவன்!! தரிசு நிலத்தை தென்னந்தோப்பாக மாற்றி சாதனை!!

டிசிஎஸ் நாசிக் அலுவலகத்தில் நடந்தது என்ன? மஃப்டியில் வேலை செய்த மகளிர் போலீஸின் ஷாக் ரிப்போர்ட் !!



Click it and Unblock the Notifications