அமெரிக்காவின் பிரபலமான முதலீட்டு வங்கியான மோர்கன் ஸ்டான்லி வெளியிட்டுள்ள அறிக்கையில், பாரதிய ஜனதா கட்சி தேர்தலில் சந்தித்த இழப்புகள் "பொருளாதாரம் சார்பற்ற பிரச்சினைகள்" காரணமாக ஏற்பட்டவை என சமீபத்திய அறிக்கையில் இந்திய பங்குச்சந்தை குறித்து தெரிவித்தது.
இந்திய பொருளாதாரத்தின் சிறப்பான வளர்ச்சியும், கார்ப்ரேட் நிறுவனங்களின் பலத்த லாப வளர்ச்சியும், தொடர் சீர்திருத்தங்கள் காரணமாக, இந்திய பங்குச் சந்தையின் மீது மோர்கன் ஸ்டான்லி நிறுவனம் தொடர்ந்து நம்பிக்கையுடன் உள்ளதாகத் தெரிவித்துள்ளது.

மேலும், 2034ஆம் ஆண்டிற்குள் இந்தியாவின் தனிநபர் வருமானம் இரட்டிப்பாகும் என்றும், இதன் மூலம் உள்நாட்டு நுகர்வு மேலும் அதிகரிக்கும் என்றும் மோர்கன் ஸ்டான்லி நிறுவனம் எதிர்பார்ப்பதாகத் தெரிவித்துள்ளது.
இதை தொடர்ந்து மோர்கன் ஸ்டான்லி 2023-24 ஆம் ஆண்டில் இந்தியாவின் தனிநபர் வருமானம் ரூ.1,83,236 ஆக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது 2022-23 ஆம் ஆண்டின் ரூ.1,69,496 உடன் ஒப்பிடுகையில் அதிகரித்துள்ளதைக் காட்டுகிறது.
இந்த அறிக்கையின்படி, அடுத்த 10 வருடத்தில் இந்தியர்களின் தனிநபர் வருமானம் $5,800 ஆக அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது, இது இன்றைய நாணய மதிப்பில் ஆண்டுக்கு ரூ.5 லட்சத்திற்கும் சற்று குறைவான அளவாகும்.
இந்தியாவின் மைக்ரோ பொருளாதார குறியீடுகள் மிகவும் சிறப்பாக உள்ளன. மார்ச் காலாண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி எதிர்பார்ப்புகளுக்கும் அதிகமாகவே வளர்ச்சி அடைந்துள்ளது. மேலும் கடன் வளர்ச்சி 15.8% ஆகவும், PMI குறியீடு தொடர்ந்து விரிவாக்கப் பாதையில் உள்ளது.
மோர்கன் ஸ்டான்லி அறிக்கையின் படி, நாட்டின் உற்பத்தித் துறையின் வளர்ச்சி, எனர்ஜி மாற்றம் மற்றும் டிஜிட்டல் உள்கட்டமைப்பு மேம்பாடுகள் பொருளாதார விரிவாக்கத்திற்கு தொடர்ந்து ஆதரவளிக்கும்.
இதோடு இந்தியாவின் பருவமழை போக்கு மற்றும் 2025ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் அறிக்கை ஆகியவை அடுத்த வளர்ச்சி பாதைக்கும் அடித்தளமாக இருக்கும் ண நம்பப்படுகிறது.


Click it and Unblock the Notifications