தற்போது விலைவாசி விண்ணை எட்டியுள்ள நிலையில்.. 2024-ஆம் ஆண்டில் இந்தியாவில் வாழ்வதற்கு மிகவும் மலிவான நகரம் எது என்பதைக் கண்டுபிடிக்க மேஜிக் பிரிக்ஸ் நிறுவனம் சமீபத்தில் ஒரு கணக்கெடுப்பை நடத்தியது. அதில் நாடு முழுவதும் "Price to income ratio" மற்றும் "EMI to income ratio" ஆகிய 2 விஷயங்களை ஆய்வு செய்து, 2024-ஆம் ஆண்டில் இந்தியாவில் குடியிருப்புக்கு இடம் வாங்குவதற்கான மிகவும் மலிவான நகரங்களை கண்டறிந்துள்ளது.
MagicBricks-இன் சமீபத்திய அறிக்கை, "Housing Affordability in Major Indian Cities 2024" என்ற தலைப்பில் வெளியிடப்பட்டது. அதன்படி சென்னை, அகமதாபாத் மற்றும் கொல்கத்தா போன்ற நகரங்கள் 2024-ஆம் ஆண்டில் இந்தியாவில் குடியிருப்பு முதலீட்டிற்கான மிகவும் மலிவான நகரங்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேஜிக் பிரிக்ஸ் நிறுவனம், பல்வேறு நகரங்களின் மலிவுத்தன்மையை மதிப்பிடுவதற்கு "Price to income ratio" என்ற வீட்டு வருமான விகிதத்தைப் பயன்படுத்தி இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.
அறிக்கையின்படி, இந்த மூன்று நகரங்களிலும் சொத்து விலைகள் அங்கு வசிப்பவர்களின் வருமானங்களுடன் அதிகம் ஒத்துப்போகின்றன. நாடு முழுவதும் வீட்டுச் செலவுகள் அதிகரித்து வருவதையும் இந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. கடந்த 4 ஆண்டுகளில், இந்தியாவில் சராசரி வீட்டு விலைகள் 46% அதிகரித்துள்ளது. குறிப்பாக ஹைதராபாத் மற்றும் நொய்டாவில் வீட்டு விலைகள் 78.6% மற்றும் 69% உயர்வை சந்தித்துள்ளன.
2020-ஆம் ஆண்டு முதல் 2024-ஆம் ஆண்டு ஆகிய ஆண்டுகளுக்கு இடையே முதல் 10 நகரங்களில் வீட்டு வருமான விகிதம் 5.4% என்ற வருடாந்திர விகிதத்தில் அதிகரித்துள்ளது. அனால் சொத்து விலைகள் 9.3% என்ற வருடாந்திர விகிதத்தில் அதிகரித்துள்ளது.
சொத்து விலைகள் சராசரி வருமானத்தை விட அதிகரித்துள்ளதால் வீடுகள் குறைந்த அளவில் மலிவுத்தன்மை கொண்டதாக மாறிவிட்டன. டெல்லி, பெங்களூரு, ஹைதராபாத் மற்றும் குருகிராம் போன்ற நகரங்களில் அதிக வருமானத்தை பெரும் குடியிருப்பாளர்கள் இருந்தாலும் அங்கு வீட்டு விலைகள் அதிகரித்துவிட்டன.
ஆனால் அகமதாபாத், சென்னை, கொல்கத்தா மற்றும் புனே போன்ற குறைந்த சொத்து விலைகளைக் கொண்ட நகரங்களில் வீடு வாங்க ஏற்ற சூழல் நிலவுகிறது. ஆனால் குறைந்த வருமானம் கொண்ட நகரங்களில் வீடு வாங்க திட்டமிடுபவர்கள் நாடு முழுவதிலும் மலிவுத்தன்மை பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர்.
"EMI to income ratio" என்ற விகிதம் சில இடங்களில் அதிகரித்து வருவதையும் இந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. இஎம்ஐ டூ இன்கம் ரேஷியோ என்பது உங்களுடைய மாதாந்திர வருமானத்தில் எவ்வளவு தொகை EMI-க்கு செல்கிறது என்பதைக் குறிக்கிறது. இது 2020-ஆம் ஆண்டில் 46 சதவீதமாக இருந்தது. ஆனால் 2024-ஆம் ஆண்டில் 61 சதவீதமாக உயர்ந்துள்ளது.
இது வீடு வாங்குபவர்களுக்கு EMI தொகை அதிகரித்திருப்பதைச் சுட்டிக்காட்டுகிறது. டெல்லியில் இந்த விகிதம் 82 சதவீதமாகவும், அதே சமயம் குருகிராம், ஹைதராபாத் போன்ற நகரங்களில் 61% ஆகவும் உள்ளன. மாறாக அகமதாபாத், சென்னை மற்றும் கொல்கத்தா போன்ற நகரங்களில் 50 சதவீதத்திற்கும் குறைவான EMI விகிதத்துடன் மிகவும் சாதகமான நிலைமை நிலவுகிறது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!



Click it and Unblock the Notifications