IT துறைக்கு இன்று வரை சவாலான நேரம் தான்.. ஆய்வாளர்கள் கருத்து..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கொரோனா பாதிப்பால் நடப்பாண்டில் இந்திய ஐடி நிறுவனங்கள் சுமார் 7% வரையில் வருவாயில் இழப்பினை சந்திக்கலாம் என்று ஆய்வாளர்கள் மதிப்பிட்டுள்ளனர்.

உலக நாடுகள் முழுவதும் கொரோனா வைரஸினால் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஒரு புறம் பொது மக்களும், மறுபுறம் தொழிற்துறையினரும் கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகின்றனர்.

இதனையடுத்து பல இடங்களில் பணி நீக்கம், சம்பள குறைப்பு என பல பிரச்சனைகள் தலைதூக்கி வருகின்றன.

அமெரிக்காவில் ரெட் அலர்ட் பகுதி

அமெரிக்காவில் ரெட் அலர்ட் பகுதி

இந்த நிலையில் உலகில் 55% ஐடி நிறுவனங்கள் அமெரிக்காவில் உள்ள நிலையில், அங்குள்ள பல மாகாணங்களிலும் பரவி வரும் கொரோனாவினால் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அது மட்டும் பல நாடுகளில் கொரொனாவின் தாக்கம் பரவி இருந்தாலும் இன்றைய நிலையில் கொரோனாவின் மையாக திகழும் அமெரிக்காவே, இதிலும் முதன்மையாக உள்ளது.

 ஆள்குறைப்பு அஸ்திரம்

ஆள்குறைப்பு அஸ்திரம்

ஏற்கனவே அமெரிக்காவில் நிலவி வரும் லாக்டவுனால் மக்கள் வீடுகளுக்குள் முடங்கி கிடக்கின்றனர். இதற்கிடையில் ஏற்கனவே பல நிறுவனங்கள் ஆள்குறைப்பு எனும் அஸ்திரத்தை கையில் எடுத்துள்ள நிலையில், அமெரிக்காவில் உள்ள நடுத்தர அளவிலான ஐடி நிறுவனங்கள் ஆட்குறைப்பு செய்ய வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

குறைந்து வரும் தேவை

குறைந்து வரும் தேவை

ஏனெனில் உலகின் பெரும்பாலான நாடுகளில் கொரோனாவின் தாக்கம் உக்கிரமாக இருந்து வரும் நிலையில், ஐடி துறைக்கான தேவை குறைந்து வருகிறது. குறிப்பாக அமெரிக்காவுக்கு அடுத்து ஐரோப்பிய நாடுகள் உள்ள நிலையில், அங்கும் தொழில்நுட்ப சேவைகளுக்கான தேவை பெருமளவு குறைந்துள்ளது. இதன் தாக்கம் ஐடி துறையில் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தும் எனவும் கணிப்புகள் வெளியாகியுள்ளன.

இது மிக மோசமான நெருக்கடி

இது மிக மோசமான நெருக்கடி

அது மட்டும் அல்ல ஐடி துறையில் ஏற்பட்டுள்ள இந்த பாதிப்பு ஆறு மாதங்கள் வரை நீடிக்கலாம் எனவும் கூறப்படுகிறது. இதனால் ஐடி துறை சார்ந்த நிறுவனங்கள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் ஐடி துறையினை சார்ந்த மூத்த அதிகாரி ஒருவர் இன்று வரை ஐடி நிறுவனங்களுக்கு இது சவாலான நேரம் தான். இது கடந்த 2008 - 2009ல் ஏற்பட்ட நெருக்கடியினை விட மோசமானது.

சவாலான காலம்

சவாலான காலம்

ஏனெனில் கொரோனா வைரஸினால் ஐடி துறையானது மிக சவாலான நேரத்தினை சந்தித்து வருகிறது. ஏனெனில் கொரோனாவினால் பெரும்பாலான வாடிக்கையாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகளவில் விநியோக சங்கிலிகளும் பாதிக்கப்பட்டுள்ளது. ஆக இது மிக மோசமான ஒன்று தான். மேலும் உலகளாவிய வர்த்தகம் மீண்டும் சீரடைவதற்கு சில காலம் ஆகும். ஆக அந்த இடைப்பட்ட காலம் ஐடி துறைக்கு மிக சவாலானதாக இருக்கும்.

வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுங்கள்

வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுங்கள்

இதனால் இந்தியா ஐடி நிறுவனங்கள் பெரும் சவாலான நிலையினை மேற்கோள்ள நேரிடும். எனினும் ஐடி நிறுவனங்கள் அதனை பொருட்படுத்தாமல் புதுமையை புகுத்த வேண்டும். லாக்டவுனால் முடங்கி போயுள்ள சில நிறுவனங்களை டிஜிட்டல் சேவைக்கு மாற்றலாம். மேலும் இங்கு நிறைய வாய்ப்புகள் உள்ளன. ஆக அதனை நாம் பயன்படுத்தி கொள்ள வேண்டும் எனவும் ஐடி துறையினை சேர்ந்த மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Most challenging time for indian IT industry till date

India’s IT sector never seen challenging times now due to coronavirus pandemic.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X