காண்டம் விற்பனை அமோகம்.. ஆனா வெங்காயத்துடன் ஏன் வாங்குறாங்க..!

இந்திய டிஜிட்டல் வர்த்தகத்தை உச்சாணிக்கொம்பில் நிற்கவைக்க எப்படி ஆன்லைன் உணவு டெலிவரி சேவையை உதவியதோ, அதேபோல் மக்களுக்கு அத்தியாவசியமான பொருட்களை விரைவாக ஹோம் டெலிவரி செய்யும் குவிக் காமர்ஸ் சேவையும் பெரிய அளவில் உதவுகிறது.

இந்திய குவிக் காமர்ஸ் தளத்தில் ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட் முக்கிய இடத்தை பிடித்திருக்கும் வேளையில், 2023 ஆம் ஆண்டு இத்தளத்தில் மக்கள் வாங்கிய பொருட்களின் தரவுகளை திரட்டி வருடாந்திர அறிக்கையாக வெளியிட்டு உள்ளது ஸ்விக்கி.

காண்டம் விற்பனை அமோகம்.. ஆனா வெங்காயத்துடன் ஏன் வாங்குறாங்க..!

மக்கள் அரிசி, பருப்பு, தங்காளி, வெங்காயம் வாங்குவது போல் தற்போதும் காண்டம் அதிகளவில் ஸ்விக்கியில் வாங்கப்பட்டு வருகிறது.

பொதுவாக காதலர் தினத்தில் அதிகப்படியான காண்டம் விற்பனையாகும் என்ற கணிப்பு இருக்கும் வேளையில் 28 நகரங்களில் டெலிவரி செய்யும் ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட் 2023 ஆம் ஆண்டில் செப்டம்பர் மாதம் அதிகளவிலான காண்டம் விற்பனை செய்யப்பட்டு உள்ளது என தனது வருடாந்திர அறிக்கையில் தெரிவித்துள்ளது. அப்போ காதலர் தினத்தை பிப்ரவரி மாதத்திற்கு மாற்றலாமா என கேட்க தோன்றுகிறது.

இதிலும் குறிப்பாக ஆக்ஸட் 12 ஆம் தேதி ஸ்விக்கி தளத்தில் வருடத்திலேயே அதிகமாக சுமார் 5893 பேர் காண்டம் வாங்கியுள்ளதால் இந்த நாள்-ஐ ஸ்விக்கி தேசிய காண்டம் தினமாக அறிவித்துள்ளது. இந்த நாளில் தான் ஸ்விக்கி காண்டம் பாக்கெட்-கை பேக் செய்யப்பட்டு டெலிவரி ஊழியர்களுக்கு மறைத்து வழங்கியது.

இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் காண்டம் வாங்கப்பட்ட பெரும்பாலான ஆர்டரில் வெங்காயம் சேர்த்து வாங்கப்படுகிறது. வெங்காயத்தை தாண்டி வாழைப்பழம், சிப்ஸ் வாங்கப்படுவதையும் ஸ்விக்க கவணித்து தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்திய குவிக் காமர்ஸ் துறையில் ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட், Zepto மற்றும் சோமேட்டோ Blinkit ஆகியவை அசத்தி வருகிறது. இத்தகைய தளத்தில் பல பொருட்களை மக்கள் வாங்கினாலும், காண்டம் வாங்குவது இத்தளத்தில் தொடர்ந்து அதிகரித்து வருவது மட்டும் அல்லாமல் தொடர்ந்து முக்கிய விவாத பொருளாகவே உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+