கல்லூரிகளில் படித்து கொண்டே பகுதி நேர வேலைக்கு செல்லும் போக்கு அண்மை காலமாக அதிகரித்து வருகிறது. நல்ல ஊதியம் பெற்று தரக்கூடிய பார்ட் டைம் வேலைகள் மூலம் தங்களின் செலவுகளையும் படிப்புக்கான செலவுகளையும் மேற்கொள்ள உதவுகின்றன. அந்த வகையில் தற்போது டிரெண்டாக இருக்கும் நல்ல ஊதியம் தரக்கூடிய பார்ட் டைம் வேலைகள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.
டிஜிட்டல் மார்க்கெட்டிங்: இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரக்கூடிய ஒரு துறை இது. பார்ட்-டைம் வேலை தேடுவோருக்கு பல்வேறு டிஜிட்டல் மார்க்கெட்டிங் ஏஜென்சிகளும் வாய்ப்பு வழங்குகின்றன. 5ஜி வருகை மற்றும் பெரும்பாலான மக்கள் ஸ்மார்ட் ஃபோன்களை பயன்படுத்துவது உள்ளிட்ட காரணங்களால் பல்வேறு நிறுவனங்களும் டிஜிட்டல் வழியாக தங்களது நிறுவனங்களை விளம்பரம் செய்யவும் தங்களது பொருட்களை சந்தைப்படுத்தவும் முற்படுகின்றனர்.

இந்த இடங்களில் தான் டிஜிட்டல் மார்க்கெட்டிங் என்பது தற்போது வளர்ந்து வரக்கூடிய ஒரு துறையாக இருக்கிறது. சமூக வலைத்தளங்களில் விளம்பரம் செய்வது, இமெயில் மூலம் விளம்பரம் செய்வது என்பன உள்ளிட்ட பல்வேறு வகையான டிஜிட்டல் சார்ந்த விளம்பர திறன்களை கற்றுக் கொண்டால் இந்த துறையில் கணிசமான தொகையை நம்மால் ஈட்ட முடியும்.
ஃப்ரீலேன்சிங்: ஃப்ரீலேன்சிங் என்பது பரவலாக பயன்படுத்தப்படும் ஒரு வார்த்தையாகிவிட்டது. இந்த முறையில் நீங்கள் கன்டென்ட் ரைட்டிங், வீடியோ எடிட்டிங் உள்ளிட்ட பல சேவைகளை வழங்க முடியும். ஒவ்வொரு புராஜெக்டுக்கும் என்ற வகையில் ஊதியத்தை பேசிக் கொள்ளலாம். பார்ட்-டைம் முறையில் செய்வதற்கு உகந்த வேலை இது. உங்களுக்கு கிடைக்கும் நேரத்தில் இந்த வேலைகளை செய்து முடிக்கலாம் என்பதால் பலருக்கு பிடித்தமானதாக உள்ளது.
டியூஷன் எடுப்பது: ஹோம் டியூஷன் தற்போது நகர் பகுதிகளில் இந்த ஹோம் டியூஷன் என்பது அதிகமாகிவிட்டது. முன்பெல்லாம் நாம் டியூஷன் என்றால் ஒரு இடத்தில் ஒரு ஆசிரியர் வகுப்பெடுப்பார் நாம் அனைவரும் அங்கு செல்வோம். ஆனால் தற்போது ஹோம் டியூஷன் என்ற முறை வளர்ந்து வருகிறது. அதாவது மாணவர்களுக்கு வீட்டிற்கே நேரடியாக சென்று பாடங்களை எடுப்பது. குறிப்பாக இயற்பியல், கணிதம் உள்ளிட்ட பாடங்களுக்கு இது போன்ற வகுப்புகளை எடுப்பது அதிகமாகிவிட்டது. ஆன்லைன் வாயிலாக வகுப்புகளை எடுப்பதும் கூட தற்போது பிரபலமாகி வருகிறது.
கன்டென்ட் கிரியேட்டர்: பல்வேறு நிறுவனங்களும் தங்கள் பொருட்கள் குறித்து பிளாக் எழுதவும், சமூகவலைதளங்களுக்காக வீடியோ தயாரித்து வெளியிடவும் பார்ட் டைமாக ஆட்களை எடுக்கின்றன. அந்த வகையில் அவர்கள் வழங்கும் தலைப்பில் வீடியோபிளாக் எடுப்பது அல்லது கிரியேட்டிவ்வாக ஒரு கன்டென்ட் உருவாக்குவது ஆகியவற்றுக்கான தேவை தற்போது அதிகரித்துள்ளது.
Story written by: Devika


Click it and Unblock the Notifications