இந்தியாவில் ரியல் எஸ்டேட் துறை வேகமாக வளர்ச்சி அடைந்துள்ளது மட்டும் அல்லாமல் முக்கிய நகரங்களில் ரியல் எஸ்டேட் விலை எப்போதும் இல்லாத வகையில் அதிகரித்துள்ளது. இப்படியிருக்கையில் நாட்டின் தலைநகரான டெல்லியில் மிகவும் காட்லியான வீட்டின் விலை மதிப்பு மட்டும் 500 கோடி ரூபாய்க்கு மேல்.
டெல்லி நாட்டின் தலைநகராக இருப்பது மட்டும் அல்லாமல் பல அரசியல் பெரும் தலைவர்கள், முக்கிய தொழிலதிபர்களின் வசிப்பிடமாகவும் உயர்ந்துள்ளது. இப்படியிருக்கையில் டெல்லியின் இந்த விலையுயர்ந்த வீட்டின் உரிமையாளர் என்ற கேள்வி அனைத்து தரப்பு மக்கள் மத்தியிலும் உள்ளது.

பிரபல கோடீஸ்வரர்களான முகேஷ் அம்பானி, கௌதம் அதானி அல்லது ரத்தன் டாடா ஆகியோருக்கு அல்லது அவர்களின் குடும்ப உறுப்பினருக்கு சொந்தமானதாக இருக்கும் என பலரும் நினைக்க வாய்ப்புகள் உள்ளது. ஆனால் இல்லை. இந்தியாவில் மதிப்பிற்குரிய மற்றும் மிகப்பெரிய ரியல் எஸ்டேட் குழுமமாக விளங்கும் DLF-ன் தலைவரான கேபி சிங்-ன் மகளுக்கு சொந்தமானது இந்த வீடு.
கேபி சிங்-ன் மகள் ரேணுகா தல்வார் டெல்லியில் உள்ள மிகவும் விலையுயர்ந்த வீட்டின் உரிமையாளராக உள்ளார், தேசிய தலைநகரின் மிகவும் ஆடம்பரமான பகுதிகளில் ஒன்றான பிருத்விராஜ் சாலையில் உள்ள பிரதான சொத்து இது. வீட்டின் அபரிமிதமான விலை, லுட்யென்ஸ் பகுதியில் பல ஆண்டுகளில் மிகப்பெரிய ரியல் எஸ்டேட் ஒப்பந்தமாக திகழ்கிறது.
டிஎல்எஃப் தலைவர் கேபி சிங்-ன் மகள் ரேணுகா தல்வார் 2016 ஆம் ஆண்டு டெல்லியில் உள்ள பிருத்விராஜ் சாலையில் ரூ.435 கோடிக்கு ஒரு பெரிய வீட்டை வாங்கினார். இந்த வீட்டை TDI Infracorp தலைவர் கமல் தனேஜா அவர்களிடம் இருந்து ரேணுகா தல்வார் வாங்கினாபர். தற்போது இந்த வீட்டு 500 கோடி ரூபாய்க்கு மேல் மதிப்பிடப்பட்டு உள்ளது.
ரேணுகா தல்வார் இந்த வீட்டை சுமார் 5000 சதுர மீட்டர் அளவு கொண்டது, இதில் வீட்டு அமைந்திருக்கும் பகுதியின் இடம் மட்டும் 1189 சதுர மீட்டர். ரேணுகா தல்வார் டெல்லியில் பல ரியல் எஸ்டேட் சொத்துக்களை வைத்துக்கொண்டு சுமார் 2780 கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் உள்ளார்.


Click it and Unblock the Notifications