குஜராத் மக்கள் மறக்க முடியாத காஸ்ட்லி திருமணம்.. 100 பெட்ரூம் கொண்ட அரண்மனை, 150 கோடி செலவு..!!

பொதுவாக கல்யாணம் என்றாலே தடபுடலாக இருக்கும். அதிலும் அரச குடும்ப கல்யாணம் என்றால் கேட்கவே வேண்டாம், படு ஆடம்பரமாக இருக்கும். 2015ம் ஆண்டில் நடந்த குஜராத்தை சேர்ந்த ஒரு அரசு குடும்பத்தின் கல்யாணம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.

இன்று வரை நம் நாட்டில் நடந்த அரச குடும்ப திருமணங்களில் அதுதான் மிகுந்த பொருட் செலவில் நடைபெற்ற திருமணமாக உள்ளது. குஜராத் மாநிலம் ராஜ்கோட் சேர்ந்த அரச குடும்பம் ஜடேஜா குடும்பம். 2015ம் ஆண்டில் ஜடேஜா அரச குடும்பத்தை சேர்ந்த இளவரசர் ஜெய்தீப் ஜடேஜா மற்றும் இளவரசி ஷிவாத்மிகா குமாருக்கும் திருமணம் நடைபெற்றது.

குஜராத் மக்கள் மறக்க முடியாத காஸ்ட்லி திருமணம்.. 100 பெட்ரூம் கொண்ட அரண்மனை, 150 கோடி செலவு..!!

ராஜ்கோட்டில் உள்ள ஜடேஜா குடும்பத்தின் மூதாதையர் இல்லமான ரஞ்சித் விலாஸில் இளவரசர் ஜெய்தீப் ஜடேஜா - இளவரசி ஷிவாத்மிகா குமார் திருமணம் நடைபெற்றது. ரஞ்சித் விலாஸ் என்பது பெரிய வீடோ அல்லது பெரிய பங்களா என்றோ சாதாரணமாக நினைத்து விடாதீர்கள்.

பெரிய புல்வெளி மற்றும் 100 அறைகள் கொண்ட அரச அரண்மனை. அரச குடும்பம் இளவரசரின் திருணமத்தை ஆடம்பரமாக நடத்தியது. மணமகனான இளவரசர் யானையில் ஊர்வலமாக வந்தார் அதேசமயம் மணமகளான இளவரசி அரச குடும்ப நகைகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தார்.

திருமண ஊர்வலத்தில் மட்டும் 15 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர். இதுதவிர 25 ஆயிரம் விருந்தினர்கள் திருமணத்தில் பங்கேற்றனர். அவர்கள் அனைவரும் ஜடேஜா அரச குடும்பத்தின் பிரைவேட் ஜெட்டில் வந்தனர்.

ஜடேஜா அரச குடும்பத்தினர் அந்த திருமணத்துக்காக ரூ.150 கோடிக்கு மேல் செலவிட்டனர். திருமணத்தின் போது ஆயிரக்கணக்கான ஏழைகளுக்கு அரச குடும்பத்தினர் உணவளித்தனர். மேலும் அறக்கட்டளைக்கு ரூ.7-8 கோடி வழங்கினர். இளவரசரின் திருமணம் நடந்த அரண்மனை தற்போது ஹோட்டலாக மாறி விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

என்னதான் ஜடேஜா அரச குடும்பத்தின் திருமணம் ஆடம்பரமாக நடந்து இருந்தாலும், அரச குடும்பத்தின் திருமண பட்ஜெட், பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானி தனது மகள் இஷா அம்பானி-ஆனந்த் பிரமல் திருமணத்துக்கு செலவழித்ததில் பாதிக்கும் குறைவுதான்.

இஷா அம்பானி - ஆனந்த் பிரமல் திருமணம் ரூ.700 கோடி பட்ஜெட்டில் நடைபெற்றது. இஷா அம்பானி திருமணத்தின் போது ரூ.90 கோடி மதிப்பிலான உலகிலேயே விலை உயர்ந்த லெஹங்காவை அணிந்து இருந்தார்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+