கார் விற்பனையில் பெரிய மாற்றம்.. ஆட்டோமொபைல் சந்தை எங்குச் செல்கிறது..?!

இந்தியாவில் கொரோனா காலத்திற்கு முன்பிருந்தே ஆட்டோமொபைல் சந்தையும், கார் விற்பனையும் மிகவும் மோசமான நிலையில் இருந்தது அனைவருக்கும் தெரியும், ஆனால் இதே காலகட்டத்தில் இந்தியாவிற்குப் புதிதாக வந்த வெளிநாட்டுக் கார் பிராண்டுகளான எம்ஜி மோட்டார்ஸ் மற்றும் கியா மோட்டார்ஸ் விற்பனையில் கலக்கியது. மறுமுனையில் BS6 ரக வாகன தயாரிப்பு மற்றும் பழைய வாகனங்களை விற்பனை செய்ய வேண்டிய கட்டாயத்திலும் இந்திய ஆட்டோமொபைல் சந்தை நிறுவனங்கள் இருந்தது.

இந்த நிலையில் தான் இந்தியாவில் கொரோனா தாக்கத்தால் நாடு முழுவதும் லாக்டவுன் அறிவிக்கப்பட்டு இந்திய ஆட்டோமொபைல் சந்தை மிகப்பெரிய பாதிப்பை எதிர்கொண்டு மொத்த சந்தையையும் கலங்கடித்தது. உற்பத்தி முதல் விற்பனை வரையில் மொத்தமாக முடங்கியது.

இந்நிலையில் கடந்த 45 நாட்களாக லாக்டவுன் கட்டுப்பாடுகள் தளர்க்கப்பட்டு ஆட்டோமொபைல் துறையின் வர்த்தகம் சூடுபிடித்துள்ளது.

எம்ஜி மோட்டார்

எம்ஜி மோட்டார்

இந்தியாவில் தனது வர்த்தகத்தைத் துவங்கி சில மாதங்களே ஆன நிலையில், எம்ஜி மோட்டார்ஸ் மக்களைப் பெரிய அளவில் கவர்ந்துள்ளது என்றால் மறுக்க முடியாது. இந்நிலையில் லாக்டவுன்-க்குப் பின் ஆகஸ்ட் மாதத்தில் எம்ஜி மோட்டார்ஸ் சுமார் 2,851 கார்களை விற்பனை செய்து கடந்த வருடத்தின் இதே காலக்கட்டத்தை விடவும் சுமார் 41.2 சதவீத வளர்ச்சியை அடைந்தது.

அதுமட்டும் அல்லாமல் தற்போது இந்திய வாடிக்கையாளர்களைக் கவர வேண்டும் எனப் புதிதாக எலக்ட்ரிக் கார்களை அறிமுகம் செய்ய முடிவு செய்துள்ளது எம்ஜி மோட்டார்ஸ்.

 

ஹூண்டாய்

ஹூண்டாய்

இந்தியாவில் 2வது மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான ஹூண்டாய் இந்த ஆகஸ்ட் மாதத்தில் 45,809 கார்களை விற்பனை செய்து சுமார் 20 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

கடந்த நிதியாண்டில் இதே ஆகஸ்ட் மாதத்தில் ஹூண்டாய் 38,205 கார்களை மட்டுமே விற்பனை செய்துள்ளது.

 

மஹிந்திரா & மஹிந்திரா

மஹிந்திரா & மஹிந்திரா

நாட்டின் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்களில் ஒன்றான மஹிந்திரா & மஹிந்திரா 2020 ஆகஸ்ட் மாதத்தில் 30,426 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. ஆனால் கடந்த நிதியாண்டில் இதே ஆகஸ்ட் மாதத்தில் மஹிந்திரா சுமார் 36,085 வாகனங்களை விற்பனை செய்திருந்தது.

இதன் மூலம் மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம் விற்பனையில் சுமார் 16 சதவீத சரிவைச் சந்தித்துள்ளது.

 

டோயோட்டா

டோயோட்டா

மஹிந்திரா & மஹிந்திரா-வை போல் டோயோட்டா நிறுவனத்தின் விற்பனையில் சுமார் 48.08 சதவீதம் சரிந்துள்ளது. 2019 ஆகஸ்ட் மாதத்தில் டோயோட்டா சுமார் 10,701 கார்களை மட்டுமே விற்பனை செய்த நிலையில், 2020 ஆகஸ்ட் மாதம் 5,555 கார்களை மட்டுமே விற்பனை செய்துள்ளது.

இக்காலகட்டத்தில் டோயோட்டாவின் உற்பத்தி அளவு பெரிய அளவில் பாதிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

 

ஆட்டோமொபைல்

ஆட்டோமொபைல்

2020 ஆகஸ்ட் மாதத்தில் மக்கள் மத்தியில் பெரிய அளவில் நம்பிக்கையைப் பெற்ற நிறுவனங்கள் அனைத்தும் விற்பனையில் பெரிய அளவிலான முன்னேற்றம் அடைந்துள்ளது. இந்த ஆகஸ்ட் மாதத்தில் விலை உயர்ந்த கார் ரகங்களின் விற்பனை பெரிய அளவிலான பாதிப்பு அடைந்துள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+