அரசு குடும்பம் என்றாலே நம் அனைவருக்கும் பிரிட்டன் அரசு குடும்பம் தான் நினைவிற்கு வரும். ஆனால் உலகிலேயே தற்போது சக்தி வாய்ந்த மற்றும் அதிக சொத்துக்களுக்கு உரிமையாளராக இருக்கிறது ஒரு அரசு குடும்பம். சவுதி அரேபியாவை சேர்ந்த ஆளும் அரசு குடும்பம் 1844 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. தற்போது உலகிலேயே அதிக சொத்து கொண்ட குடும்பம் இதுதான்.
இந்த குடும்பத்தில் இருப்பவர்களின் சொத்து மதிப்புகளை எல்லாம் ஒன்றாக கூட்டினால் தற்போது உள்ள உலக பணக்காரர்களின் சொத்து மதிப்புகளை விட அதிகமாக இருக்கும். குறிப்பாக சவுதி அரேபியாவின் ஜிடிபி கூட 1.11 டிரில்லியன் டாலர்கள், சவுதி அரேபியாவின் அரசு குடும்பத்தினரின் சொத்து மதிப்புடன் ஒப்பிட்டுப் பார்த்தால் இது குறைவு தான்.

டிஎன்ஏ இந்தியா வெளியிடும் தகவலின் படி இந்த அரசு குடும்பத்தின் சொத்து மதிப்பு 1.4 ட்ரில்லியன் அமெரிக்க டாலர்களாக இருக்கிறது. சர்வதேச அளவில் பணக்கார அரசு குடும்பம் என்பதை தாண்டி சக்தி வாய்ந்த அரசு குடும்பமாகவும் சவுதி அரசு குடும்பம் இருக்கிறது. இந்த குடும்பத்தில் மொத்தம் 15 ஆயிரம் உறுப்பினர்கள் இருக்கின்றனர்.
இவர்களில் 2000 பேரிடம் பெருமளவிலான சொத்துக்கள் குவிந்து கிடக்கின்றன. 75 ஆண்டுகளுக்கு முன்பு சவுதி அரேபியாவில் கண்டெடுக்கப்பட்ட எண்ணெய் கிணறுகளும் அதன் பிறகு இந்த குடும்பத்தினர் மேற்கொண்ட ஸ்மார்ட்டான முதலீட்டு முடிவுகளுமே இவர்களின் வளமான சொத்து மதிப்புக்கு காரணம்.
இந்த குடும்பத்தின் தற்போதைய தலைவராக மன்னர் Salman bin Abdulaziz Al Saud இருக்கிறார். இவருடைய சொத்து மதிப்பு 18 பில்லியன் அமெரிக்க டாலர்கள். இவருக்கு அடுத்தபடியாக இந்த குடும்பத்தில் முக்கிய நபராக இருப்பவர் இளவரசர் Alwaleed bin Talal. இவருடைய சொத்து மதிப்பு 13.4 பில்லியன் டாலர்கள். சவுதி அரேபியா அரசு குடும்பத்தினர் இருக்கும் மாளிகை Al Yamamah என அழைக்கப்படுகிறது. 1983ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த மாளிகை 4 மில்லியன் சதுர அடியில் விரிந்து கிடக்கிறது.
பழங்கால கட்டிடக்கலையோடு, இத்தாலிய மார்பில் மற்றும் ஓவியங்கள் நிறைந்த சுவர்கள் என பிரம்மாண்டமாக காட்சி தருகிறது இந்த மாளிகை. ஆயிரம் அறைகள், ஆடம்பரமான சினிமா தியேட்டர், நீச்சல் குளங்கள், மசூதி என அனைத்தும் நிறைந்த ஒரு மாளிகையாக இது இருக்கிறது.
சவுதி அரசு குடும்பத்தை சேர்ந்தவர்கள் பல்வேறு கலைப் பொருட்களையும் கோடிக்கணக்கில் வாங்கி சொந்தமாக வைத்திருக்கின்றனர். பல்வேறு சொகுசு கப்பல்கள் மற்றும் விமானங்களுக்கும் உரிமையாளராக இருக்கின்றனர். இவர்களில் இளவரசர் முகமது பின் சல்மான் 400 மில்லியன் டாலர் மதிப்பு கொண்ட சொகுசு கப்பலுக்கு உரிமையாளராக இருக்கிறார்.
இது இரண்டு ஹெலிபேட்கள் கொண்ட ஒரு சொகுசு கப்பல் ஆகும். தங்க முலாம் பூசப்பட்ட விமானம் மற்றும் கார்களையும் இவர்கள் சொந்தமாக வைத்து இருக்கின்றனர்.
Written by: Devika
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications