வாங்குன்னா இப்படியொரு கார் வாங்கனும்.. சொல்லி வச்ச மாதிரி நடக்குது.. பெஸ்ட் SUV கார் இதுதான்..!

இந்தியாவில் கார் என்பது ஆடம்பரம் என்பதை தாண்டி தற்போது மிகவும் அத்தியாவசியமாக மாறியுள்ளது, அதிலும் குறிப்பாக கொரோனா தொற்றுக்கு பின்பு மக்கள் சொந்தமாக கார் வாங்குவது அதிகரித்துள்ளது. இந்த நிலையில் 2025 ஏப்ரல் மாதம் இந்தியாவில் அதிகம் விற்பனை செய்யப்பட்ட கார்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. இந்த பட்டியலில் முதல் 5 இடங்களை பிடித்தது யார் என்பது தான் தற்போது புது கார் வாங்குவோர் மத்தியில் அதிகம் எதிர்பார்க்கும் விஷயமாக உள்ளது.

ஏப்ரல் மாத கார் விற்பனை சந்தையில் ஹூண்டாய் மோட்டார் இந்தியா, மஹிந்திரா மற்றும் டாடா மோட்டார்ஸ் நிறுவனங்களால் பின்னுக்குத் தள்ளப்பட்டு, நான்காம் இடத்திற்கு நகர்ந்ததுள்ளது. வழக்கம் போல் முதல் இடத்தை மாருதி சுசூகி தட்டிச்சென்றது.

வாங்குன்னா இப்படியொரு கார் வாங்கனும்.. சொல்லி வச்ச மாதிரி நடக்குது.. பெஸ்ட் SUV கார் இதுதான்..!

இந்தியா தற்போது எஸ்யூவி சந்தையாக மாறிவிட்ட நிலையில் எஸ்யூவி பட்டியலில் ஹூண்டாய் க்ரெட்டா 17,016 யூனிட்களுடன் இந்தியாவின் முதன்மை SUV ஆக தொடர்ந்து விளங்குகிறது. ஏப்ரல் மாதத்தில் முதல் ஐந்து இடங்களைப் பிடித்த SUVகளின் விவரங்கள் இதோ.

ஹூண்டாய் க்ரெட்டா முதலிடம்: 17,016 யூனிட்கள் விற்பனையாகி, க்ரெட்டா இந்தியாவின் முதன்மை SUV ஆக உள்ளது, ஆனால் மார்ச் 2025 உடன் ஒப்பிடுகையில் (18,059 யூனிட்கள்) சிறிய வீழ்ச்சி. ஆனால் பல மாதங்களாக இந்தியாவில் அதிகம் விற்பனை செய்யப்படும் எஸ்யூவி கார்கள் பட்டியலில் க்ரெட்டா தொடர்ந்து முதலீடத்தை பிடித்து வருகிறது.

மாருதி சுசூகி ப்ரெஸ்ஸா இரண்டாம் இடம்: 16,971 யூனிட்கள் விற்பனையாகி, 4 மீட்டருக்கும் குறைவான SUV பிரிவில் முதலிடம் பிடித்ததுள்ளது. இதேபோல் பட்ஜெட் பிரியர்களுக்காகவே அறிமுகம் செய்யப்பட்ட கார் போல ப்ரெஸ்ஸா அறிமுகமான நாளில் இருந்து தொடர்ந்து நிலையான விற்பனையை பதிவு செய்து வருகிறது.

மஹிந்திரா ஸ்கார்ப்பியோ 15,534 கார்கள் விற்பனையாகி 5% வருடாந்திர அடிப்படையிலான வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. மேலும் முதல் பத்து வாகனங்களில் ஒரே மஹிந்திரா SUV இதுதான். இந்திய கார்களின் Big Daddy என கூறப்படும் இந்த மஹிந்திரா ஸ்கார்ப்பியோ பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரையில் மிகவும் விருப்பமான காராக உள்ளது.

டாடா நெக்ஸான் வலுவான வளர்ச்சி: 15,457 யூனிட்களுடன் 38% வருடாந்திர அடிப்படையில் வளர்ச்சி அடைந்துள்ளது. இந்த 15,457 எண்ணிக்கை ICE மற்றும் EV மாடல்களின் விற்பனையும் அடக்கம். டாடா நெக்ஸானின் 38% வளர்ச்சி, இந்தியாவில் மின்சார வாகனங்களின் வளர்ந்து வரும் பிரபலத்தையும், காம்பாக்ட் SUVகளின் தேவையையும் காட்டுகிறது.

மாருதி சுசூகி ஃப்ரான்க்ஸ்: 14,345 யூனிட்களுடன் ஐந்தாம் இடத்தில் உள்ளது. முதல் பத்து வாகனங்களில் எட்டாம் இடத்தைப் பிடித்தது. சிறிய வடிவில் இருந்தாலும், இதன் ஸ்போட்டி லுக் அனைத்து தரப்பு மக்களுக்கு மிகவும் பிடித்தமான காராக உள்ளதன் விளைவாகவே மாருதி சுசூகி ஃப்ரான்க்ஸ் டாப் 5 SUV கார்கள் பட்டியலில் 5வது இடத்தை பிடித்துள்ளது.

Take a Poll

இந்தியாவில் SUV சந்தை வேகமாக வளர்ந்து வருகிறது, குறிப்பாக காம்பாக்ட் மற்றும் சப்-காம்பாக்ட் பிரிவுகளில். வாகன் ஆர், ப்ரெஸ்ஸா, மற்றும் ஃப்ரான்க்ஸ் போன்ற மாடல்களின் வெற்றி, மாருதி சுஸூகியின் சப்-4 மீட்டர் SUV பிரிவில் ஆதிக்கத்தை உறுதிப்படுத்துகிறது. அதே நேரத்தில், க்ரெட்டா மற்றும் நெக்ஸான் போன்ற மாடல்கள், நடுத்தர அளவு SUVகளின் தேவையைப் பூர்த்தி செய்கின்றன. மஹிந்திரா ஸ்கார்ப்பியோவின் வளர்ச்சி, உள்நாட்டு உற்பத்தியாளர்களின் பலத்தை படம் போட்டு காட்டுகிறது.

ஹூண்டாய் க்ரெட்டா-வின் நவீன வடிவமைப்பு, புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட அம்சங்கள், பல்வேறு இன்ஜின் விருப்பங்கள், மேம்பட்ட பாதுகாப்பு, மற்றும் நம்பகமான பிராண்ட் மதிப்பு ஆகியவற்றால் இந்தியாவில் மற்ற SUVகளை விட அதிகம் விரும்பப்படுகிறது. இதேபோல் சர்வீஸ் விஷயத்திலும் ஹூண்டாய் திறம்பட இயங்குகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+