மும்பை: இன்று ஒரு நபர் தன்னுடைய திறமையின் வழியாகவும், சமூக வலைதளங்கள் போன்ற மீடியாக்கள் வழியாகவும் பயங்கரமாக வளர்ந்து ஒரு தனி பிராண்டாகவே உருவாகி விட முடியும்.
இருப்பினும், கிரிக்கெட் வீரர்கள், கால்பந்து வீரர்கள், நடிகர்கள், நடிகைகளை மிஞ்ச முடிவதில்லை. அந்த அளவுக்கு அவர்களின் பெயர்கள் மக்கள் மனதில் நிலைத்து விடுகிறது.
விராட் கோலி, ஷாரூ கான், அக்ஷய் குமார் என்கிற பெயர்கள் எல்லாம் வெறும் பெயர்கள் அல்ல... அவைகள் எல்லாமே இன்றைய வர்த்தக உலகில் ஒரு தனி பிராண்டுகள்.
பணம்
பிராண்ட் என்றாலே பணம் தானே. இப்படி தங்கள் பெயரின் பிராண்டைப் பயன்படுத்தி பாலிவுட் நடிகர்கள் நடிகைகள் தொடங்கி, விளையாட்டு வீரர்கள் வரை பலரும் காசு சம்பாதித்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். பெரும்பாலும் தங்கள் பெயரின் பிராண்ட் மற்றும் பிரபலமாக இருப்பதைப் பயன்படுத்தி விளம்பரங்கள் வழியாக நிறைய சம்பாதிக்கிறார்கள்.
பட்டியல்
இப்படி இவர்களின் பிராண்ட் மதிப்பை அடிப்படையாகக் கொண்டு, இந்திய நடிகர்கள், நடிகைகள், விளையாட்டு வீரர்கள் பட்டியலை Duff & Phelps' என்கிற நிறுவனம் Duff & Phelps' celebrity brand valuation report என்கிற பெயரில் வெளியிட்டு இருக்கிறார்கள். இந்த பட்டியலில் யார் எல்லாம் இடம் பிடித்து இருக்கிறார்கள் தெரியுமா..?
நடிகர்கள்
பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் 104.5 மில்லியன் டாலர் பிராண்ட் மதிப்புடன் இரண்டாவது இடத்திலும், ரன்வீர் சிங் 93.5 மில்லியன் டாலருடன் மூன்றாவது இடத்திலும், 66.1 மில்லியன் பிராண்ட் மதிப்புடன் பாலிவுட்டின் காதல் மன்னனான ஷாரூ கான் ஐந்தாவது இடத்திலும் இருக்கிறார்களாம்.
சூப்பர் ஸ்டார்கள்
பாலிவுட்டின் சூப்பர் ஸ்டார்களான அமிதாப் பச்சன் 42.5 மில்லியன் டாலர் பிராண்ட் மதிப்புடன் 8-வது இடத்திலும், சல்மான் கான் 55.7 மில்லியன் டாலருடன் 6-வது இடத்திலும் இருக்கிறார்கள். ஆமிர் கான் 24.9 மில்லியன் டாலர் பிராண்ட் மதிப்புடன் 16-வது இடத்தில் இருக்கிறார்.
நடிகைகள்
பத்மாவதி, சபக் போன்ற பாலிவுட் படங்களில் சிறப்பாக நடித்து இருக்கும் தீபிகா படுகோனே 93.5 மில்லியன் பிராண்ட் மதிப்புடன் 3-வது இடத்தில் இருக்கிறார். கடந்த சில வருடங்களாக தன் நடிப்புத் திறமையால் வளர்ந்து வரும் ஆலியா பட் 45.8 மில்லியன் பிராண்ட் மதிப்புடன் 7-வது இடத்தில் இருக்கிறார். இந்த பட்டியலின் டாப் 10 இடங்களில் இந்த இரண்டு பெண்கள் மட்டுமே இடம் பிடித்து இருக்கிறார்கள்.
புது வரவு
ஆர்டிகள் 15, பாலா, அந்தா துன் போன்ற பாலிவுட் படங்களால் இந்தியா முழுக்க கவனம் ஈர்த்த ஆயுஷ்மான் குரானா 40.3 மில்லியன் டாலர் பிராண்ட் மதிப்புடன் 10-வது இடம் பிடித்து இந்தப் பட்டியலில் புதிதாக சேர்ந்து இருக்கிறார். தன் அட்டகாச ஸ்டண்ட்களாலேயே அனைவரையும் ஈர்த்த டைகர் ஸ்ராஃப் 24.2 மில்லியன் டாலர் பிராண்ட் மதிப்புடன் 17-வது இடம் பிடித்து இந்த பட்டியலில் புது வரவாகி இருக்கிறார்.
விருஷ்கா ஜோடி
இந்திய கிரிக்கெட் அணியின் தலைவரான விராட் கோலி கடந்த 2019-ம் ஆண்டில் அவரின் பிராண்ட் மதிப்பு 237.5 மில்லியன் டாலருக்கு அதிகரித்து இருக்கிறது. அதிக பிராண்ட் மதிப்பு கொண்ட இந்தியனாகவும் வலம் வருகிறார். அதே 2019-ம் ஆண்டில் அவரின் மனைவி அனுஷ்கா சர்மாவின் பிராண்ட் மதிப்பு 23.9 மில்லியனாக அதிகரித்து இருக்கிறதாம். மனைவியை விட 10 மடங்கு அதிகம் பிராண்ட் மதிப்பு இருக்கு பாருங்களேன்.
மற்றவர்களுக்கு இடம் இல்லை
Duff & Phelps' celebrity brand valuation report-ல், கிரிக்கெட் வீரர்கள், பாலிவுட் நடிகர்கள் மற்றும் நடிகைகளைத் தவிர வேறு ஒருவருக்கும் இடம் இல்லை என்பதைத் தெளிவாகப் பார்க்க முடிகிறது. இந்தியா முழுக்க பிரபலமான, கிரிக்கெட்டின் மிதாலி ராஜ், டென்னிஸின் சானியா மிர்ஸா, பேட்மிண்டனின் சிந்து என யாருமே இடம் பிடிக்கவில்லை. இன்னும் இந்தியாவில் கிரிக்கெட்டும், சினிமாவும் தான் பெரிய சக்திகள்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications