சென்னை: அன்னையர் தினத்தன்று உணவு விநியோகத் தளமான Zomato மற்றும் வர்த்தகத் தளமான Swiggy Instamart, புத்தாண்டு அன்று தங்களுக்கு வந்த ஆர்டர்களை விட நேற்று வந்த ஆர்டர்கள் அதிகரித்துள்ளதாக அறிவித்துள்ளது.
நேற்று அன்னையர் தினம் என்பதால் பலரும் தங்களுடைய அம்மாக்களுக்கு அவர்களுக்கு பிடித்த கிப்ட்டுகள் மற்றும் அவர்களுக்கு தேவையானவற்றை வாங்கி தருவதில் ஆர்வமாக இருந்திருப்பார்கள். அந்த வகையில் Zomato மற்றும் Swiggy Instamart போன்ற தளங்கள் அதிக அளவில் ஆர்டர்கள் பெற்று, விற்பனை செய்ததாகக் கூறப்படுகிறது. அதிலும் குறிப்பாக சாக்லேட்கள், ஹேண்ட் பேக்குகள், பர்ஃப்யூம்கள் போன்ற பொருட்கள் அதிக அளவில் ஆர்டர் செய்ய பட்டதாகக் கூறப்படுகிறது.

முதன்முறையாக புத்தாண்டை விட அன்னையர் தினத்தில் அதிக அளவு ஆர்டர்கள் கிடைத்ததாக Zomato நிறுவனத்தின் இணை நிறுவனரும் தலைமை நிர்வாக அதிகாரிமான தீபிந்தர் கோயல், தனது அதிகாரப்பூர்வ X பிளாட்பார்மில் தெரிவித்துள்ளார்.
ஸோமேட்டோவின் பிளின்கிட் மற்றும் ஸ்விக்கி இன்ஸ்டாமார்டில் சாக்லேட்கள், ஹேண்ட் பேக்குகள், பர்ஃப்யூம்கள், ரோஜா பூக்கள் போன்ற பொருட்களுக்கான தேவை அதிகரித்ததாகவும் மற்றும் நேற்றைய தினம் அவை அதிக ஆர்டர்கள் பெற்றதாகவும் கூறப்படுகிறது.
பெரும்பாலும் வேலைக்குச் செல்லும் அம்மாக்கள், விரும்பி வாங்கும் பொருட்களில் ஒன்று ஹேண்ட் பேக்குகள் தான். அவை நேற்று அதிக அளவில் விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.
அன்னையர் தினத்தன்று எங்கள் விற்பனையாளர்களுடன் இணைந்து வேலை செய்து பிளின்கிட்டில் ஹேண்ட் பேக்குகளைப் பெற்று விற்பனை செய்தது மகிழ்ச்சி" என்று பிளின்கிட்டின் தலைமை நிர்வாகி அல்பிந்தர் திந்த்சா தனது அதிகாரப்பூர்வ X பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
அதேபோல பிளின்கிட்-இல் ஸ்மார்ட் வாட்ச்கள், நகைகள் மற்றும் பர்ஃப்யூம்கள் முதல் முறையாக அன்னையர் தினத்தன்று விற்பனை அதிகரித்துள்ளது என்றும், பூங்கொத்துகளின் விற்பனை அதிகரித்ததாகவும் திந்த்சா கூறியுள்ளார்.
ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட்டின் தலைமை நிர்வாகி ஃபானி கிஷன் கருத்துப்படி, ஒவ்வொரு நகரங்களிலும் ஆர்டர்கள் வேறுபடுகின்றன. பெங்களூர் மற்றும் மும்பையில் ரோஜாக்கள் தான் முதன்மையான தேர்வாக இருந்தது. அதேபோல டெல்லியில் சாக்லேட்களை அதிகம் வாங்கியுள்ளனர். ஹைதராபாத்தில் வெவ்வேறு வகையான தாவரங்களைத் தேர்ந்தெடுத்து வாங்கியுள்ளனர். சென்னையில் கேக்குகள் தான் அதிக அளவில் ஆர்டர் செய்யப்பட்டது. கொல்கத்தாவில் வாசனை திரவியங்கள் தான் அதிக அளவில் ஆர்டர் செய்யப்பட்டது என்று கூறியுள்ளார்.
இதிலிருந்து ஒன்று மட்டும் தெளிவாக தெரிகிறது, ஒவ்வொரு ஊரிலும் தேர்வு செய்யப்பட்ட பொருட்கள் தான் மாறுபடுகின்றன. ஆனால் தங்களின் அம்மாக்களுக்கு ஏதோ ஒரு வடிவில் அன்பை செலுத்தும் விதமாக, அவர்களுடைய மகன்கள் மற்றும் மகள்கள் ஏதோ ஒரு பொருளை வழங்கி உள்ளனர்.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications