சென்னை: இந்தியாவில் ஸ்மார்ட்போன் உற்பத்தி நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வேளையில், ஆப்பிள் பிராண்டுக்கு முக்கிய உற்பத்தி ஹப் ஆக மாறியுள்ளது தமிழ்நாடு. இதேவேளையில் ஆப்பிள் தனது உற்பத்தியைச் சீனாவில் இருந்து மொத்தமாக வெளியேற்ற வேண்டும் என்ற முக்கிய இலக்கில் இருக்கும் நிலையில் இதற்குத் தமிழ்நாடு பக்கபலமாக நிற்கிறது.
உலகின் மிகப்பெரிய ஸ்மார்ட்போன் கிளாஸ் சப்ளையர்களில் ஒன்றான ஹாங்காங் நாட்டை தலைமையிடமாகக் கொண்ட BIEL கிரிஸ்டல் மானுஃபாக்சரிங் நிறுவனம் சென்னையில் மாபெரும் தொழிற்சாலையை அமைக்க உள்ளது. இந்தியாவில் சீன நிறுவனங்களுக்கு முதலீடு செய்யவும், தனிப்பட்ட முறையில் தொழிற்சாலையை அமைப்பதற்கும் மத்திய அரசு தொடர்ந்து அனுமதி மறுத்து வரும் வேளையில் இந்த ஹாங்காங் நிறுவனம் மாபெரும் இந்த வர்த்தக சாம்ராஜ்ஜியத்துடன் இணைந்து இத்தொழிற்சாலையை அமைக்க உள்ளது.

இந்தியாவில் குறிப்பாகத் தமிழ்நாட்டில் வேகமாக வளர்ந்து வரும் ஆப்பிள் சப்ளை செயின் நெட்வொர்க்கில் BIEL கிரிஸ்டல் நிறுவனம் இணைவது மட்டும் அல்லாமல் மோதர்சன் குழுமம் உடன் இணைந்து இத்தொழிற்சாலையைச் சென்னைக்கு அருகே இருக்கும் ஸ்ரீபெரும்புதூரில் அமைக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாட்டில் இதுவரையில் ஆப்பிள் சப்ளை செயின் நெட்வொர்க்கில் இணைந்த ஒரே இந்திய நிறுவனம் டாடா எலக்ட்ரானிக்ஸ் மட்டுமே, இந்த நிலையில் 2வது இந்திய சாம்ராஜ்ஜியமாக விவேக் சாந்த் சேகால் தலைமையிலான ஆட்டோமொபைல் உதிரிபாகங்களைத் தயாரிக்கும் மதர்சன் குரூப் முதல் முறையாக ஸ்மார்ட்போன் உற்பத்தி துறையில் இணைந்துள்ளது.
மதர்சன் குரூப் மற்றும் BIEL கிரிஸ்டல் 51:49% கூட்டணியில், தமிழ்நாட்டில் சுமார் ரூ.2,000-2,500 கோடி முதலீட்டில் புதிய உற்பத்தி ஆலையை அமைக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த தொழிற்சாலை திட்டமிட்டபடி கட்டமைக்கப்பட்டு இயங்கினால் அடுத்த நான்கு-ஐந்து ஆண்டுகளில் ரூ.8,000-8,500 கோடி வருவாய் ஈட்டும் உற்பத்தி தளமாக மாறும். இந்த தொழிற்சாலையில் கட்டுமான பணி ஜூலை-செப்டம்பர் காலாண்டில் செயல்பாட்டுக்கு வரவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
1989 ஆம் ஆண்டில் சீனாவின் ஷென்ஜென் மாகாணத்தில் சீன பில்லியனரான யுங் கின்-மன் நிறுவியது தான் BIEL, இந்த நிறுவனம் முதலில் வாட்ச் கிரிஸ்டல்களை தயாரித்தது. இதை தொடர்ந்து 2000ஆம் ஆண்டின் முற்பகுதியில், உலகளவில் விற்கப்படும் ஸ்மார்ட்போன்களில் பெரும்பாலும் பிளாஸ்டிக் கண்ணாடிகள் பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில் BIEL நிறுவனம் தான் ஸ்மார்ட்போன்களுக்கு கண்ணாடி திரைகளின் முதலில் உற்பத்தி செய்யப்பட்ட முக்கியமான நிறுவனங்களில் ஒன்று. BIEL தற்போது ஒவ்வொரு மூன்றில் ஒரு ஐபோன்களுக்கும் ஸ்கிரீன் கிளாஸ் உற்பத்தி செய்கிறது.
BIEL நிறுவனம் சீனாவின் குவாங்டாங் மற்றும் வியட்நாமின் பாக் நிங், ஹை துவோங் ஆகிய பகுதிகளில் தொழிற்சாலைகள் இருக்கும் வேளையில் இந்தியாவில் முதல் தொழிற்சாலையைச் சென்னையில் துவங்க உள்ளது. ஆப்பிள் நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட சப்ளையர்கள் பட்டியலில் BIEL நிறுவனமும் உள்ளது.
BIEL நிறுவனம் ஸ்கிரீன் கிளாஸ் மட்டும் அல்லாமல் சாம்சங், சியோமி மற்றும் Lenovo உள்ளிட்ட நிறுவனங்களுக்கும் ஸ்மார்ட்போன்கள், டேப்லெட் மற்றும் ஸ்மார்ட்வாட்ச்-களுக்கான உதிரிப்பாகங்களையும் தயாரித்து வழங்குகிறது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!



Click it and Unblock the Notifications