ரோல்ஸ் ராய்ஸ் காரை அசால்டாக வாங்க முடியும்! ஆனா, டாடா சஃபாரி கார் வாங்கியிருக்கார் மோதிலால் ஓஸ்வால்..ஏன்..?

பங்குசந்தை வர்த்தகத்தில் முன்னோடியான மோதிலால் ஓஸ்வால் சமீபத்தில் ஒரு வாழ்க்கை முறை மாற்றத்தை அறிவித்தார். இவரது முடிவு ஆடம்பர வாழ்க்கை வாழ வேண்டும் என நினைப்பவர்களுக்கு பெரும் அதிர்ச்சியாக உள்ளது.

வெளிநாட்டு ஆடம்பர பிராண்டுகளில் கார்கள் மற்றும் கைக்கடிகாரங்கள் போன்ற பொருட்களை கைவிடுவதாக தனது புதிய நிலைப்பாட்டை தெரிவித்தார்.

ரோல்ஸ் ராய்ஸ் காரை அசால்டாக வாங்க முடியும்! ஆனா, டாடா சஃபாரி கார் வாங்கியிருக்கார் மோதிலால் ஓஸ்வால்.

ஓஸ்வால் ஃபைனான்சியல் சர்வீசஸ் லிமிடெடின் சிஇஓ மற்றும் நிர்வாக இயக்குநராக மோதிலால் ஓஸ்வால் உள்ளார். ஆடம்பர பொருட்களை வாங்குவது இவருக்கு பெரிய விஷயமே இல்லை, ஆனாலும் மினிமலிஸ்டிக் வாழ்க்கை தேர்ந்தெடுத்துள்ள காரணத்தால், டாடா சஃபாரி காரை வாங்கியுள்ளார்.

மோதிலால் ஓஸ்வால் தனது புதிய டாடா சஃபாரி கார் புகைப்படத்தை எக்ஸில் பகிர்ந்துள்ளார். அவரது அடுத்த வாகனம் மஹிந்திரா குழுமத்திடம் இருக்கும் என்றும் கூறியுள்ளார்.

மினிமலிஸ்டிக் மற்றும் எளிமையான வாழ்க்கைக்கான எனது நோக்கத்தில், நான் இப்போது சிக்கனமாக மாறியுள்ளேன். வெளிநாட்டு கார்கள், கடிகாரங்கள் மற்றும் பிற ஆடம்பரங்களை வாங்குவதை நிறுத்தி விட்டேன்.

உலகத்தரம் வாய்ந்த இந்திய தயாரிப்புகள் இப்போது கிடைக்கின்றன. எனது டாடா சஃபாரியில் தொடங்கப்பட்ட இந்த புதிய மினிமலிஸ்டிக் வாழ்க்கை முறையில் அடுத்ததாக மஹிந்திரா வாகனம் இருக்கும். உள்ளூர் மக்களுக்கும், உள்நாட்டு நிறுவனங்களுக்கு ஆதாரவு கொடுப்போம் என்று அவர் எக்ஸில் பதிவிட்டுள்ளார்.

மோதிலால் ஓஸ்வால் தனது எக்ஸ் பதிவில் Vocal for local என குறிப்பிட்டு தொழிலதிபர்கள் ரத்தன் டாடா, ஆனந்த் மஹிந்திரா, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் டாடா மோட்டார்ஸ் ஆகியோரையும் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட உள்ளூர் பொருட்களைப் பயன்படுத்துவதையும் வாங்குவதையும் ஊக்குவிப்பதற்காக பிரதமர் மோடியால் "Vocal for locaL" என்ற முழக்கம் வெளியிடப்பட்டது.
2020 இல் தனது சுதந்திர தின உரையை ஆற்றும் போது "Vocal for local" மந்திரத்தை ஏற்குமாறு மக்களை மோடி முதலில் ஊக்குவித்தார்.

ஓஸ்வாலின் இந்த கூற்று, பிரதமர் நரேந்திர மோடியின் இலக்கான "ஆத்மநிர்பர் பாரத்" அல்லது சுயசார்பு இந்தியாவுக்கான ஆதரவாக தோன்றினாலும், சமூக ஊடகப் பயனர்களில் பெரும் பகுதியினர் ஓஸ்வாலின் கருத்தால் முழுமையாக ஈர்க்கப்படவில்லை.

கோடீஸ்வரர் டாடா சஃபாரிக்குப் போகிறார் என்றும், அதன் பிறகு மஹிந்திரா வாகனத்தை அடுத்ததாக வாங்குவார் என்றும் அவர் கூறியது போல் "மினிமலிஸ்டிக் மற்றும் எளிமையான வாழ்க்கை" என்பதன் சாரத்தை உண்மையில் பிரதிபலிக்கவில்லை என்று பல பயனர்கள் கருதுகின்றனர்.

30-40 லட்சம் மதிப்புள்ள எஸ்யூவியை வாங்கிவிட்டு உங்களை மினிமலிஸ்ட் என்று அழைக்கிறீர்கள். நீங்கள் எளிமையானவர் தான் என்று ஒரு எக்ஸ் கேலியாகக் கூறியுள்ளார்.

மற்றொரு பயனரான ஷாஜன் சாமுவேல், மோதிலால் ஓஸ்வாலிடம் அவர் ஏன் ஒரு எஸ்யூவியை வாங்கத் தேர்ந்தெடுத்தார் என்றும் மாருதி ஸ்விஃப்ட் போன்ற சிறிய ஹேட்ச்பேக்கை வாங்கவில்லை என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஓஸ்வால் 1987 இல் மோதிலால் ஓஸ்வால் நிதிச் சேவை நிறுவனத்தை இணை ப்ரோமோட்டராக ராம்தியோ அகர்வாலுடன் இணைந்து தொடங்கினார். ராஜஸ்தானின் பார்மரில் ஒரு மார்வாரி குடும்பத்தில் பிறந்த ஓஸ்வால், மும்பைக்கு குடிபெயர்ந்தார். அங்கு அவர் சார்ட்டர்டு அக்கவுன்டன்ட் படிப்பை முடித்தார், இன்று நாட்டின் முக்கிய பணக்காரர்களில் ஒருவராக உள்ளார்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+