சென்னை: மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வதற்கு முன், அந்த ஃபண்ட்-இன் முழு விவரங்களைப் பற்றித் தெரிந்து கொள்வது அவசியம். குறிப்பாக, திட்டத்தின் வகை, ஃபண்ட் ஹவுஸின் நற்பெயர் மற்றும் அதை திறம்பட நிர்வகிக்கும் நிதி மேலாளர்கள் குறித்த விவரங்களையும் ஆராய வேண்டும். அப்பொழுதுதான் நீங்கள் செய்யும் முதலீட்டிற்கு அதிக வருமானம் பெற முடியும். அந்த வகையில் கடந்த 10 ஆண்டுகளில் திறம்பட செயல்பட்ட ஒரு ஃபண்டின் விவரங்கள் குறித்து தான், இந்தப் பதிவில் பார்க்க உள்ளோம்.
மோதிலால் ஓஸ்வால் அசெட் மேனேஜ்மென்ட் கம்பெனியின் முக்கிய முதலீட்டு திட்டமான, மோதிலால் ஓஸ்வால் ஃப்ளெக்ஸி கேப் ஃபண்ட், கடந்த ஏப்ரல் 28ஆம் தேதி அன்று, அது அறிமுகப்படுத்தப்பட்ட 10வது ஆண்டை நிறைவு செய்துள்ளது.

கடந்த பத்தாண்டுகளில், இந்த ஃபண்ட் சராசரியாக ஆண்டுக்கு 18.66 சதவீத வருமானத்தைப் பெற்றுத்தந்துள்ளது. உதாரணமாக, நீங்கள் 10 ஆண்டுகளுக்கு முன்பு ஒரே தொகையாக ரூ.10,000 முதலீடு செய்திருந்தால், அது இப்போது ரூ.55,540 ரூபாயாக இருக்கும்.
இதேபோல், SIP மூலம் முதலீடு செய்தவர்களுக்கு, மோதிலால் ஓஸ்வால் ஃப்ளெக்ஸி கேப் ஃபண்ட், சராசரியாக 15.63 சதவிகித ஆண்டு வருமானத்தை அளித்துள்ளது. உதாரணமாக, கடந்த 10 ஆண்டுகளில், SIP மூலம் நீங்கள் மாதம் ரூ.10,000 முதலீடு செய்திருந்தால் ரூ. 29 லட்சமாக ரிட்டர்ன்ஸ் கிடைத்திருக்கும்.
இந்த ஃபண்ட் தொடங்கியதில் இருந்து நல்ல வருமானத்தை அளித்து வருகிறது. அதனால் முதலீட்டாளர்களுக்கு பிரபலமான விருப்பமாக உள்ளது என்று மோதிலால் ஓஸ்வால் நிறுவனம் தெரிவித்துள்ளது.
மோதிலால் ஓஸ்வால் ஃப்ளெக்ஸி கேப் ஃபண்டில், சுமார் ரூ. 9,660 கோடிக்கும் அதிகமாக முதலீடு செய்யப்பட்டுள்ளது. இந்தத் தொகையானது, முதலீட்டாளர்களிடையே ஓஸ்வால் ஃப்ளெக்ஸி கேப் ஃபண்ட் எவ்வளவு நம்பிக்கைக்குரியதாக இருக்கிறது என்பதை சுட்டிக்காட்டுகிறது.

இது குறித்து பேசிய, மோதிலால் ஓஸ்வால் அசெட் மேனேஜ்மென்ட் நிறுவனத்தின் MD & CEO பிரதீக் அகர்வால், "நாங்கள் முதலீட்டாளர்களுக்கு உதவும் வகையில் வாய்ப்புகளை வழங்குகிறோம், எங்கள் நிதி மேலாளர் நீண்ட கால வளர்ச்சிக்கு ஏற்ப முதலீடுகளைத் திறமையாக நிர்வகிக்கிறார். நாங்கள் ஒழுக்கமான செயல்முறையைப் பின்பற்றி வேலை செய்கிறோம். இதன் மூலம் நிலையான வளர்ச்சி அடைவதற்கு முயற்சிக்கிறோம்" என்று கூறியுள்ளார்.
ஃபண்டின் போர்ட்ஃபோலியோவை நிகேத் ஷா துல்லியமாக வழிநடத்துகிறார். அவரது தனித்துவமான முதலீட்டு உத்திகள், ஃப்ளெக்ஸி கேப் ஃபண்டின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்ததாக நிறுவனம் தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications