இந்தியாவில் வாகனங்களை வாங்கும்போது அதற்கென நாம் காப்பீடு வாங்குவது கட்டாயம் . இவ்வாறு நாம் வாகன காப்பீடு வாங்கும்போது Third party இன்சூரன்ஸுக்கான பிரீமியம் தொகையும் நாம் செலுத்த வேண்டும்.
மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் மோட்டார் Third party இன்சூரன்ஸ் என்பது இந்தியாவில் கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது. இந்தியாவில் கார் ,பைக் வைத்திருக்கும் அனைவரும் கட்டாயம் இந்த இன்சூரன்ஸுக்கும் பிரீமியம் செலுத்த வேண்டும். காப்பீடு செய்யப்பட்ட வாகனத்தால் ஏற்படும் விபத்துகளில் மூன்றாம் தரப்பினர்( தனிநபரோ அல்லது தனிநபர் சொத்தோ ) பாதிக்கப்படும்போது அதற்கு நிதி உதவி வழங்குவதற்காக தான் இந்த மூன்றாம் தரப்பு காப்பீடு என்பது போடப்படுகிறது.

இதற்கான பிரீமியம் தொகை 25% வரை உயர்த்துவதற்கு வாய்ப்புள்ளதாக சிஎன்பிசி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பிடுகிறது. இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையமான ஐஆர்டிஏஐ அளித்துள்ள பரிந்துரையின் அடிப்படையில் மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சகம் இந்த மோட்டார் Third party இன்சூரன்ஸ் பிரீமியங்களை உயர்த்தும் அறிவிப்பை விரைவில் வெளியிட இருப்பதாக சொல்லப்படுகிறது.
சராசரியாக 18 சதவீதம் தொடங்கி 25 சதவீதம் வரை இந்த மூன்றாம் தரப்பு இன்சூரன்ஸ் பிரிமியம் தொகையை உயர்த்த வேண்டும் என அந்த பரிந்துரையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அடுத்த இரண்டிலிருந்து மூன்று வாரங்களுக்குள் இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என சிஎன்பிசி செய்தி குறிப்பிடுகிறது. கடந்த நான்கு ஆண்டுகளாக இந்தியாவில் மூன்றாம் தரப்பு இன்சூரன்ஸ் பிரீமியம் தொகையில் எந்த ஒரு மாற்றமும் இல்லாமலேயே வசூல் செய்யப்பட்டு வருகிறது.
இதனால் மூன்றாம் தரப்பு காப்பீடு வழங்கும் நிறுவனங்கள் பெரிய அளவில் நஷ்டம் அடைவதாக சொல்லப்படுகிறது. மருத்துவ செலவினங்கள் அதிகரித்திருப்பது, சாலையில் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பது உள்ளிட்டவற்றை காரணமாக கூறி காப்பீடு வழங்கக்கூடிய நிறுவனங்கள் ஐஆர்டிஏ விடம் இந்த மூன்றாம் தரப்பு காப்பீட்டு பிரீமியம் தொகை உயர்த்த வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை வைத்தன.
மூன்றாம் தரப்பு காப்பீடுக்கு பெற்ற பிரீமியம் மற்றும் செலுத்திய காப்பீடு தொகையை ஒப்பிட்டாள் தங்களுக்கு பெரிய நஷ்டம் ஏற்படுவதாக இந்த நிறுவனங்கள் கூறுகின்றனவாம். 2025ஆம் நிதியாண்டில் இந்த நஷ்டம் என்பது நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் காப்பீட்டு நிறுவனத்திகு 108 சதவீதம் வரை இருக்கிறது. ஐசிஐசிஐ லொம்பார்டு நிறுவனத்திற்கு 64.2% என இருக்கிறது.
எனவே மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சகம் இந்த மூன்றாம் தரப்பு காப்பீட்டு பிரீமியம் தொகையை உயர்த்தினால் அது வாடிக்கையாளரான நமக்கு தான் பெரும் சுமையாக மாறும். காப்பீடுகளுக்கு ஜிஎஸ்டி உள்ளிட்டவற்றை குறைக்க வேண்டும் என அனைவரும் கோரி வரும் நிலையில் அதற்கு மாறாக பிரீமியத்தை உயர்த்தும் நடவடிக்கை ஏற்க தக்கது அல்ல என பலரும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications