சென்னை: இந்தியாவிக் வாகனங்களை வாங்குபவர்கள் அதற்கான காப்பீடு எடுப்பதும் கட்டாயமாக இருக்கிறது. இப்படி நாம் வாகன காப்பீடு வாங்கும்போது அதில் third party insurance எனப்ப்டும் மூன்றாம் தரப்பு இன்சூரன்ஸ் என ஒன்று சேர்க்கப்படுகிறது.
காப்பீடு செய்யப்பட்ட வாகனத்தால் ஏற்படக்கூடிய விபத்துகளில் மூன்றாம் தரப்பினர் அவர் தனிநபரோ அல்லது தனிநபர் சொத்தோ பாதிக்கப்படும்போது அதற்கு காப்பீடு தொகை வழங்குவதற்காக தான் இந்த மூன்றாம் தரப்பு காப்பீடு என்பது சேர்க்கப்படுகிறது. இந்த மூன்றாம் தரப்பு காப்பீட்டுக்கான பிரீமியம் தொகையை 10% வரை உயர்த்துவதற்கு அரசு திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சகமும் இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை அமைப்பான ஐஆர்டிஏஐ, மூன்றாம் தரப்பு மோட்டார் காப்பீடுகளுக்கான பிரீமியம் தொகையை 10% வரை உயர்த்துவது தொடர்பாக ஆலோசனை நடத்தி வருகிறது. அனைத்து வாகனங்களுக்கும் ஒரே மாதிரியாக மூன்றாம் தரப்பு காப்பீடு பிரிமியத்தை உயர்த்தாமல் கனரக வாகனங்களுக்கு அதிகபட்சம் மற்றும் வாகனத்தின் தன்மையை பொறுத்து பிரீமியம் தொகையை உயர்த்தலாம் என ஆலோசிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
எக்கனாமிக் டைம்ஸுக்கு அரசு அதிகாரிகள் இந்த தகவலை வெளியிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி வாகனங்கள் உள்ளிட்டவற்றுக்கு இந்த பிரீமியம் தொகை என்பது குறைந்த சதவீதம் மட்டுமே உயர்த்தப்படும் எனவும் சொல்லப்படுகிறது. முன்னதாக காப்பீட்டு நிறுவனங்கள் மத்திய அரசு மற்றும் ஐஆர்டிஏஐ இடம் மூன்றாம் தரப்பு மோட்டார் காப்பீடுகளுக்கான பிரீமியம் தொகையை 5 முதல் 15 சதவீதம் வரை உயர்த்த வேண்டும் என கோரிக்கை முன்வைத்தனர் .
இந்த மூன்றாம் தரப்பு காப்பீட்டில் தங்களுக்கு பல மடங்கு நஷ்டம் ஏற்படுவதாகவும் இதன் காரணமாக பிரீமியம் தொகை உயர்த்த வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர் . கடந்த நான்கு ஆண்டுகளாக இந்தியாவில் மூன்றாம் தரப்பு இன்சூரன்ஸ் பிரீமியம் தொகையில் எந்த ஒரு மாற்றமும் இல்லாமலேயே வசூல் செய்யப்பட்டு வருகிறது. எனவே அதனை உயர்த்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
இந்தியாவில் 1000 சிசி வரையிலான என்ஜின் கார்களுக்கு 2,100 ரூபாய் என மூன்றாம் தரப்பு காப்பீட்டு பிரீமியம் வசூல் செய்யப்படுகிறது. 1000 முதல் 1500 சிசி வரையிலான கார்களுக்கு 3,400 ரூபாயாக இருக்கிறது. 2024 ஆம் நிதி ஆண்டில் காப்பீட்டு நிறுவனங்கள் மூன்றாம் தரப்பு மோட்டார் வாகன பிரிமியம் தொகையாக மட்டும் 54, 455 கோடி ரூபாயை பெற்றுள்ளன. வரும் அக்டோபர் மாதத்தில் இருந்து இந்த காப்பீடு பிரிமியம் உயர்வதற்கான வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது. இவ்வாறு பிரீமியம் தொகை உயர்த்தினால் வாகன உரிமையாளர்களுக்கு தான் கூடுதல் நிதி சுமையை ஏற்படுத்தும்.
More From GoodReturns

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!

தமிழ்நாட்டில் விவசாயம் செய்யும் மாதவன்!! தரிசு நிலத்தை தென்னந்தோப்பாக மாற்றி சாதனை!!

கடந்த ஆண்டு அட்சய திருதியை-இல் ஒரு சவரன் நகை வாங்கி இருந்தால் இன்று அதன் மதிப்பு என்ன தெரியுமா?

ஸ்டாலினை விட விஜய்க்கு தான் போட்டி அதிகம்!! பரபரக்கும் தமிழக சட்டமன்ற தேர்தல் களம்!!



Click it and Unblock the Notifications