பெங்களூரு: நகர்ப்புறங்களில் வசிக்கும் மக்களுக்கு மிகப்பெரிய பொழுது போக்காக இருப்பவை திரைப்படங்கள். பெங்களூர் போன்ற ஒரு நகரத்தில் சராசரியாக நான்கு பேர் கொண்டு ஒரு குடும்பம் ஒரு மாலுக்கு சென்று திரைப்படம் பார்க்க வேண்டும் என்றால் குறைந்தபட்சம் 2000 ரூபாய் செலவு செய்ய வேண்டியிருக்கிறது.
டிக்கெட் கட்டணம்: ஒரு பெரிய நடிகரின் திரைப்படம் என்றால் முதல் நாள் காட்சியின் போது டிக்கெட்டின் விலை பல மடங்கு அதிகமாக இருக்கும், அதே போல வார இறுதி நாட்கள் அதிக டிமாண்ட் இருக்கக்கூடிய நாட்களிலும் டிக்கெட்டுகளின் விலை அதிகமாக இருக்கிறது. 3டி, ஐமேக்ஸ் என்ற பெயர்களிலும் டிக்கெட்டை அதிகமாக வசூல் செய்கின்றனர். சினிமாவிற்கான டிக்கெட் மட்டுமல்லாமல் பாப்கார்ன் உள்ளிட்ட தின்பண்டங்களுக்கான கட்டணம் உள்ளிட்டவையும் சேர்த்து இந்த பொழுதுபோக்குக்கு நாம் அதிக செலவிட வேண்டிய சூழலில் இருக்கிறோம்.

கர்நாடக அரசு அறிவிப்பு: இந்த நிலையில் தான் கர்நாடக மாநில அரசு மிக முக்கியமான ஒரு விஷயத்தை நடைமுறைக்கு கொண்டு வந்திருக்கிறது. இதன்படி கர்நாடக மாநிலத்தில் மல்டிபிளக்ஸ் உள்பட அனைத்து திரையரங்குகளிலும் டிக்கெட் கட்டணம் 200 ரூபாய் தான் என அறிவித்த்துள்ளது. கர்நாடக மாநிலத்தில் பெங்களூரு உட்பட அனைத்து பகுதிகளிலும் மல்டிபிளக்ஸ் உள்ளிட்ட அனைத்து திரையரங்குகளிலும் இனி சினிமாவிற்கான டிக்கெட் கட்டணம் 200 ரூபாய் தான். இத்துடன் வரிகள் சேர்த்து வசூல் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
எந்த தியேட்டருக்கு பொருந்தாது: 75 இருக்கைகள் மற்றும் அதற்கும் குறைவாக இருக்கைகளை கொண்ட மல்டி ஸ்க்ரீன் தியேட்டர்கள் பிரீமியம் வசதிகள் தரும் தியேட்டர்களுக்கு இந்த 200 ரூபாய் டிக்கெட் கட்டணம் என்பது பொருந்தாது , அவர்கள் அந்த வசதிகளுக்கு ஏற்ப கட்டணம் வசூலிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. கர்நாடக மாநில அரசு இதற்காக கர்நாடக சினிமா கட்டுப்பாடு விதிமுறைகளில் மாற்றத்தை கொண்டு வந்திருக்கிறது.
கருத்து கேட்டு முடிவு: முன்னதாக கடந்த ஜூலை மாதமே கர்நாடக மாநில அரசு இந்த சட்ட திருத்தத்திற்கான வரைவினை கொண்டு வந்தது. பொதுமக்கள் மற்றும் திரைத்துறையினர் மற்றும் திரையரங்கு உரிமையாளர்களின் கருத்துகள் கேட்கப்பட்டன. அப்போதே அரசு சினிமா டிக்கெட் கட்டணம் 200 ரூபாய்க்கு மேல் வசூல் செய்யக்கூடாது என மாற்றம் கொண்டு வருவதாக அறிவிப்பும் வெளியிட்டு இருந்தது. இதனை அடுத்து பல்வேறு தரப்பினரின் கருத்துக்களையும் கேட்டு ஆய்வு செய்து இந்த புதிய சட்டத்தை நடைமுறைப்படுத்தி இருக்கிறது.
ரூ.200 தான் டிக்கெட் கட்டணம்: இந்த சட்டத்தை பொறுத்தவரை திரையரங்கு உரிமையாளர் தரப்பில் இதற்கு எதிர்ப்பு இருந்ததாகவே தெரிகிறது. குறிப்பாக மல்டிபிளக்ஸ் திரையரங்கு உரிமையாளர் பிரீமியம் வசதிகளை தருகிறோம் அதற்கேற்ப தானே கட்டணம் வசூலிக்க முடியும் 200 ரூபாய் என அதனை குறைப்பது சாத்தியமில்லை என கூறியதாக சொல்லப்படுகிறது.
வாரா வாரம் சினிமா தான்: இந்த சூழலிலும் அரசு இந்த சட்டத்தை கொண்டு வந்துள்ளது. இதன் மூலம் கர்நாடக மாநிலத்தில் மல்டிபிளக்ஸ் சென்று திரைப்படம் பார்ப்பதற்கான செலவுகள் இனி கணிசமான அளவு குறையும் . நல்ல ஆடம்பர வசதி கொண்ட சினிமா தியேட்டர்களுக்கு இந்த 200 ரூபாய் டிக்கெட் கட்டணம் பொருந்தாது எனவே ஆடம்பர வசதிகள் வேண்டும் என்பார்கள் அதிக கட்டணம் கொடுத்து சினிமா பார்த்துக் கொள்ளலாம் .ஆனால் மல்டிபிளக்ஸ் உள்ளிட்ட அனைத்து திரையரங்குகளிலும் 200 ரூபாய் கட்டணம் மற்றும் அதற்கான வரியை மட்டுமே வசூல் செய்ய முடியும்.
More From GoodReturns

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

ஐடி நிறுவன பெண் ஊழியர்களே எச்சரிக்கை!! டிசிஎஸ் நாசிக் அலுவலக சம்பவம் கற்று தரும் பாடம் இது தான்!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!

தமிழ்நாட்டில் விவசாயம் செய்யும் மாதவன்!! தரிசு நிலத்தை தென்னந்தோப்பாக மாற்றி சாதனை!!



Click it and Unblock the Notifications