PPF, SCSS, SSY திட்டத்தில் கணக்கு வச்சிருக்கீங்களா? போஸ்ட் ஆபீஸில் இருந்து பேங்கிற்கு மாற்றுவது எப்படி?

இன்றைய விலைவாசி உயர்வுக்கு மத்தியில் மக்கள் ஏதேனும் ஒரு பாதுகாப்பான திட்டத்தில் முதலீடு செய்கின்றனர். PPF, செல்வ மகள் சேமிப்புத் திட்டம், மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் என பல அரசு திட்டங்கள் இருக்கிறது. இந்தியாவில் உள்ள எந்த ஒரு போஸ்ட் ஆபீஸ் கிளையில் வேண்டுமானாலும் இதற்கு விண்ணப்பிக்கலாம். ஒருவேளை தபால் நிலையத்திலிருந்து அப்படியே கணக்கை வங்கிக்கு மாற்ற வேண்டுமானாலும் மாற்றிக் கொள்ளலாம்.

நாளுக்கு நாள் டிஜிட்டல் தொழில்நுட்பம் வளர்ந்து வருவதால் வங்கி சேவைகள் அனைத்தையும் ஒன்றாக்க விரும்புபவர்கள் உங்களுடைய அனைத்து சேமிப்புகளையும் உங்கள் வங்கிக்கே மாற்றிக் கொள்ள முடியும்.

PPF, SCSS, SSY திட்டத்தில் கணக்கு வச்சிருக்கீங்களா? போஸ்ட் ஆபீஸில் இருந்து பேங்கிற்கு மாற்றுவது எப்படி?

எப்படி மாற்றுவது?: அஞ்சல் அலுவலகத்தில் இருந்து உங்களுடைய முதலீட்டுக் கணக்கை வங்கிக்கு மாற்றுவது மிகவும் சுலபம். நீங்கள் எந்த ஒரு போஸ்ட் ஆபீஸ் கிளையில் கணக்கு தொடங்கி இருந்தாலும் அதை எளிதில் மாற்றிக்கொள்ள அரசு அனுமதிக்கிறது. அதற்கு நீங்கள் கணக்கை மூட வேண்டிய அவசியம் இல்லை.

Also Read

போஸ்ட் ஆபீஸ்-இல் இருந்து வங்கிக்கு உங்களுடைய முதலீட்டை மாற்றுவதற்கு கணக்கு வைத்திருப்பவர் ட்ரான்ஸ்பர் அப்ளிகேஷன் ஃபார்மை பூர்த்தி செய்த வழங்க வேண்டும்.

அப்ளிகேஷனை வழங்கும்போது பிற ஆவணங்களையும் சேர்த்து சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பத்துடன் பாஸ் புக், மற்றும் டிரான்ஸ்பர் கட்டணமாக ரூ.100, அதற்கான ஜிஎஸ்டி ஆகியவற்றையும் வழங்க வேண்டும்.

பிபிஎஃப் திட்டத்திற்கு 7.1 சதவீதமும், மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்திற்கு 8.2 சதவீதமும், செல்வமகள் சேமிப்பு திட்டத்திற்கு 8.2 சதவீதமும் வட்டி வழங்கப்படுகிறது. இது போன்ற அரசாங்க திட்டங்களில் முதலீடு செய்திருப்பவர்கள் ட்ரான்ஸ்பர் அப்ளிகேஷனை போஸ்ட் ஆபீஸ் கிளையில் வழங்க வேண்டும்..

பின்னர் எந்த வங்கிக்கு உங்களுடைய கணக்கை மாற்றுகிறீர்களோ? அந்த வங்கிக்குச் சென்று கூடுதல் ஆவணங்கள் தேவைப்படுமா? என்பதை கேட்டுக் கொள்ளுங்கள். இதனால் பிற்காலத்தில் பிரச்சனை ஏற்படாமல் இருக்கும்.

கண்டிப்பாக கணக்கை மாற்ற வேண்டுமா?: போஸ்ட் ஆபீஸ் திட்டங்கள் மத்திய அரசால் வழங்கப்படுபவை. எனவே நீங்கள் கணக்கை பொதுத்துறை வங்கிக்கு மாற்றினாலும் சரி அல்லது போஸ்ட் ஆபீஸ் கிளையிலேயே வைத்திருந்தாலும் சரி.. உங்கள் முதலீட்டுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.

இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் பேங்க் தங்களுடைய டிஜிட்டல் சேவைகளை மேம்படுத்தி வருகிறது. இதன் மூலம் நீங்கள் உங்கள் போஸ்ட் ஆபீஸ் சேமிப்பு கணக்குகளை வேறு வங்கிக்கு மாற்றம் செய்யாமலேயே நிர்வகிக்க முடியும். இருந்தாலும் உங்கள் அனைத்து கணக்கையும் வங்கிக்கு மாற்ற விரும்பினால் ஏற்கனவே உள்ள அக்கவுண்ட்டை க்ளோஸ் செய்து விட்டு தொடங்குவதற்கு பதிலாக இடமாற்றம் செய்து கொள்ளலாம்.

வங்கியில் இருந்து போஸ்ட் ஆபீஸ் கிளைக்கு கணக்கை மாற்ற நினைத்தாலும் அந்த வசதியும் வழங்கப்படுகிறது. இதன் முக்கிய நன்மை என்னவென்றால் தனி நபர்கள் தங்கள் முதலீடு மற்றும் சேமிப்பை ஒரே இடத்தில் நிர்வகிக்க வேண்டும் என்பதற்காகத்தான் அரசு இந்த வசதியை வழங்கியுள்ளது.

கணக்கை மூடாமல் அப்படியே டிரான்ஸ்பர் செய்யும் வசதி இருப்பதால் நீங்கள் உங்கள் சொந்த ஊரிலிருந்து வேறு ஒரு ஊருக்கு குடிபெயர்ந்தாலும் கணக்கை அப்படியே மாற்றிக்கொண்டு தொடர்ந்து சேமிக்கலாம். இதனால் சேமிப்பில் எந்த பாதிப்பும் ஏற்படாமல் இருக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+