தொழிலில் வெற்றி பெற வேண்டுமானால், இடர்பாடுகளை நினைத்து கவலைப்படாமல் தைரியமாக களத்தில் இறங்க வேண்டும். பெரும்பாலான நடுத்தர வர்த்தக மக்கள் பெரிய வர்த்தகங்களில் ஈடுபடுவதற்கும், அதிக முதலீடு செய்வதற்கும் தயங்குகிறார்கள் அல்லது பயப்படுகிறார்கள்.
அதேசமயம் துணிச்சலாக அதிக முதலீடு செய்து வணிகத்தில் வெற்றி பெற்றவர்கள் பலர் உள்ளனர். அவர்களில் ஒருவர்தான் பிரபல தங்க நகை நிறுவனமான மலபார் கோல்டு கம்பெனியின் நிறுவனர் எம்.பி. அகமது. ஒரு காலத்தில் மசாலா பொருட்களை விற்றவர் இன்று ரூ.27,000 கோடி மதிப்பிலான தங்க நிறுவனத்தின் அதிபராக உயர்ந்துள்ளார்.

தொழிலதிபர் (எம்.பி. அகமது) கேரள மாநிலத்தை சேர்ந்த சிறு வணிகரான குட்டி ஹாஜி-பாத்திமா தம்பதியினருக்கு மகனாக பிறந்தார். கோழிக்கோடு அரசு உயர்நிலைப் பள்ளியில் பள்ளி படிப்பை முடித்தார். பின்பு கோழிக்கோடு பல்கலைக்கழகத்தில் பி.காம் பட்டம் பெற்றார்.
1979ல் அகமது தனது 20 வயதில் கரும் மிளகு, கொத்தமல்லி, தேங்காய் வியாபாரத்தை தொடங்கினார். தொடங்கிய சிறிது காலத்திலேயே இந்த தொழில் நீண்ட காலத்துக்கு நடக்காது என்பதை உணர்ந்தார். இதனையடுத்து அடுத்த என்ன தொழில் செய்யலாம் என்பதற்கான நடவடிக்கைகளை பார்க்க தொடங்கி அப்போதைய சந்தை நிலவரத்தை ஆராய்ச்சி செய்தார்.
அப்போது எதிர்காலத்தில் தங்கம் மற்றும் நகைகள் வர்த்தகத்துக்கு நிறைய வாய்ப்புகள் இருப்பதை அவர் கண்டறிந்தார். இதனையடுத்து உடனடியாக கோழிக்கோடில் மலபார் கோல்டு என்ற பெயரில் தங்க நகைக்கடையை தொடங்கினார். அவர் எதிர்பார்த்த மாதிரியே வர்த்தகம் நன்றாக வளர்ச்சி காண தொடங்கியது. இன்று தங்க ஆபரண துறையில் பிரபலமான பிராண்டாக மலபார் கோல்டு உருவெடுத்துள்ளது.
மலபார் கோல்டு நிறுவனம் இன்று இந்தியா, மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா மற்றும் ஜி.சி.சி. (யு.ஏ.இ., குவைத், பஹ்ரைன், ஓமன், கத்தார் மற்றும் சவுதி அரேபியா) உள்பட 11 நாடுகளில் 325 கடைகளை நடத்தி வருகிறது. இந்நிறுவனத்தின் வருவாய் ரூ.41,000 கோடியை தாண்டி விட்டது. மலபார் கோல்டு நிறுவனத்தின் நிறுவனர் எம்.பி. அகமதுவின் மனைவி கே.பி. சுபைதா. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications