ரூ.5000 கடனில் உருவான Ujala, இன்று 13000 கோடி சாம்ராஜ்ஜியமானது..!! வாவ்..!

வாழ்வில் வேகமாக முன்னேற வேண்டும் என நினைப்பவர்களுக்கு எவ்வளவு வெற்றி அடைந்தாலும் வெற்றிக்கான தாகம் குறையாது, இத்தகைய குணம் 99 சதவீத முதல் தலைமுறை தொழிலதிபர்களிடம் அதிகமாக இருக்கும். அதிலும் குறிப்பாக நடுத்தர குடும்பத்திலும், ஏழ்மையில் இருந்து மீண்டு வந்து தொழிலதிபர்களான பலருக்கும் இத்தகைய குணம் இருக்கும்.

அப்படி நடுத்தர குடும்பத்தில் பிறந்து தொழிலதிபராக உயர்ந்தது மட்டும் அல்லாமல் இன்று வரையில் மக்கள் மத்தியில் நீங்கா இடம்பெற்ற முக்கியமான பிராண்டை உருவாக்கியவர் தான் எம்பி ராமசந்திரன்.

ரூ.5000 கடனில் உருவான Ujala, இன்று 13000 கோடி சாம்ராஜ்ஜியமானது..!! வாவ்..!

90ஸ் கிட்ஸ்-களின் வாழ்க்கையில் முக்கிய அடையாளமாக இருந்த உஜாலாவை உருவாக்கியவர் தான் எம்பி ராமசந்திரன், இவர் சொந்த முயற்சியில் துவங்கப்பட்ட நிறுவனமான ஜோதி லேபாரட்டரீஸ் தான் துணியை பளபளவென மாற்றும் உஜாலா வொயிட்னர் மற்றும் கொசுக்களை விரட்டும் மேக்ஸோ ரெப்பலென்ட்டை உருவாக்கியது.

எம்பி ராமசந்திரன் தனது ஜோதி லேபாரட்டரீஸ் தொழிற்சாலையை உருவாக்க பணம் இல்லாத போது தனது சகோதரரிடம் இருந்து 5000 ரூபாய் பணத்தை வாங்கி துவங்கினார். இன்று ஜோதி லேபாரட்டரீஸ் வருடத்திற்கு 1800 கோடி ரூபாய் அளவிலான விற்றுமுதல்-ஐ கொண்டு செயல்படுகிறது.

எம்பி ராமசந்திரன் தனது ஆரம்பக்கட்டத்தில் முதுகலை கல்வியை பயிலும் போது கணக்காளராக பணியாற்றினார், எப்போதும் புதிதாக ஒரு விஷயத்தை கற்றுக்கொள்ள வேண்டும், மற்றவர்களை விடவும் வித்தியாசமாக யோசிக்க வேண்டும் என நினைப்பவராக இருந்தார்.

அப்போது மக்கள் அதிகமாக வெண்மையான துணிகளை தான் பயன்படுத்துவார்கள், ஆனால் அதை துவைக்கும் போது வெள்ளையாக இருக்காது. இதேவேளையில் சந்தையில் தற்போது இருப்பது போல் வொயிட்னர்கள் இல்லை, இதில் இருக்கும் வர்த்தக வாய்ப்பை உணர்ந்து சொந்தமாக ஒரு பார்மூலா-வை உருவாக்கினார் எம்பி ராமசந்திரன்.

அவருடைய அனைத்து பரிசோதனைகளையும் வீட்டின் அடுப்படியில் தான் செய்வாராம், பல நாள் கடின உழைப்பு பலன் கொடுத்தது. அப்போது வேதியியல் துறை சார்ந்த ஒரு பத்திரிக்கையில் பர்ப்பிள் நிறத்தில் இருக்கும் ஒரு திரவம் துணிகளை வெண்மையாக்கும், நிறத்தை பளிச்சிடும் என தெரிந்து கொண்டு purple dye வைத்து ஒரு வருட காலத்திற்கு சோதனை செய்தார்.

இதில் கிட்டத்தட்ட வெற்றி அடைந்த எம்பி ராமசந்திரன் 1983ல் கேரள மாநிலம் திரிசூரில் தனது சகோதரரிடம் பெற்ற 5000 ரூபாய் கடனில் தற்காலிகமாக ஒரு தொழிற்சாலை துவங்கி இதற்கு தனது மகள் ஜோதியின் பெயரை வைத்து Jyothy Laboratories துவங்கினார்.

எம்பி ராமசந்திரனின் சோதனை வொர்க்அவுட்டான நிலையில், நல்ல பலன் கிடைத்த காரணத்தாலும் உஜாலா சுப்ரீம் என்ற பெயரில் தயாரித்து வீட்டுக்கு வீடு சென்று விற்பனை செய்ய 6 பெண்களை பணியில் அமர்த்தினார். சில வருடத்திலேயே பெரிய அளவில் பிரபலமானது. 1997ல் ஒட்டுமொத்த தென்னிந்தியாவில் மிகப்பெரபிய வர்த்தகத்தை பெற்ற Jyothy Laboratories இன்றும் அசத்தி வருகிறது.

1997க்கு பின்பு உஜாலா மட்டும் அல்லாமல் ஏர் கேர், துணி துவைக்கும் பவுடர், fabric enhancers, mosquito repellents போன்றவற்றையும் தயாரித்தது. ஒருகட்டத்தில் விளம்பரம் வர்த்தகத்திற்கு முக்கியமானதாக மாறிய நிலையில் அதிகப்படியான தொகையை விளம்பரத்தில் முதலீடு செய்தார் எம்பி ராமசந்திரன்.

1983ல் கேரளாவில் மட்டுமே விற்பனை செய்யப்பட்ட நிலையில், 1992ல சென்னையில் உஜாலா தொழிற்சாலை துவங்கப்பட்டது, 1997ல் இந்தியா முழுவதும் விரிவாக்கம் செய்யப்பட்டது. 2000ல் மேக்சோ மற்றும் எக்ஸோ அறிமுகம், 2002ல் ஸ்ரீ சாய் ஹோம்கேர் என்ற நிறுவனத்தை கைப்பற்றியது, 2007ல் பங்குச்சந்தையில் நுழைந்தது.

2008ல் மும்பை அந்தேரி பகுதியில் புதிய அலுவலகத்திற்கு உஜாலா ஹவுஸ் மாற்றப்பட்டது. fabric spa சேவைக்காக ஜோதி ஃபேப்ரிக் கேர் சர்வீசஸ் நிறுவனம் 2009ல் உருவாக்கப்பட்டது. 2010ல் சச்சின் பிராண்ட் அம்பாசிடராக நியமனம்.

2011 ஆம் ஆண்டில் Jyothy Labs-ல் அதிகாரம் செலுத்தும் அளவுக்கு பங்குகளை Henkel நிறுவனம் கைப்பற்றியது. 2017ல் புதிய மார்கோ சோப் அறிமுகம் செய்யப்பட்டது, 2019ல் pril அறிமுகம், 2020ல் மார்கோ பேஸ் வாஷ் அறிமுகம் செய்யப்பட்டது. இப்படி படிப்படியாக பல பொருட்களை அறிமுகம் செய்து பிரம்மாண்டமாக விரிவடைந்துள்ளது.

தற்போது Jyothy Labs கீழ் MAXO, T-shine, pril, Mr.White, UJALA, EXO, Henko, மார்கோ ஆகிய பிராண்டின் கீழ் பல பொருட்களை விற்கிறது. சமீபத்திய பிராண்ட் அம்பாசிடராக தாப்சி, காஜல் அகர்வால், ராஷி கண்ணா, ஷில்பா ஷெட்டி ஆகியோர் உள்ளனர். இன்று Jyothy Labs 13000 கோடி சந்தை மதிப்பீட்டை கொண்டு உள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+