YouTube உலகின் சாம்ராஜ்யத்தை கட்டி எழுப்பிய Mr. Beast.. யூடியூபர்- இன் வெற்றி ரகசியம் என்ன?

இன்றைய டிஜிட்டல் யுகத்தில் சமூக ஊடகங்கள் மற்றும் YouTube போன்ற வீடியோ பகிரும் தளங்கள் மிகுந்த வளர்ச்சி அடைந்துள்ளன. குறுகிய காலத்தில் புகழையும் பணத்தையும் இணைத்து வெற்றி பெறுவது சாத்தியம் என்பதை நிரூபித்தவர் MrBeast என்கிற ஜிம்மி டொனால்ட்சன். MrBeast, தனது சிறந்த படைப்பாற்றலும் தனித்துவமான யோசனைகளாலும் உலகின் முன்னணி YouTuber-ஆக உயர்ந்துள்ளார். அவரது வருமானம் ஹாலிவுட் நடிகர்களைக் கூட மிஞ்சும் என்ற தகவல்கள் தற்போது உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

MrBeast என்ற பெயரில் பிரபலமான ஜிம்மி டொனால்ட்சன் 1998 ஆம் ஆண்டு அமெரிக்காவின் North Carolina-வில் பிறந்தவர். சிறுவயதிலிருந்தே YouTube வீடியோக்களை பார்த்தும், அவரே வீடியோக்கள் உருவாக்குவதிலும் ஆர்வம் கொண்டவர். 2012 ஆம் ஆண்டு தனது YouTube பயணத்தை ஆரம்பித்தார். ஆரம்பத்தில் கேமிங் வீடியோக்கள் மற்றும் அந்நிய YouTubers பற்றிய விமர்சன வீடியோக்களை வெளியிட்டு வந்தார். தொடர்ந்த முன்னேற்றத்துடன், புதிய முயற்சிகளை மேற்கொண்டு, இன்று உலகின் முன்னணி YouTuber-ஆக இருக்கிறார்.

 YouTube உலகின் சாம்ராஜ்யத்தை கட்டி எழுப்பிய Mr. Beast.. யூடியூபர்- இன் வெற்றி ரகசியம் என்ன?

MrBeast தனது வீடியோக்களில் மிகவும் வித்தியாசமான மற்றும் பிரம்மாண்டமான பணம் செலுத்துதல் மற்றும் சவால்களை உருவாக்கியுள்ளார். அவர் உருவாக்கும் ஒவ்வொரு வீடியோவும் பார்வையாளர்களை ஆச்சரியப்படுத்தும் வகையில் இருக்கும். உதாரணமாக, ஒருவர் $1,000,000 வெல்லும் சவால்கள் மற்றும் கடைசி வரை நிற்கும் போட்டிகள் மூலம் கார்கள் மற்றும் வீடுகள் போன்ற பெரிய பரிசுகள் வழங்கப்படும் நிகழ்ச்சிகள் மிகவும் பிரபலமாக உள்ளன.

மிக முக்கியமாக, ஏழைகளுக்கு நிதி உதவித் திட்டங்கள் மற்றும் உதவிகளை வழங்கும் அவரது மனிதாபிமான செயல்கள் அவரை மிகவும் விரும்பும் பிரபலமாக மாற்றியது.இந்த வகை வீடியோக்கள் உலகம் முழுவதும் பார்வையாளர்களின் மனதில் MrBeast இன் தனிச்சிறப்பை உருவாக்கின. இதனால்தான் இன்று அவர் உலகின் பெரிய YouTuber ஆக உயர்ந்துள்ளார்.

2025 மார்ச் நிலவரப்படி MrBeast இன் YouTube சேனலில் 383 மில்லியன் சந்தாதாரர்கள்(Subscribers) உள்ளனர். இதன் மூலம் உலகிலேயே அதிக YouTube பின்தொடர்பவர்களைக் கொண்ட படைப்பாளராக அவர் திகழ்கிறார்.. அவரது வீடியோக்கள் சாதாரண வீடியோக்களை விட சுமார் 50 மில்லியன் முதல் 200 மில்லியன் பார்வைகள் வரை பெறுகின்றன. Forbes மற்றும் Celebrity Net Worth போன்ற தரவுகளின்படி, MrBeast 2023-2024 வருடங்களில் மட்டும் சுமார் $202 மில்லியன் வரை சம்பாதித்துள்ளார். 2025 பிப்ரவரி நிலவரப்படி அவர் $1 பில்லியன் நிகர மதிப்பைக் கொண்டிருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. அவர் மாதம் சுமார் $50 மில்லியன் வரை சம்பாதிக்கிறார் என்பது தகவல் வெளியாகி உள்ளது.

ஒவ்வொரு வீடியோக்கும் $1 மில்லியன் முதல் $5 மில்லியன் வரை சம்பாதிக்கிறார் என்று கூறப்படுகிறது. அவரின் சாக்லேட் மற்றும் ஸ்நாக்ஸ் நிறுவனமான Feastables மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. இது மூலம் பெரிய வருமானம் கிடைக்கிறது. MrBeast நிறுவிய உணவக சங்கிலி(Restaurant chain) MrBeast Burger உலகின் பல பகுதிகளில் கிடைக்கின்றது. Delivery-Only மாடல் மூலம் வருமானம் அதிகரிக்கிறது. விலை உயர்ந்த பிராண்டுகள் MrBeast உடன் இணைந்து விளம்பர ஒப்பந்தங்களை மேற்கொள்கின்றன. ஒவ்வொரு பிராண்ட் விளம்பரத்திற்கும் அவர் $2.5 மில்லியன் முதல் $3 மில்லியன் வரை பெறுகிறார்.

MrBeast தனது வெற்றியும் செல்வமும் society-க்கு பங்களிக்க வேண்டும் என்ற மனதோடு பல சமூக நல திட்டங்களை முன்னெடுத்து வருகிறார். தனது வருவாயில் ஒரு பெரிய பகுதியை அவர் சமூகத்திற்காக செலவிடுகிறார். எடுத்துக்காட்டாக, $100,000 மதிப்புள்ள மருந்துகளை வழங்குதல், வீடு இல்லாதவர்களுக்கு வீடுகள் கட்டி வழங்குதல், பசியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு வழங்கும் திட்டங்கள், வறுமையில் இருக்கும் மாணவர்களுக்கு கல்வி உதவிகள் வழங்குதல் ஆகியவை குறிப்பிடத்தக்கவை. இந்த செயல்கள் அவரது புகழை மேலும் உயர்த்தியது மட்டும் அல்லாமல், அவரது மனிதநேயத்தையும் உலகளவில் பலர் பாராட்ட செய்ய காரணமாகியுள்ளது.

MrBeast எதிர்காலத்தை நோக்கி தனது தொழில்துறையை மேலும் விரிவுபடுத்த பல திட்டங்களில் ஈடுபட்டு வருகிறார். குறிப்பாக, உலகளாவிய அளவில் உணவகங்கள் தொடங்கும் முயற்சி, புதிய சமூக ஊடக பிளாட்பாரங்களை உருவாக்கும் திட்டம் மற்றும் வளர்ச்சியடைந்த தொழில்நுட்ப நிறுவனங்களில் முதலீடு செய்வது போன்ற பல புதிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். இவை அனைத்தும் அவரது வணிக சாதனைகளை மேலும் உயர்த்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளன. சமூக ஊடகங்கள், தொழில்நுட்பம் மற்றும் உலகளாவிய வணிகத் துறைகளில் தனது பங்கை விரிவுபடுத்துவதே அவரது முக்கிய குறிக்கோள்.

YouTube போன்ற சமூக ஊடகங்கள் சாதாரண மக்களையும் உலகளாவிய பிரபலங்களாக மாற்றும் சக்தி பெற்றுள்ளன என்பதை அவரது வெற்றிக்கதை நிரூபிக்கிறது. இன்று MrBeast போன்ற தலைசிறந்த உள்ளடக்க படைப்பாளர்கள் உலகத்தின் மிகப்பெரிய பணக்காரர்களாகவும், சமூக மாற்றத்தை உருவாக்கும் தலைவர்களாகவும் மாறியுள்ளனர்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+