பிரபல யூடியூப் நட்சத்திரமான MrBeast (மிஸ்டர் பீஸ்ட்), யூடியூப் வரலாற்றில் முதல் முறையாக 400 மில்லியன் சப்ஸ்கிரைபர்களை கடந்தவர் எனும் சாதனையை படைத்துள்ளார். இதற்காக யூடியூப் தலைமை நிர்வாக அதிகாரி நீல் மோகன் நேரடியாக அவரை வாழ்த்தியுள்ளார். யூடியூப் மூலம் உலகளவில் அதிகமான பார்வையாளர்களை ஈர்த்தவர் என்ற பெருமையையும் மிஸ்டர் பீஸ்ட் பெற்றுள்ளார்.
முன்னதாக 10 லட்சம் (1 Million) சப்ஸ்கிரைபர்களுக்கு Gold Play Button வழங்கப்பட்டது. 100 மில்லியன் சப்ஸ்கிரைபர்களுக்கு Red Diamond Play Button வழங்கப்பட்டது. தற்போது, 400 மில்லியனை இதற்கு முன் யாரும் அடையவில்லை என்பதால், MrBeast-க்காக புதிய வடிவமைப்புடன் கூடிய டிராபி வழங்கப்பட்டுள்ளது.

இந்த டிராபி வெள்ளி நிற தளத்தில், தூய நீல க்ரிஸ்டல்களில் செய்யப்பட்ட யூடியூப் பிளே பட்டன் சின்னத்துடன், டிசைன் மற்றும் யூடியூப் அடையாளத்துடன் உள்ளது. இது யூடியூப் கிரியேட்டர்களின் சாதனையை கொண்டாடும் வகையில் பாராட்டு சின்னமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
மிஸ்டர் பீஸ்ட், இந்த 400 மில்லியன் சாதனையை ஜூன் 1, 2025 அன்று நிகழ்த்தியுள்ளார். அதனுடன், தற்போதைய T-Series சப்ஸ்கிரைபர் எண்ணிக்கை 299 மில்லியன் என்பதைக் கடந்து, உலகில் உள்ள அதிகம் சப்ஸ்கிரைப் செய்யப்பட்ட யூடியூப் சேனல் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். ஜூலை மாதத்தில், இந்த டிராபி அவரிடம் வந்ததும், MrBeast தனது இன்ஸ்டா பக்கத்தில் யூடியூப் சிஇஓ-வுடன் எடுத்த புகைப்படத்துடன், "400,000,000 Subscriber Play Button! Thank you YouTube" என பதிவு செய்து தனது மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டார்.
400 மில்லியன் சப்ஸ்கிரைபர்கள் என்ற வரலாற்றுச் சாதனையை கடந்த MrBeast, தனது சமூக வலைதள பக்கத்தில் ஒரு உணர்வுபூர்வ நன்றி உரையை பகிர்ந்துள்ளார். கடந்த 10 ஆண்டுகளின் பயணத்தை அவர் தனது வார்த்தைகளில் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.
மிஸ்டர் பீஸ்டின் இன்ஸ்டா பதிவுக்கு பலருக்கு கமெண்ட் தெரிவித்து வருகின்றனர். "இது சாதாரண 10 மில்லியன் டிராபியே... மையத்தில் நீலமாக பெயிண்ட் செய்திருக்காங்க" என்று ஒருவர் தெரிவித்துள்ளார். மற்றொருவர், யூடியூப் இதற்கென்று தனி, புதுமையான டிசைன் கொடுக்க வேண்டும்" என்று பதிவிட்டுள்ளார்.
மற்றொருவர், "இது முந்தைய பிளே பட்டனில் இருந்து முற்றிலும் மாறுபட்டதாக இருக்க வேண்டும். ஆனால், இது போலியாகவும், இயந்திரம் மூலம் செய்யப்பட்டது போல் உள்ளது" என்று பதிவிட்டுள்ளார். இது வரை யூடியூப் வழங்கிய Play Buttons ஒவ்வொன்றும் Silver, Gold, Diamond மற்றும் Red Diamond பிரம்மாண்டமாக இருந்தன. ஆனால், இந்த 400 மில்லியன் பிளே பட்டன், மிகப் பெரிய சாதனையை பிரதிபலிக்கவில்லை. எனவே, யூடியூப் இன்னும் புதிய டிசைன்களை மேம்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications