மிஸ்டர் பீஸ்ட் என பிரபலமாக அறியக்கூடிய யூடியூபர் ஜிம்மி டொனால்ட்சன் 27 வயதிலேயே உலக பில்லினியர்கள் பட்டியலில் இணைந்திருக்கிறார், அவருடைய சொத்து மதிப்பு 1 பில்லியன் அமெரிக்க டாலரை எட்டியிருக்கிறது. 27 வயதாகக்கூடிய ஜிம்மி டொனால்ட்சன் உலக அளவில் 30 வயது குட்பட்டவர்களில் சொந்தமாக சம்பாதித்து பில்லினியராக உயர்ந்த 8ஆவது நபர் என்ற பெருமையை பெற்றிருக்கிறார். இவர் மாதந்தோறும் 50 மில்லியன் டாலர்களை வருமானமாக ஈட்டுகிறார்.
தன்னுடைய 13 வயதிலேயே யூடியூப்பில் கண்டன்ட் கிரியேட்டராக தொடங்கியவர் தான் ஜிம்மி டொனால்ட்சன். உலகம் முழுவதும் மிஸ்டர் பீஸ்ட் என்றால் மட்டுமே அனைவருக்கும் இவரை தெரியும் . வடக்கு கரோலினாவில் இருந்து தொடர்ச்சியாக வீடியோக்களை பதிவிட்டு புகழ்பெற்ற யூடியூபராக மாறிய மிஸ்டர் பீஸ்ட், 27 வயதிலேயே தன்னுடைய யூடியூப் வருமானத்தின் மூலமே ஒரு பில்லியன் அமெரிக்க டாலர்கள் சொத்துக் கொண்ட தனிநபர் என்ற பெருமைக்கு சொந்தக்காரராக மாறி இருக்கிறார்.

இந்திய ரூபாயின் மதிப்பில் பார்க்கும் போது இவருடைய சொத்து மதிப்பு 8,300 கோடி ரூபாய் ஆகும். பல்வேறு சவால்களை மேற்கொள்வது, தனக்கு கிடைக்கும் பணத்தை பொதுநல சேவைகளுக்கு நன்கொடையாக வழங்குவது என தொடர்ச்சியாக வீடியோக்களை பதிவிட்டு 27 வயதிலேயே ஒரு பில்லியன் டாலர்கள் மதிப்பு கொண்ட சொத்தினை ஈட்டி இருக்கிறார். 2024 ஆம் ஆண்டில் மிஸ்டர் பீஸ்டுக்கு ஃபோர்ப்ஸ் நிறுவனம் டாப் கிரியேட்டர் பட்டியலில் முதலிடம் வழங்கியது .அப்போது மிஸ்டர் பீஸ்டின் சொத்து மதிப்பு 85 மில்லியன் டாலர்களாக இருந்தது.
2023 ஆம் ஆண்டில் இவர் தனக்கு கிடைத்த பிரபலத்தை பயன்படுத்திக்கொண்டு மிஸ்டர் பீஸ்ட் பர்கர் என்ற பெயரில் ஒரு ஃபாஸ்ட் ஃபுட் பிராண்டினை தொடங்கினார். 2020 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த வணிகத்தின் மூலம் இவருக்கு மாதத்திற்கு 2.3 மில்லியன் டாலர்கள் வருமானம் கிடைக்கிறது . அதே போல ஒரு சாக்லேட் கம்பெனியையும் இவர் தொடங்கினார். அதன் மூலம் இவருக்கு மாதத்திற்கு 10 மில்லியன் டாலர்கள் வருமானமாக கிடைத்தது. மேலும் பிட்காயின் உள்ளிட்ட பல்வேறு கிரிப்டோ கரன்சிகளிலும் முதலீடு செய்திருக்கிறார்.
பீஸ்ட் அறக்கட்டளை என்ற பெயரில் அரசு சாரா தொண்டு அமைப்பை ஏற்படுத்தி பல்வேறு நன்கொடைகளை இவர் வழங்கி வருகிறார் . மிஸ்டர் பீஸ்ட் இதுவரை 100 கார்களை நன்கொடையாக வழங்கி இருக்கிறார் 1 மில்லியன் டாலர்களை நன்கொடையாக வழங்கி இருக்கிறார். டீம் ட்ரீஸ் என்ற நிறுவனன் மரக்கன்றுகளை நடுவதற்காக 20 மில்லியன் டாலர்களை திரட்டி தந்திருக்கிறார். நான் நிறைய பணம் சம்பாதிப்பேன் அந்த பணம் அனைத்தையும் மக்கள் நல பணிகளுக்காக வழங்குவேன் என அவர் தொடர்ந்து கூறி வருகிறார் இதுவே மக்களிடையே அவர் இன்னும் பிரபலமடைவதற்கும் அவருடைய பிராண்டுகள் அதிக அளவில் விற்பனை செய்வதற்கும் காரணமாக அமைந்திருக்கிறது.
2012 ஆம் ஆண்டு 13 வயதாக இருக்கும் போதே இவர் மிஸ்டர்பீஸ்ட் 6000 என்ற பெயரில் வீடியோக்களை யூடியூபில் அப்லோட் செய்ய தொடங்கினார். துவக்கத்தில் கேமிங் வீடியோக்களை பதிவேற்றம் செய்து வந்த அவர் படிப்படியாக யூடியூபையே தன்னுடைய முழு நேர வாழ்க்கையாக மாற்றிக் கொண்டார். மே 23ஆம் தேதி நிலவரப்படி இவருடைய மிஸ்டர் பீஸ்ட் யூடியூப் பக்கத்தை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 39 கோடியாக இருக்கிறது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications