சமுகவலைத் தள வர்த்தகத்தில் கிங் ஆக இருக்கும் மெட்டா நிறுவனம் டிவிட்டரின் ஆதிக்கத்தை குறைக்கும் விதமாகவும், அதற்கு போட்டியாகவும் TEXT அடிப்படையிலான Threads என்னும் சமுகவலைத்தளத்தை உருவாக்கிய வியழக்கிழமை அறிமுகம் செய்தது.
இது டிவிட்டரின் காஃபி, மார்க் ஜூக்கர்பெர்க் - எலான் மஸ்க் மத்தியிலான போட்டி, X.crop தொடுக்கும் வழக்கு என பல சர்ச்சைக்கு மத்தியிலும் 48 மணிநேரத்தில் சுமார் 50 மில்லியன் மக்கள் Threads-ஐ டவுன்லோடு செய்து அசத்தியுள்ளனர். இதேநேரத்தில் டிவிட்டருக்கு ஆதரவாக பல கருத்துகள் Threads-லும், Threads-க்கு அதாரவாக டிவிட்டரிலும் கருத்து பதிவாகி வருகிறது.

இந்த நிலையில் சமுக வலைத்தள ஆர்வளர்கள், செலிப்ரிடிகள், Influncer-கள் என பலர் Threadsல் இணைந்திருக்கும் வேளையில், யூடியூப்-ன் கிங் ஆக இருக்கும் Mr.Beast 1 மில்லியன் பாலோவர்களை பெற்று இருக்கும் முதல் நபராக உயர்ந்துள்ளார். இது மட்டும் அல்லா்மல் கடந்த 48 மணிநேரத்தில் Mr.Beast சுமார் 2.7 மில்லியன் வாடிக்கையாளர்களை பெற்றுள்ளார்.
Mr.Beast அமெரிக்காவில் இருந்துக்கொண்டு யூடியூப் வாயிலாக உலகம் முழுவதும் அசத்தி வருவது மட்டும் அல்லாமல் தனது சப்ஸ்கிரைபர்-க்கு அதிகப்படியான மற்றும் விலை உயர்ந்த கிப்ட் வழங்குவதில் பெயர்போனவர் மட்டும் அல்லாமல் பல எண்டர்டெயின்மென்ட் வீடியோக்களை பெரும் பொருட் செலவில் எடுக்கும் வல்லவர்.
மேலும் Threads தளத்தில் MrBeast மற்றும் Mark Zuckerberg மத்தியிலான பாலோவர்கள் போட்டி ஆரம்பத்தில் கடுமையாக இருந்தது, ஆனால் 48 மணிநேரத்தில் போட்டியின் வீரியம் தணிந்து தற்போது மார்க் ஜூக்கர்பெர்க் 2 மில்லியன் பாலோர்கள் உடனும், MrBeast எனப்படும் Jimmy Donaldson 2.8 மில்லியன் பாலோவர்களை கொண்டு உள்ளனர்.

Threads தளத்தில் MrBeast இதுவரையில் 4 பதிவுகளை மட்டுமே செய்துள்ள நிலையில் 2.8 மில்லியன் பாலோவர்களை பெற்றுள்ளார். இது மட்டும் அல்லாமல் கடைசியாக செய்த பதிவில் MrBeast 48 மணிநேரத்தில் தனது பாலோவர்கள் யாருக்கேனும் ஒருவருக்கு டெஸ்லா கார்-ஐ பரிசாக கொடுக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications