மெட்ராஸ் சாலையில் பலூன் விற்றவர் கையில் ரூ.42000 கோடி நிறுவனம்.. வியக்க வைக்கும் வெற்றி கதை..!

இந்திய பங்குச்சந்தையில் இதுவரையில் எந்தொரு நிறுவனமும் அடைந்திடாத மாபெரும் சாதனையை சென்னையை தலைமையிடமாக கொண்டு இந்தியா முழுவதிலும், உலகளவில் பல்வேறு நாடுகளில் வர்த்தகம் செய்து வரும் MRF நிறுவனத்தின் பங்கு விலை இன்று யாரும் எட்டிடாத 1 லட்சம் ரூபாய் அளவீட்டை தொட்டு சாதனை படைத்துள்ளது.

இந்திய வர்த்தக சந்தை நாட்டின் சுதந்திரத்திற்கு முன்பும் பின்பும் தலைகீழாக மாறியது. சுதந்திரத்திற்கு முன்பு மாபெரும் வர்த்தக சாம்ராஜ்ஜியமாக இருந்த பல நிறுவனங்கள் மாயமானது, சிறு குறு நிறுவனமெல்லாம் நேரம் பார்த்து விரிவாக்கம் செய்து மாபெரும் நிறுவனமாக மாறியது. இப்படி இன்று இந்திய சந்தையை ஆட்டிப்படைக்கும் MRF உருவானதும் இந்த நேரத்தில் தான்.

மெட்ராஸ் சாலையில் பலூன் விற்றவர் கையில் ரூ.42000 கோடி நிறுவனம்.. வியக்க வைக்கும் வெற்றி கதை..!

MRF என்பது மெட்ராஸ் ரப்பர் ஃபேக்டரி என்பதன் சுருக்கம். ஒரு குழந்தை போல் MRF நிறுவனத்தை உருவாக்கி மெல்ல மெல்ல வளர்த்தவர் கே எம் மம்மன் மாப்பிள்ளை. யார் இவர்..? மெட்ராஸ் சாலையில் பலூன் விற்றவர் எப்படி 42000 கோடி ரூபாய் மதிப்பிலான நிறுவனத்தை உருவாக்கினார்..?

கே எம் மம்மன் மாப்பிள்ளை கேரளாவில் சிரியன் கிருஸ்துவ குடும்பத்தில் 10 பிள்ளைகளில் ஒருவராக பிறந்தார். இவருடைய தந்தை சொந்தமாக வங்கி மற்றும் செய்தி நிறுவனங்களை வைத்திருக்கும் அளவுக்கு பண பலம் கொண்டவர். ஆனால் திருவாங்கூர் சமஸ்தானம் இவர்களுடைய சொத்துக்கள், வங்கி, பத்திரிக்கை நிறுவனம் ஆகிய அனைத்தையும் கையகப்படுத்தி அவருடைய தந்தையை 2 வருடம் சிறையில் தள்ளியது.

தந்தையின் கைது-க்கு பின்பு இருக்க வீடு கூட இல்லாத மோசமான நிலைக்கு தள்ளப்பட்டார் கே எம் மம்மன் மாப்பிள்ளை, மெட்ராஸ் கிருஸ்டியன் கல்லூரியில் படித்து வந்த நிலையில் பல நாட்கள் செயின்ட் தாமஸ் ஹாலில் வெறும் தரையில் படுத்து தூங்கியுள்ளார் கே எம் மம்மன் மாப்பிள்ளை.

கல்லூரியை முடித்த பின்பு தனது மனைவி குஞ்சம்மா உடன் இணைந்து 1946ல் ஒரு சிறிய அறையில் பொம்மை பலூன் தயாரித்து, பாக்கெட் போட்டு மெட்ராஸ் சாலையில் விற்பனை செய்ய துவங்கினார் மம்மன் மாப்பிள்ளை, இவருடைய மனைவி ஒரு வேதியியல் பட்டதாரி ஆவார். இதையே பல ஆண்டுகள் செய்தார்.

மெட்ராஸ் சாலையில் பலூன் விற்றவர் கையில் ரூ.42000 கோடி நிறுவனம்.. வியக்க வைக்கும் வெற்றி கதை..!

இந்த நிலையில் ரப்பர் சார்ந்த தொழில் இறங்க ஆர்வம் வந்த நிலையில் சுதந்திரத்திற்கு பின்பு வெளிநாட்டு நிறுவனங்கள் மட்டுமே இருந்த tread rubber சப்ளை பிரிவில் மம்மன் இறங்க முடிவு செய்தார். இதற்கு குடும்ப உறுப்பினர்களின் உதவியுடன் 1952ல் tread rubber சப்ளை செய்ய புதிய உற்பத்தி தளத்தை அமைத்தார். இதன் பெயர் தான் மெட்ராஸ் ரப்பர் ஃபேக்டரி.

வெளிநாட்டு நிறுவனங்கள் மத்தியில் ஒரே ஒரு இந்திய நிறுவனம், அதுவும் சுதந்திரத்திற்கு பின்பு, ஆரம்பமே அசத்தல் என்ற நிலையில் காட்டுத்தீ போல MRF பெயர் பரவியது. வெறும் 4 வருடத்தில் tread rubber சப்ளை பிரிவில் 50 சதவீத வர்த்தகத்தை MRF பிடித்தது, இதற்கு முக்கிய காரணம் அதன் தரம். MRF எழுச்சியால் வெளிநாட்டு நிறுவனங்கள் நாட்டை விட்டு வெளியேற துவங்கியது.

1960ல் tread rubber மட்டும் போதாது என முடிவு செய்த மம்மன் மாப்பிள்ளை சொந்தமாக டயர் தயாரிக்க முடிவு செய்தார். இந்தியாவில் சொந்தமாக டயர் தயாரிக்க வேண்டுமெனில் அப்போதைய காலக்கட்டத்தில் எளிதானது அல்ல, தொழில்நுட்பத்தில் பெரிய அளவில் பின்தங்கியது. இந்த நிலையில் தான் அமெரிக்காவின் Mansfield Tire & Rubber நிறுவனம் தொழில்நுட்ப உதவிக்காக கூட்டணி வைத்தது.

1961 ஆம் அண்டில் இதே MRF பெயருடன் டயர் தயாரிப்பு தொழிற்சாலை சென்னையில் அமைக்கப்பட்டது. இதே வருடம் மெட்ராஸ் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச்-யில் ஐபிஓ வெளியிடப்பட்டது. இதன் பின் மின்னல் வேகத்தில் உற்பத்தி, தரம், விலை என அனைத்திலும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு டேக்கா கொடுத்து வளர்ச்சி அடைந்தது.

1963ல் சென்னையில் புதிய ஆராய்ச்சி மையத்தை உருவாக்கியது MRF, 1964ல் மார்கெட்டிங் பிரிவை மிகப்பெரியதாக்கியது MRF, MuscleMan புகைப்படம் முதல் சச்சின் MRF பேட் வரையில் பெரிய அளவில் விளம்பரப்படுத்தப்பட்டது. MRF மார்கெட்டிங் பிரிவு வெற்றி அடைய Alyque Padamsee முக்கிய காரணம். இவர் தான் மார்கெட்டிங் பிரிவின் ராக்ஸ்டார்.

60களில் இந்தியாவில் டயர் துறையில் ஒரு நிறுவனம் தான் என்ற அளவுக்கு உயர்ந்த MRF, 70களில் அமெரிக்காவுக்கு டயர்களை ஏற்றுமதி செய்தது. 1973ல் இந்தியாவில் பல தொழிற்சாலைகளை கேரளா, புதுச்சேரி, கோவா, சென்னை, தெலுங்கானாவில் உருவாக்கியது.

1980களில் விளையாட்டு துறையில் இறங்கி பெரிய அளவில் பிரபலமானது. இதன் மூலம் பைக், கார், கனரக வாகனங்கள் என அனைத்து வாகனங்களுக்கும் டயர் தயாரித்தது.

மெட்ராஸ் சாலையில் பலூன் விற்றவர் கையில் ரூ.42000 கோடி நிறுவனம்.. வியக்க வைக்கும் வெற்றி கதை..!

1989ல் MRF மற்றும் அமெரிக்காவின் Hasbro toys உடன் கூட்டணி சேர்ந்து Funskool என்ற பிராண்டை உருவாக்கி பொம்மை தயாரிப்பில் இறங்கியது. Funskool இந்தியா நிறுவனம் டிஸ்னி, வார்னர் பிரதர்ஸ், டோரா என பல முன்னணி பிராண்டுகளுக்கு பொம்மை தயாரித்து கொடுத்தது.

மெட்ராஸ் சாலையில் பலூன் விற்றவர் இன்று 42000 கோடி ரூபாய் மதிப்பிலான நிறுவனத்தை உருவாக்கியுள்ளார், 2003 அவருடைய 80 வயதில் மரணம் அடையும் வரையில் MRF நிர்வாக பொறுப்பில் இருந்தார். இவருடைய மனைவி குஞ்சம்மா 2012ல் மறைந்தார்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+