எம்எஸ் தோனி - பல கோடி கிரிக்கெட் ரசிகர்களின் இதயத்தில் குடிவாழும் ஒரு விளையாட்டு வீரர், இந்தியாவில் இதற்கு முன்பு மக்கள் கொண்டாடிய விளையாட்டு வீரர்களில் சச்சின், கங்குலி, ஹாக்கி வீரர் தன்ராஜ் பிள்ளை, பிடி உஷா, மேரி கோம் ஆகியோர் உள்ளனர்.
ஆனால் தோனி எல்லோருக்கும் மேலானவர் என்றால் மிகையில்லை, இளம் தலைமுறையினர் முதல் தாத்தா பாட்டி வரையில் தோனிக்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகம். இந்த நிலையில் 42வது பிறந்த நாள்-ஐ இன்று தனக்கு உரிய வகையில் அமைதியாக எவ்விதமான ஆர்பாட்டமும் இல்லாமல் எம்எஸ் தோனி கொண்டாடுகிறார்.

மகேந்திர சிங் தோனி பிறந்த நாளில் அவருடைய சகோதரர் இணையத்தில் டிரெண்டாகியுள்ளார். நரேந்திர சிங் தோனி தான் இன்று கூகுளில் அதிகம் தேடப்பட்ட தனிநபர்களில் ஒருவராக உள்ளார், தோனி என தேடும் அனைவருக்கும் நரேந்திர சிங் தோனி குறித்தும் கூகுள் காட்டுகிறது.
மகேந்திர சிங் தோனி தனது மூத்த சகோதரர் நரேந்திர சிங் தோனி குறித்து இதுவரையில் அதிகளவில் பேசியது இல்லை, இவ்வளவு ஏன் MS Dhoni - The Untold Story திரைப்படத்தில் கூட நரேந்திர சிங் தோனி குறித்து எவ்விதமான குறிப்புகளும் அதிகம் இருக்காது. இதற்கான காரணத்தையும் நரேந்திர சிங் தோனி ஒரு நேர்காணலில் தெரிவித்துள்ளார்.
நரேந்திர சிங் தோனி MS Dhoni-யை விடவும் 10 வயது மூத்தவர், இவர் ஒரு அரசியல்வாதி - சமாஜ்வாடி கட்சியில் 2013ல் இணைந்தார் இதற்கு முன்பு பிஜேபி-யில் இருந்தது குறிப்பிடத்தக்கது. நரேந்திர தோனி நவம்பர் 21, 2007 இல் திருமணம் செய்து கொண்டார், அவருக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். தோனியின் சகோதரர் நரேந்திர சிங் தோனி ராஞ்சியில் வசித்து வருகிறார்.

MS Dhoni - The Untold Story திரைப்படத்தில் தான் இல்லாதது குறித்து நரேந்திர சிங் தோனி பேசுகையில், மஹி வாழ்க்கையில் என்னுடைய பங்கு மிகவும் குறைவு. அவருடைய குழந்தை பருவம், இளமை காலத்தில் போராடும் போது, உலகிற்கு MSD ஆக பிரபலமான காலக்கட்டத்தில் நான் அவருடன் இல்லை என தெரிவித்தார். மேலும் படம் MS Dhoni அவருடைய வாழ்க்கை குறித்தது, இவருடைய குடும்பத்தின் கதை இல்லை என்றும் வெளிப்படையாக தெரிவித்தார்.
MS Dhoni-க்கும் எனக்கும் 10 வயது வித்தியாசம், அவர் பேட்-ஐ பிடித்து கிரிக்கெட் விளையாடிய போது நான் பள்ளியை விட்டு வெளியேறிவிட்டேன், 1991 முதல் வீட்டை விட்டு வெளியில் தான் இருக்கிறேன் எனவும் இப்பேட்டியில் தெரிவித்தார். இதேவேளையில் நரேந்திர சிங் தோனி தனது குடும்பத்துடன் பேசுவது இல்லை என்ற கருத்தையும் படம் வெளியான நேரத்தில் பலர் தெரிவித்தனர்.


Click it and Unblock the Notifications