எம்எஸ் தோனி 2024 ஐபிஎல் போட்டியில் என்ன மேஜிக் செய்யப் போகிறார், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் புதிதாய் யாரெல்லாம் சேர போகிறார்கள் என்று கிரிக்கெட் ரசிகர்கள் தீவிரமாக விவாதித்து வரும் வேளையில்.. ஸ்டார்ட்அப் முதலீட்டாளர்கள், சிறு முதலீட்டாளர்கள் எம்எஸ் தோனியின் முதலீட்டு பார்மூலா, அவர் தேர்வு செய்யும் நிறுவனம் துறை ஆகியவற்றைத் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர்.
இதற்கு மத்தியில் எதையும் பொருட்படுத்தாமல் வழக்கம் போல் கூலாகக் கருப்புச் சட்டை, கருப்புக் கார் என ஜாலியாகத் தனது 3 கோடி ரூபாய் காரில் சுற்றி வருகிறார். ஐபிஎல் சூப்பர்ஸ்டார், கிரிக்கெட் சாம்ராட் எனப் பல பெயர்களை எம்எஸ் தோனி வைத்திருந்தாலும் அவர் தீவிர கார், பைக் பிரியர் என்பதால் ஆட்டோமொபைல் வல்லுனர்கள் மத்தியில் அவரைச் செல்லமாக மோட்டார்ஹெட் எனவும் அழைப்பது உண்டு.

முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியில் கேப்டன் தோனி பல முறை காஸ்ட்லியான, ஸ்பெஷலான, அரிதான கார் மற்றும் பைக்குகளில் சுற்றும் வீடியோ, போட்டோக்களைப் பார்த்திருந்தாலும் இந்த வீடியோ கொஞ்சம் ஸ்பெஷல் தான். காரணம் தோனியின் காரில் இருக்கும் நம்பர் பிளேட்.
தோனியின் வீடியோ கடந்த 12 மணிநேரமாக இன்ஸ்டாகிராமில் டிரெண்டிங்கில் உள்ளது, ஆனா அந்த மனுஷனுக்கு இது தெரியாது. சோஷியல் மீடியா பக்கமே இல்லாத அவருக்குச் சோஷியல் மீடியா முழுவதும் ரசிகர்கள் தான்.
எம்.எஸ்.தோனி-யின் இந்த வீடியோவில் Mercedes-AMG G63 காரில் ஒருவரை ஏற்றிக்கொண்டு தானே ஓட்டிச் செல்கிறார். சுமார் 3.5 கோடி ரூபாய் மதிப்புக் கொண்ட இந்தக் காரில் சிறப்பு அம்சம் என்னவென்றால், '0007' எண்ணை கொண்ட விஐபி பதிவுத் எண் தான்.
எம்.எஸ்.தோனி-யின் ஜெர்சி நம்பரில் கார் நம்பர் ப்ளேட் வாங்கப்பட்டு உள்ளது. இந்தியாவாக இருப்பதால் சில ஆயிரம் முதல் லட்சம் ரூபாய் தொகையைக் கொடுத்து இந்த நம்பர் ப்ளேட்-ஐ வாங்க முடியும். இதுவே துபாயாக இருந்தால் Mercedes-AMG G63 காரின் 3 கோடி ரூபாய் விடவும் 2 மடங்கு அதிகம் கொடுத்தாலும் வாங்க முடியாது.
எம்எஸ் தோனி உடன் தொடர்ந்து டென்னிஸ் விளையாடி வரும் சுமீத் குமார் பஜாஜ் பகிர்ந்துள்ள வீடியோவில், அபிஷேக் என்பவரை காரில் ஏற்றிக்கொண்டு எம்எஸ் தோனி மெர்சிடிஸ் எஸ்யூவி காரை ஓட்டுவதைப் பார்க்க முடியும்.
சில நாட்களுக்கு முன்பு தோனி ஒருவரின் BMW 740i காரில் ஆட்டோகிராப் செய்த வீடியோ வைரலானது, இது அபிஷேக் உடையது தான் என்பதை உறுதி செய்யும் வீடியோவையும் சுமீத் குமார் பஜாஜ் பகிர்ந்துள்ளார்.
MS தோனியின் கேரேஜில் லேண்ட் ரோவர் டிஃபென்டர் மற்றும் ஜீப் ட்ரெயில்ஹாக் கார்களுடன் Mercedes-AMG G63 முக்கிய இடத்தை வகிக்கிறது. சமீபத்தில் சுமீத் குமார் பஜாஜ் வெளியிட்ட பைக் வீடியோ.
More From GoodReturns

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!



Click it and Unblock the Notifications