இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி, ஆர்கா ஸ்போர்ட்ஸ் அண்டு மேனேஜ்மெண்ட்டை சேர்ந்த மிஹிர் திவாகர், சௌம்யா விஸ்வாஸ் ஆகியோர் மீது 15 கோடி ரூபாய் ஏமாற்றிவிட்டதாக ராஞ்சி நீதிமன்றத்தில் கிரிமினல் வழக்கை தொடர்ந்துள்ளார்.
2017 ஆம் ஆண்டில் எம்எஸ் தோனியுடன் உலகளவில் கிரிக்கெட் அகாடமியைத் தொடங்குவது தொடர்பாக ஒரு ஒப்பந்தம் செய்ததாகக் கூறப்படுகிறது. ஆனால் ஒப்பந்தத்தில் உள்ள நிபந்தனைகளைப் பின்பற்றுவதற்கு திவாகர் தவறிவிட்டார்.

ஒப்பந்தப்படி ஆர்கா ஸ்போர்ட்ஸ் நிறுவனம் பிரான்சைஸ் கட்டணத்தையும் லாபத்தில் பங்கையும் தோனிக்கு தரவேண்டும். ஆனால் அப்படி ஆர்கா ஸ்போர்ட்ஸ் நிறுவனம் செய்யவில்லை.
இதுபற்றி பலமுறை கேட்டுப் பார்த்தும் ஒப்பந்தத்தில் உள்ள விதிகளையும் நிபந்தனைகளையும் ஆர்கா ஸ்போர்ட்ஸ் மதிக்காததால் 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதியன்று ஆர்கா ஸ்போர்ட்ஸுக்கு தந்த தனது அனுமதிக் கடிதத்தைத் திரும்பப் பெற்றார்.
இது தொடர்பாக பலமுறை சட்டப்படி நோட்டீஸ்களை அனுப்பியும் எந்தப் பலனும் இல்லை. இதுபற்றி தோனியின் வழக்கறிஞர் தயானந்த் சிங் கூறுகையில், ஆர்கா ஸ்போர்ட்ஸ் தோனியை ஏமாற்றியுள்ளதால் அவருக்கு ரூ.15 கோடிக்கும் மேல் இழப்பு ஏற்பட்டுள்ளது என்றார். இந்த நிலையில் தோனியின் நண்பரான சிட்டு என்ற சிமந்த் லோஹானியும் ஒரு புகார் அளித்துள்ளார்.
இந்த புகாரில் ஆர்கா ஸ்போர்ட்ஸ் மீது சட்டரீதியக நடவடிக்கை எடுத்ததைத் தொடர்ந்து தன்னை மிஹிர் திவாகர் மிரட்டியதாகவும் மோசமாகத் திட்டியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
துபாயில் புத்தாண்டு கொண்டாட்டத்தை முடித்துவிட்டு அண்மையில் தோனி வீடு திரும்பினார். தோனியை அவரது குடும்பத்தாரும் நண்பர்களும் வரவேற்றனர். துபாயில் தோனியுடன் சக கிரிக்கெட் வீரர் ரிஷப் பன்ட்டும் சென்றிருந்தார். துபாயில் தனது நண்பர்கள் மற்றும் குடும்பத்துடன் கிறிஸ்துமஸ் பண்டிகையையும் கொண்டாடினார்.
டிசம்பர் 19 ஆம் தேதியன்று ஐக்கிய அரபு அமீரகத்தில் முதன்முறையாக நடைபெற்ற ஐபிஎல் 2024 மினி ஏலத்தில் கலந்து கொள்ள சென்றிருந்த ரிஷப் பன்ட்டும் தோனியுடன் சேர்ந்து கொண்டார். 2022 ஆம் ஆண்டில் நிகழ்ந்த கார் விபத்தில் பலத்த எலும்பு முறிவு காயங்கள் அடைந்த ரிஷப் பன்ட் இப்போதுதான் உடல் நலம் தேறிவருகிறார். மினி ஏலத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி நிர்வாகிகளுடன் பன்ட் அமர்ந்திருந்தார்.
தோனியும், ரிஷப் பன்டும் ஐபிஎல் 2024 ஏலத்தில் நல்ல போட்டியைத் தருவார்கள் என எதிர்பார்க்கப்பட்டிருந்தது. ஏகப்பட்ட பணம் கொழிக்கும் ஐபிஎல்லில் தோனி பங்கேற்கும் கடைசி சீசனாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.
41 வயதான தோனி 2023ல் தனது முழங்கால் காயத்தையும் தாங்கிக் கொண்டு சென்னை சூப்பர் கிங்ஸ்க்கு 5ஆவது முறையாக வெற்றிக் கோப்பையைப் பெற்றுத் தந்தார்.
More From GoodReturns

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!



Click it and Unblock the Notifications