இந்தியாவே எதிர்பார்த்துக் காத்திருந்த ஐபிஎல் போட்டிகள் 22 ஆம் தேதி துவங்கும் வேளையில், முதல் போட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ஆர்சிபி-க்கு மத்தியில் நடக்க உள்ளது, அதுவும் சிஎஸ்கே கோட்டையான சென்னையில் இந்த மேட்ச் நடக்க உள்ளதால் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.
இந்த நிலையில் போட்டி துவங்கும் முன்பு எம்எஸ் தோனி தொடுத்த வழக்கில் முக்கிய திருப்பம் ஏற்பட்டு உள்ளது.

இந்திய கிரிக்கெட்-ன் சூப்பர்ஸ்டாராக இருக்கும் எம்.எஸ். தோனி தனது முன்னாள் பிஸ்ன்ஸ் பார்ட்னர் மீது ரூ.16 கோடி மோசடி வழக்கைத் சில வாரங்களுக்கு முன்பு தொடுத்தார். இந்த வழக்கில், தோனியின் முன்னாள் கூட்டாளிகளான ஆர்கா ஸ்போர்ட்ஸ் அண்டு மேனேஜ்மெண்ட் சேர்ந்த மிஹிர் திவாகர், சௌம்யா விஸ்வாஸ் ஆகியோருக்கு சம்மன் அனுப்ப ராஞ்சி நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது, இதனால் தோனிக்கு தரப்பு முதல் வெற்றி கிடைத்துள்ளதாகப் பார்க்கப்படுகிறது.
தோனி தரப்பு வழக்கறிஞர் வெளியிட்டுள்ள தகவல்படி, கிரிக்கெட் அகாடமி நிறுவுவதற்கான தோனி மற்றும் ஆர்கா ஸ்போர்ட்ஸ் அண்டு மேனேஜ்மெண்ட்-ன் 2 பிஸ்னஸ் பார்ட்னர் உடன் ஒப்பந்தம் செய்யப்பட்டது, இந்த ஒப்பந்த விதிமுறைகளை நிறைவேற்றத் தவறியதன் மூலம் தோனி-க்கு சுமார் ரூ.16 கோடி மோசடி செய்ததாக பிஸ்னஸ் பார்ட்னர் மீது வழக்கு தொடுத்துள்ளார்.
தற்போது ராஞ்சி நீதிமன்றம் புதன்கிழமை சம்மன் அனுப்ப உத்தரவிட்டது இதனைத் தொடர்ந்து, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கு 2023 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தொடரப்பட்டது. இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 406 (நம்பிக்கை மீறல்) மற்றும் 420 (ஏமாற்றுதல்) ஆகிய பிரிவுகளின் கீழ் நிறுவனத்தின் இரண்டு இயக்குநர்கள் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளதாக தோனியின் வழக்கறிஞர் தயானந்த் சிங் PTI செய்தியாளர்களுக்கு தெரிவித்தார்.
தோனியுடன் பணம் பகிர்ந்து கொள்ளாமல், அவருடன் ஒப்பந்தம் செய்த ஆர்கா ஸ்போர்ட்ஸ் அண்டு மேனேஜ்மெண்ட் சேர்ந்த மிஹிர் திவாகர், சௌம்யா விஸ்வாஸ் பிஸ்னஸ பார்ட்னர்கள் தோனியின் பெயரில் எட்டு முதல் பத்து இடங்களில் அகாடமி தொடங்கி, தோனிக்கு ரூ.16 கோடி இழப்பு ஏற்படுத்தியுள்ளதாக வழக்கறிஞர் குற்றம் சாட்டி, வழக்கு கொடுக்கப்பட்டது.
2017 ஆம் ஆண்டு, கிரிக்கெட் அகாடமி நிறுவுவதற்காகவும், உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் கிளைகளைத் திறப்பதற்காகவும், தோனி உடன் அந்த நிறுவன இயக்குநர்கள் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
இந்த ஒப்பந்தத்தின்படி, பிரான்சைசி கட்டணம் முழுமையாக தோனி பெறுவார், லாபத்தில் 70% தோனிக்கும், 30% அவரது கூட்டாளிகளுக்கும் பிரித்து கொள்ளப்படும் என்றும் ஒப்புக் கொள்ளப்பட்டது என்று தோனியின் வழக்கறிஞர் தகவல் தெரிவித்தார். இந்த விதிமுறைகள் சரியாக பின்பற்றாத காரணமாக தோனிக்கு 16 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டு உள்ளதாக வழக்கு தொடுக்கப்பட்டு உள்ளது.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications