புனே: பிரபல கிரிக்கெட் வீரரும் இந்தியா முழுவதும் பெரும் ரசிகர் பட்டாளத்தை கொண்டிருப்பவருமான மகேந்திர சிங் தோனி, மின்சார வாகன உற்பத்தியில் ஈடுபட்டிருக்கும் நிறுவனத்தில் முதலீடு செய்திருப்பது தெரியவந்துள்ளது.
மகேந்திர சிங் தோனி பல்வேறு துறைகளில் முதலீடு செய்துள்ளார் மற்றும் சில நிறுவனங்களையும் நடத்தி வருகிறார் . தன்னுடைய முதலீட்டின் ஒரு பகுதியாக அவர் புனேவை தலைமை இடமாக கொண்டு செயல்படக்கூடிய மின்சார வாகன ஸ்டார்ட் அப் நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளார்.

புனேவை தலைமையிடமாகக் கொண்டிருக்கும் ஈமோட்டாராடு (EMotorad) என்று நிறுவனத்துடன் மகேந்திர சிங் தோனி கூட்டமைத்துள்ளார். இந்த நிறுவனத்தில் கணிசமான தொகையை அவர் முதலீடு செய்துள்ளார்.
அதுமட்டுமின்றி இந்த நிறுவனத்தின் விளம்பர தூதராகவும் மகேந்திர சிங் தோனி செயல்பட போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பேசி இருக்கும் மகேந்திர சிங் தோனி, “எதிர்காலம் நம் கையில் இருக்கிறது , புதுப்புது கண்டுபிடிப்புகள் தான் சுற்றுச்சூழல் சார்ந்த பிரச்னைகளுக்கு நிலையான தீர்வினை அளிக்கின்றன. இதுபோன்ற புதிய கண்டுபிடிப்புகளின் பெரிய ரசிகன் நான்” என கூறியுள்ளார்.
மின்சார வாகன தயாரிப்பில் ஈடுபடும் நிறுவனத்தில் முதலீடு செய்வது தனக்கு உற்சாகம் தருவதாகவும் அவர் கூறியுள்ளார். மகேந்திர சிங் தோனி கிரிக்கெட் மட்டுமல்லாது ஸ்டார்ட்அப் முதலீடுகளிலும் சிறந்தவராக திகழ்ந்து வருகிறார்.
இவர் ஏற்கனவே 7 என்ற பெயரில் ஒரு ஆடை பிராண்டை நடத்தி வருகிறார். ராஞ்சியில் மகி ரெசிடென்சி என்ற பெயரில் ஹோட்டல், பெங்களூருவில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தோடு இணைந்து எம்எஸ் தோனி குளோபல் ஸ்கூல் என்ற ஒரு பள்ளியையும் நடத்துகிறார். இது தவிர தோனி என்டர்டெயின்மென்ட் லிமிடெட் என்ற பெயரில் இவர் படத் தயாரிப்பிலும் ஈடுபட்டிருக்கிறார்.
கடந்த 2020 ஆம் ஆண்டு ரஜிப் கங்காபாத்யாய், குணால் குப்தா, ஆதித்யா மற்றும் சுமித் பட்டேவர் ஆகியோரால் தொடங்கப்பட்ட நிறுவனம் தான் ஈ மோட்டாராடு. இந்த நிறுவனம் இந்தியாவின் மின்சார வாகன சந்தையில் முக்கிய இடத்தை பிடிக்கும் நோக்கில் செயல்பட்டு வருகிறது.
தற்போது இந்த நிறுவனத்தில் மகேந்திர சிங் தோனியும் இணைந்திருக்கிறார். இது தொடர்பாக பெருமிதம் தெரிவித்துள்ள நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான குணால் குப்தா, தங்கள் நிறுவனத்தின் அடிப்படை மதிப்பீடுகளுக்கும், மகேந்திர சிங் தோனிக்கும் பெருமளவில் ஒற்றுமை இருக்கிறது எனக் கூறுகிறார்.
More From GoodReturns

ஒரு மாதத்தில் 70% வளர்ச்சி: Ola electric பங்கினை இப்போது வாங்கலாமா? திடீரென பங்கு மதிப்பு உயர்வது ஏன்?

மீண்டும் இந்திய பங்குச்சந்தையை நோக்கி வரும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!! இனியாவது சந்தை ஏறுமா?

3 ஆண்டுகளில் 740% வளர்ச்சி அடைந்த மல்டிபேக்கர் பங்கு: இப்போது முதலீடு செய்யலாமா?

EMI-யும் கட்டியாச்சு,லாபமும் பார்த்தாச்சு! ரூ8 கோடியை வைத்து ரூ10 கோடி வீட்டை வாங்கிய சாதுர்ய நபர்!

அப்புறம் பாத்துக்கலாம்னு அசால்ட்டா இருக்காதீங்க! 5 வருஷம் லேட் பண்ணா ரூ3கோடி காலி.. SIP ரகசியம்?

வங்கி கடனை விட ஈஸி! உங்கள் PPF பணத்தை வைத்தே கடன் பெறலாம் - புதிய விதிமுறைகள் என்ன?

முகேஷ் அம்பானிக்கு ரூ.1 லட்சம் கோடி நஷ்டம்; 2 நாட்களில் 6% சரிவடைந்த ரிலையன்ஸ் பங்கு மதிப்பு!!

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?



Click it and Unblock the Notifications