இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனிக்கு அயோத்தியில் ஜனவரி 22 ஆம் தேதி நடைபெறும் புதிய ராமர் கோயில் திறப்பு விழாவுக்கு அதிகாரப்பூர்வ அழைப்பு வந்துள்ளது. ராஞ்சியில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து தோனிக்கு இந்த அழைப்பு தரப்பட்டுள்ளது.
சில நாட்களுக்கு முன்பு தான் மற்றொரு புகழ்பெற்ற கிரிக்கெட் வீரரான சச்சின் டெண்டுல்கருக்கு இதே அழைப்பு தரப்பட்டுள்ளது. ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்க் கோ பிராவின்ஸ் செக்ரட்டரி தனஞ்ஜெய் சிங் தோனிக்கு அழைப்பை வழங்கினார். அப்போது பாஜக மாநில பொதுச்செயலாளர் கர்மவீர் சிங் உடனிருந்தார்.

கோயில் திறப்பு விழாவுக்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. உத்தரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் மேற்பார்வையில் இந்தப் பணிகள் நடைபெறுகின்றன. ஸ்ரீ ராமர் ஜென்மபூமி வளாகத்தில் உள்ள குபேர் நவரத்ன திலாவுக்குச் சென்று, ஜடாயுவின் வெண்கலச் சிலையைத் திறந்து வைத்துவிட்டு பிரதமர் நரேந்திர மோடி, பிரான் பிரதிஷ்டா விழாவுக்குத் தலைமை தாங்குகிறார்.
கோயில் திறப்புவிழாவுக்கு வருகை தரும் விருந்தினர்களை வரவேற்கும் வேலைகளை ராமர் ஜென்மபூமி தீர்த்த க்ஷேக்ர டிரஸ்ட் செய்து வருகிறது. சிறப்பு விருந்தினர்களுக்கு ராம ராஜ்ஜியம் என்ற சிறப்பு பரிசுகள் வழங்கப்படவிருக்கிறது. கோயில் திறப்பு விழாவன்று சிறப்பு மோடிசூர் லட்டுகள் பிரசாதமாக விருந்தினர்களுக்கு தரப்படும்.
எம்எஸ் தோனி, சச்சின் டெண்டுல்கர் உள்பட 11,000 பேருக்கு ராமர் கோயில் திறப்பு விழாவில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தோனி, சச்சின் தவிர சர்வதேச தடகள வீரர்களான நீரஜ் சோப்ரா, பிவி சிந்து, ஜாக்கி ஷெராப், ரண்பீர் கபூர், ரஜினிகாந்த் உள்ளிட்டோருக்கும் அழைப்பு தரப்பட்டுள்ளது.
தற்போது எம்எஸ் தோனி விளையாட்டில் இருந்து ஒதுங்கி நேரத்தை செலவிட்டு வருகிறார். எதிர்வரும் இந்தியன் பிரீமியர் லீக்- ஐபிஎல் போட்டிக்கும் அவர் தயாராகி வருகிறார். இது தோனியின் கடைசி சீஸன் ஐபிஎல்லாக இருக்கும் எனத் தெரிகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 2023இல் தலைமை தாங்கி நடத்தினார் தோனி.
இதனிடையே ராமர் கோயில் திறப்பு விழாவுக்கு வரும் விருந்தினர்களை வரவேற்று தங்க வைப்பதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. உலகம் முழுவதும் இருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் இந்த ராமர் கோயில் திறப்பு விழாவில் பங்கேற்க வருகை தருவர் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கான ஏற்பாடுகளை உத்தரப் பிரதேச மாநில அரசு அதிகாரிகள் முனைப்புடன் செய்து வருகின்றனர்.
More From GoodReturns

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!



Click it and Unblock the Notifications