இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனி, வருமான வரித் துறையின் படி, சர்வதேச கிரிக்கெட் மூலம் இந்திய அணிக்கான தனது கிரிக்கெட் பயணத்தை தொடங்கியதிலிருந்து, ஜார்கண்ட் மாநிலத்தில் அதிக தனிநபர் வரி செலுத்தும் நபராக தொடர்ந்து இருந்து வருகிறார்.
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றாலும், ஜார்கண்டில் அதிக வரி செலுத்துபவராக எம்எஸ் தோனி உள்ளார் என்பது தான் முக்கியமான தகவல். எம்.எஸ். தோனி இந்திய அணிக்காக கிரிக்கெட் விளையாடுவதில் இருந்து ஓய்வு பெற்றாலும் ஐபிஎல் போட்டிகள் மூலம் தனது ரசிகர்களுக்கு தரினசம் கொடுத்து வருகிறார்.
கடந்த வாரம் ஐபிஎல் போட்டிகள் துவங்கிய நிலையில், ஒவ்வொரு முறை தோனியை டிவியில் பார்க்கும் போது கிரிக்கெட் ரசிகர்களின் பல்ஸ் எகிறுகிறது.
எம்எஸ் தோனி வர்த்தகம், வருமானம்
கிரிக்கெட் உலகின் வெற்றிகரமான கேப்டன்களில் மகேந்திர சிங் தோனி மிகவும் முக்கியமான ஒருவர். அவர் கேப்டனாக இருந்த காலத்தில் இந்திய கிரிக்கெட் அணி வெற்றிப்பெறாத சர்வதேச கோப்பைகளே இல்லை. கேப்டன் கூல் என பெயர் பெற்ற தோனி கிரிக்கெட் விளையாடுவதை தாண்டி பல வர்த்தகம் செய்து வருகிறார்.
ஜார்கண்ட் மாநிலத்தில் அதிக வரி செலுத்துபவரா எம்எஸ் தோனி இருக்க அவர் என்ன பிஸ்னஸ் செய்கிறார், கிரிக்கெட் விளையாடுவதில் மட்டும் தான் சம்பாதிக்கிறாரா..?
SEVEN
ரிதி குரூப் உருவாக்கிய செவன் என்னும் லைப்ஸ்டைல் பிராண்ட் பிப்ரவரி 2016ல் தோனியை பிராண்ட் அம்பாசிடராக இருக்க அணுகியது, ஆனால் இந்த டீலை வர்த்தகமாக மாற்றினார் தோனி. 150 கோடி ரூபாய் மதிப்புள்ள காலணி வர்த்தக்தை Seven பிராண்டில் உருவாக்கி சொந்தமாக்கியுள்ளார்.
எம்எஸ் தோனியின் ஸ்போர்ட்ஸ் ஃபிட்
மகேந்திர சிங் தோனி-யின் பிட்னஸ் பற்றி பேசவே தேவையில்லை, SportsFit World Pvt. Ltd என்னும் ஜிம் நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளார். தோனி முதலீட்டில் இயங்கும் ஸ்போர்ட்ஸ்ஃபிட் வேர்ல்ட் பிரைவேட் லிமிடெட் தற்போது நாடு முழுவதும் 200 ஜிம்களை வைத்துள்ளது.
சென்னையின் எப்.சி
தோனி கிரிக்கெட் விளையாடத் தொடங்குவதற்கு முன்பு, அவர் தனது பள்ளி அணியில் கோல்கீப்பராக விளையாடினார் என்பது அனைவருக்கும் தெரியும், பல முறை அவர் பிரபலங்கள் உடன் இணைந்து புட்பால் விளையாடியதையும் பார்த்துள்ளோம்.
ப்ரொபஷனல் கால்பந்து விளையாட வேண்டும் என்ற அவரது கனவை நிஜமாக்க முடியவில்லை என்றாலும், தோனி இப்போது இந்தியன் சூப்பர் லீக், சென்னையின் எஃப்சி கால்பந்து அணிக்கு சொந்தக்காரர்.
ராஞ்சி ரேஸ்
கால்பந்து தவிர, ஹாக்கி அணியிலும் தோனி முதலீடு செய்துள்ளார். புகழ்பெற்ற கிரிக்கெட் வீரர் ராஞ்சி ரேஸின் இணை உரிமையாளராக உள்ளார் - ஜார்கண்ட்டை தளமாகக் கொண்ட அணி ஹாக்கி இந்தியா லீக்கில் (HIL) விளையாடுகிறது.
மஹி ரேசிங் டீம் இந்தியா
மகேந்திர சிங் தோனி மஹி ரேசிங் டீம் இந்தியா என பிரான்சைஸ் வைத்துள்ளார். தெலுங்கு திரைப்பட நட்சத்திர நடிகர் அக்கினேனி நாகார்ஜுனாவும் தோனியின் ரேசிங் அணியுடன் இணைந்துள்ளார்.
ஆடம்பர கார்கள் மற்றும் பைக்குகள் மீது தோனியின் காதல் எல்லோருக்கும் தெரியும், விலையுயர்ந்த ஸ்போர்ட்ஸ் பைக்குகளின் பெரிய கலெக்ஷன் அவரிடம் உள்ளது.
7InkBrews
டோனி உணவு மற்றும் குளிர்பானங்கள் தயாரித்து விற்பனை செய்யும் ஸ்டார்ட்அப் நிறுவனமான 7InkBrews இன் பங்குதாரராக உள்ளார். 7InkBrews நிறுவனம் புதிய தயாரிப்புகள், கைவினைப்பொருட்கள் சாக்லேட்டுகள் மற்றும் பானங்களை அறிமுகப்படுத்தியது.
மஹி ஹோட்டல்
இதுவரை MS தோனி பல பிரபலமான வணிகத்தில் முதலீடு செய்திருந்தாலும் இது மிகவும் முக்கியமான ஒன்றாகும். ஏனெனில் அவர் ஹோட்டல் மஹி ரெசிடென்சி என்ற பெயரில் ஒரு ஹோட்டலையும் வைத்திருக்கிறார் என்பது அதிகளவில் யாருக்கும் தெரியாது.
பிற வர்த்தகம்
இது மட்டும் அல்லாமல் MS தோனி 10 ஏக்கரில் ஆர்கானிக் விவாசயம், சமீபத்தில் திரைப்பட தயாரிப்பதில் முதலீடு, தென்னிந்தியாவில் பள்ளிகளை திறந்துள்ளது என பல வர்த்தகத்தில் நுழைந்துள்ளார். இப்படி பல வர்த்தகத்தை செய்யும் MS தோனி ஜார்கண்டில் அதிக வரி செலுத்துபவராக உயர்ந்துள்ளார்.
38 கோடி ரூபாய்
இந்த ஆண்டு மார்ச் 31ஆம் தேதியுடன் முடிவடைந்த நிதியாண்டில் தோனி மொத்தம் 38 கோடி ரூபையை ஐடி துறைக்கு முன்கூட்டிய வரி அதாவது அட்வான்ஸ் டாக்ஸ் செலுத்தியுள்ளார். கடந்த ஆண்டும் இதே தொகையை அட்வான்ஸ் டாக்ஸ் ஆக டெபாசிட் செய்திருந்தார். அட்வான்ஸ் டாக்ஸ் அளவை பார்க்கும் போது அவருடைய வருமானம் 130 கோடி ரூபாயாக இருக்கும்.
மேலே கூறப்பட்ட வர்த்தகத்தை தாண்டி MS தோனி ஹோம்லேன், கார்ஸ் 24, கட்டாபுக் போன்ற பல நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளார்.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

165 ஆண்டுகளில் இல்லாத தரமான சம்பவத்தை செய்த டிரம்ப்..!! வாயடைத்துப்போன எதிர்க்கட்சியினர்..!!



Click it and Unblock the Notifications