சினிமாவுக்கு எப்படி அஜித் ஒரேயொரு தல-யோ கிரிக்கெட்-க்கு எப்பவுமே ஒரே தல நம்ம தோனி தான். கிரிக்கெட் ரசிகர்கள் தோனியை அணு அணுவாக ரசிக்கும் வேளையில் இவருடைய கார் மற்றும் பைக் கராஜ் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.
எம்எஸ் தோனிக்கு இந்த ஐபிஎல் போட்டி தான் கடைசி என பலருக்கும் கூறிய நிலையில் ஐபிஎல் கோப்பையை வென்ற கையோடு தோனி ஒட்டுமொத்த இந்தியர்களுக்கும், உலகளாவிய கிரிக்கெட் ரசிகர்களுக்கும் அந்த ஒரு குட்நியூஸ்-ஐ வெளியிட்டார். ரசிகர்களுக்காக அடுத்த ஐபிஎல் சீசனில் தான் விளையாடுவதாக அறிவித்தார்.

எம்எஸ் தோனிக்கு கிரிக்கெட்-ஐ தாண்டி அதிகம் நாட்டம் கொண்ட ஒரு விஷயம் கார் மற்றும் பைக். தோனியிடம் பல கார்கள், பைக்குகள் இருப்பது குறித்து அவ்வப்போது தகவல் வெளிவந்தாலும், அவருடைய வீட்டில் இருக்கும் மாபெரும் கராஜ் வீடியோ இதுவரையில் வெளி வந்தது இல்லை. இந்த நிலையில் தோனியின் மாபெரும் கராஜ் வீடியோ தற்போது வெளியாகி பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
எம்எஸ் தோனியை அவரது ரான்சி வீட்டில் முன்னாள் கிரிக்கெட் வீரர் வெங்கடேஷ் பிரசாத், சுனில் ஜோஷி ஆகியோர் சந்தித்த நிலையில் தோனியின் கார் மற்றும் பைக் கராஜ்-ஐ பார்த்து வாயை பிளந்துள்ளனர். இந்த வீடியோ தான் தற்போது சமுக வலைத்தளத்தில் டிரெண்டாகி வருகிறது.
வெங்கடேஷ் பிரசாத், சுனில் ஜோஷி ரான்சிக்கு பல முறை வந்திருந்தாலும், முதல் முறையாக லெஜென்ட் தோனி உடன் அவருடைய கார் மற்றும் பைக் கராஜ் பார்ப்பதாக இந்த வீடியோவில் தெரிவித்துள்ளனர். கார் மற்றும் பைக் கராஜ்-ஐ விவரிக்க முடியாது முற்றிலும் Crazy, ஒருவர் கார் மற்றும் பைக் மீது எவ்வளவு பைத்தியமாக இருக்கிறார் என்பதை பார்க்க முடிகிறது என தெரிவித்துள்ளனர்.
எம்எஸ் தோனியின் கார் கராஜ்-ல் கீழ் தளத்தில் கார்களும், H2R போன்ற சில முக்கியமான விலை உயர்ந்த பைக்குகளும், மேல் தளம் முழுவதும் வின்டேஜ் பைக்குளை நிறுத்தி வைத்துள்ளார். இது கராஜ்-ஆ அல்லது பைக் ஷோரூம்-ஆ என வெங்கடேஷ் பிரசாத், சுனில் ஜோஷி இந்த வீடியோவில் கேட்டுள்ளனர்.
இந்த வீடியோவில் சாக்ஷி, தோனியிடம் ஏன் இப்படி என கேட்க, என்னிடம் இருக்கும் எல்லாத்தையும் எடுத்துக்கிட்ட, இது மட்டும் தான் எனக்கென்று இருக்கு என செல்லமாக கூறினார். இந்த வீடியோ இதுவரையில் சுமார் 12 லட்சம் பேர் பார்த்துள்ளனர்.
தோனியிடம் ஆடி, ஹம்மர் போன்ற பெரிய பிராண்ட் கார்கள் உள்ளன. ஆனால் தோனியின் கராஜ்-ல் ஸ்பெஷலான விஷயம் என்னவெனில் இவரிடம் இருக்கும் வின்டேஜ் கார் மற்றும் பைக் கலெக்ஷன் தான். இதோடு தோனியிடம் Confederate X132 Hellcat, அதிவேக பைக்குகளான H2R போன்ற அரிதான பைக்குகளும் உள்ளது.
More From GoodReturns

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?



Click it and Unblock the Notifications