கடந்த ஆறு மாதங்களாக இந்தியாவை புரட்டிப் போட்ட ஆனந்த் அம்பானி, ராதிகா மெர்ச்சன்ட் திருமண விழா ஜூலை 12 ஆம் தேதியுடன் வெகு விமரிசையாக நடந்து முடிந்தது. இந்த விழாவில் உலகம் முழுவதிலும் இருந்து ஏராளமான விருந்தினர்கள் வந்து சிறப்பித்தனர்.
மும்பையின் பாந்த்ரா - குர்லா காம்ப்ளெக்ஸில் உள்ள ஜியோ வேர்ல்டு கன்வென்ஷன் சென்டரில் இந்தத் திருமணம் அதி விமரிசையாக நடைபெற்றது. இது பற்றி இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் எம்எஸ் தோனி, ராதிகா மீது தொடர்ந்து உங்களது அன்பை பொழிந்து வாருங்கள் ஆனந்த் என்று குறிப்பிட்டுள்ளார். அத்துடன் உங்களது வளமான வாழ்வுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள் என்றும் தோனி வாழ்த்தியுள்ளார்.

மேலும் ராதிகா! உங்களது பிரகாசமான புன்னகை என்றென்றும் ஜொலிக்கட்டும். ராதிகா மீது உங்களது அன்பைத் தொடர்ந்து பொழியுங்கள். நீங்கள் பிறர் மீது செலுத்தும் அன்பையும் பாசத்தையும் ராதிகா மீது செலுத்த வேண்டும் ஆனந்த். உங்களது மணவாழ்க்கை சீரும் சிறப்புமாக மகிழ்ச்சி நிறைந்ததாக தளைக்கட்டும். ஒவ்வொரு கணமும் மகிழ்ச்சியால் திளைக்கட்டும். விரைவில் உங்களை சந்திக்கிறேன். வீரெண் அங்கிளுக்கும் என் வாழ்த்துகள். அவருக்காக ஒரு பாட்டை அர்ப்பணிக்கிறேன் என்று தோனி குறிப்பிட்டுள்ளார்.
இத்துடன் தோனி ஒரு புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார். இதுவரை அந்தப் படத்தை 34 லட்சத்துக்கும் மேலானவர்கள் பார்த்து ரசித்துள்ளனர். இந்த எண்ணிக்கை நொடிக்கு நொடி அதிகரித்த வண்ணமே உள்ளது.
தோனியின் இந்த பதிவுக்கு ஏராளமான பின்னூட்டங்கள் குவிந்த வண்ணம் உள்ளது. ஒருவர், தல ஒருவரது திருமணத்துக்கு வாழ்த்தியுள்ளார். அப்படியென்றால் அவர் மிகவும் அதிர்ஷ்டசாலிதான் என பதிவிட்டுள்ளார். மற்றொருவர், நாமென்ன மஹி அடிக்கடி சோசியல் மீடியாவை பகிரும் காலத்துக்குத் திரும்பி விட்டோமா எனக் கூறியுள்ளார்.
மாற்றொருவர், R+A+D+H+I+K+A = 7 தலக்கு காரணம் இருக்குது பா எனக் குறிப்பிட்டுள்ளார். வேறொருவர், திருமணம் நடந்தது ஜூலை. இது வருடத்தில் ஏழாவது மாதம். மெசேஜ் கிளியர். தல சொன்னா சரியாத்தான் இருக்கும் என பதிவிட்டுள்ளார். தோனியின் ஆசிகள் ஆனந்த் அம்பானிக்கு பெரிய வரவேற்பைத் தந்துள்ளது.
Story written by: Jayachandran


Click it and Unblock the Notifications