தோனிக்கு இது தான் கடைசி சீசன் என ஒவ்வொரு சீசனிலும் தகவல் பரப்பப்படும் நிலையில், நடப்பாண்டு ஐபிஎல் 2025 சீசனிலும் தோனி தனது 43 வது வயதில் விளையாடுகிறார். 12 கோடி ரூபாய் சம்பளம் பெற்று வந்த தோனி மற்ற வீரர்களுக்கு பெரிய அளவு ஊதியம் கொடுக்க வேண்டும் என்பதற்காக தம்மை புதிய விதி மூலம் மாற்றிக்கொண்டு சம்பளத்தை வெறும் 4 கோடி ரூபாயாக குறைத்துக் கொண்டார். இந்தாண்டு தான் தோனிக்கு கடைசி சீசன் என்று பலரும் கூறிவரும் நிலையில், மகேந்திர சிங் தோனி தனது ஓய்வு குறித்து பரவி வரும் வதந்திகளை தன் பாணியில் மறுப்பு தெரிவித்துள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) தனது குடும்பம் போன்றது என்றும், முடிந்தவரை தொடர்வேன் என உறுதியாக தெரிவித்துள்ளார்.

இன்று சென்னை சேப்பாக்கத்தில் சென்னை - மும்பை அணிகள் மோதுகின்றன. இப்போட்டிக்கு முன்னதாக, JioCinema-க்குக் கொடுத்த பேட்டியில் தனது ஓய்வு குறித்து பரவி வரும் வதந்திகளுக்கு மறுப்பு தெரிவித்தார். மேலும், "CSK-க்காக நான் எப்போது வேண்டுமானாலும் விளையாடலாம். அது என் அணியல்ல, என் குடும்பம், நான் வீல்செயரில் இருந்தாலும் கூட, அவர்கள் என்னை களத்திற்கு இழுத்துக்கொண்டு சென்று விடுவார்கள்!" என்று CSK அணியுடன் உள்ள ஆழமான தொடர்பை உருக்கமாக வெளிப்படுத்தினார்.
ஓராண்டுக்கு பிறகு மீண்டும் களமிறங்கும் தோனி: மகேந்திர சிங் தோனி ஏறக்குறைய ஒரு வருட இடைவெளிக்கு பின் முதன்முறையாக ஐபிஎல் 2025 18வது சீசனில் களமிறங்க உள்ளார். தோனி கடைசியாக ஐபிஎல் 17 சீசனில் பங்கேற்றார். அதன்பிறகு ஓய்வெடுத்து இருந்த தோனி, இப்போது மீண்டும் மஞ்சள் ஜெர்ஸியில் களம்காண்கிறார். தோனி தற்போது CSK அணியின் அதிகாரப்பூர்வ கேப்டன் அல்ல என்று கூறியிருந்தாலும், அணியின் ஒவ்வொரு முடிவிலும் அவரது தாக்கம் தெளிவாக தெரிகிறது. அதாவது, அணியில் யார் இருக்க வேண்டும், எப்படி அணியை கட்டமைக்க வேண்டும் என்பதில் தோனியின் தாக்கம் தெளிவாக தெரிகிறது. போட்டியின்போது களமிறங்கும் 11 வீரர்களின் (பிளேயிங் 11) தேர்விலும், அவரது அனுபவம் வழிகாட்டுகிறது. CSK-வின் அணிச் சூழ்நிலை, "Cool & Composed" அணுகுமுறை, தோனியின் பாணியை பிரதிபலிக்கிறது.
விக்கெட் கீப்பராக இருப்பது மட்டுமல்ல, ஸ்டம்புகளுக்குப் பின்னால் இருந்து தோனி பந்துவீச்சாளர்களுக்கு வழங்கும் ஆலோசனைகள் CSK-வின் ரகசிய ஆயுதமாக மாறியுள்ளது. அதாவது, ஸ்டம்புகளுக்கு பின்னால் நின்று, பேட்ட்ஸ்மேன்களின் செயல்பாட்டை கணிக்கிறார். அவர்களின் அடுத்த பந்தில் என்ன செய்யப் போகிறார்கள் என்பதை உணர்ந்து, பந்துவீச்சாளர்களுக்கு உகந்த ஆலோசனைகளை தருகிறார்.
முன்னதாக, ஐபிஎல் 2025 சீசன் நேற்று சனிக்கிழமை துவங்கியது, அதில் நடப்பு சாம்பியனான கொல்கத்தாவை வீழ்த்தி பெங்களூரு அணி முதல் ஆட்டத்திலேயே முதல் வெற்றிப்பெற்றது. இருப்பினும், அனைவரின் கவனம் ஒரு பெரிய மோதலின் மீதுதான். அதுதான் இன்று சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறும் ஐந்து முறை சாம்பியன்கள் CSK & MI இரு பிரம்மாண்ட அணிகள் மோதும் தருணம். தான் ஐபிஎல் ரசிகர்களை மிகவும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
முன்னாள் கேப்டன்கள் தோனி மற்றும் ரோஹித் இருவரும் ஐபிஎல்லில் நீண்ட காலம் அணிகளை வழிநடத்தினர். ஆனால் இப்போது ஐபிஎல்லில் ஒரு புதிய யுகம் பிறந்துள்ளது, அதாவது, இது ஐபிஎல் கிரிக்கெட்டில் ஒரு புதிய சகாப்தம், இங்கு இளைஞர்கள் தலைமையை ஏற்றுக்கொண்டிருக்கின்றனர். தோனி CSK-யை 2008 முதல் வழிநடத்தினார், ரோஹித் 2013 முதல் MI-யை சாம்பியன் ஆக்கியுள்ளார். ஆனால் இப்போது, IPL-ல் இளம் தலைமுறைகள் தலைமையை ஏற்று, அணிகளை புதிய உச்சத்துக்கு செல்வார்கள் என்று நம்பிக்கை உள்ளது.
மும்பை இந்தியன்ஸ் தனது ஆறாவது ஐபிஎல் கோப்பையை நோக்கி சூர்ய குமார் தலைமையில் பயணிக்கிறது, அதே நேரத்தில் ருதுராஜ் கெய்க்வாட் CSK-வின் புதிய வழிகாட்டியாக உள்ளார். இரு அணிகளிலும் ரோஹித் சர்மா, சூர்யகுமார் யாதவ், தியாக் வர்மா, ரவிச்சந்திரன் அஷ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா போன்ற ரசிகர்களின் விருப்பமான வீரர்கள் இருப்பதால், ரசிகர்கள் இந்த ஆட்டத்தை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.
CSK கேப்டன் ருதுராஜ் கெய்க்வாடிடம் தோனியின் இறுதி சீசன் குறித்து கேட்கப்பட்டது. அதற்கு அவர் மகிழ்ச்சியான பதில் அளித்தார். "சச்சின் டெண்டுல்கர் கூட 50 வயதிலும் அதே நிலைமையில் சிறப்பாக பேட்டிங் செய்கிறார். எனவே, தோனி இன்னும் பல ஆண்டுகள் விளையாடுவார்! என்று கூறினார்.
More From GoodReturns

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!

தங்க சந்தையில் நடந்த தலைகீழ் மாற்றம்!! பொட்டி பொட்டியாக வெளியே வரும் தங்கம்!!

ஈரான் போரை மையமாக வைத்து புதிய தொழில்: கோடிகளை அள்ளும் டிரம்ப் மகன்கள்!! வெளிச்சத்துக்கு வந்த உண்மை!!



Click it and Unblock the Notifications