இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, தற்போது ஐபிஎல் அணியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பிடித்துள்ளார். இவர் மைதானத்தில் இறங்கினாலே தோனி, தோனி என்ற முழக்கம் விண்ணை பிளக்கும். சாதாரண குடும்ப பின்னணியில் இருந்து வந்து கிரிக்கெட் உலகில் தவிர்க்க முடியாத நபராக உருவெடுத்தவர் தோனி.
தன்னுடைய தலைமை பண்புகளாலும், எளிமை குணத்தாலும் நாடு முழுவதும் கோடி கணக்கான ரசிகர்களை கொண்டுள்ளார். இன்றும் தோனி மைதானத்தில் வந்து ஆடமாட்டாரா என்ற ஏக்கத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் போட்டி என்றாலே ரசிகர்கள் மைதானம் முழுவதும் நிரம்புகின்றனர். தோனி தன்னுடைய பல செயல்பாடுகள் மூலம் ரசிகர்களை ஈர்ப்பவர். அந்த வகையில் 2025-26ஆம் நிதியாண்டில் பீகார், ஜார்க்கண்ட் ஆகிய 2 மாநிலங்களிலும் சேர்த்து, தனிநபர் பிரிவில் அதிக வரி செலுத்திய நபராக இருக்கிறார் தோனி.

பீகார் - ஜார்க்கண்ட் வருமான வரித்துறை முதன்மை தலைமை ஆணையர் டாக்டர் டி.சுதாகர ராவ், ராஞ்சியில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் 2025-26ஆம் நிதியாண்டில் பீகார் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களில் இருந்து வசூலிக்கப்பட்ட மொத்த வரி சுமார் ரூ.20,000 கோடி ஆகும். இதில் ஜார்க்கண்ட் மாநிலத்தில் இருந்து மட்டும் ரூ.12,000 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது என்றார்.
இரு மாநிலங்களிலும் சேர்த்து தனி நபர் பிரிவில் அதிக வரி செலுத்தியவர்கள் பட்டியலில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி முதலிடம் பிடித்துள்ளார் என கூறியுள்ளார். என்றார். எனினும், தோனி செலுத்திய வரித் தொகையை வெளியிட அவர் மறுத்துவிட்டார்.
ரசிகர்களால் தல தோனி என அன்போடு அழைக்கப்படக்கூடிய மகேந்திர சிங் தோனி 1060 கோடி ரூபாய் சொத்துக்கு சொந்தக்காரராக இருக்கிறார். இந்தியாவிலேயே செல்வ வளம் மிக்க கிரிக்கெட் வீரர்களில் ஒருவராக தொடர்ந்து தக்கவைத்துக் கொண்டிருக்கிறார். பல்வேறு போட்டிகளில் இருந்து அவர் ஓய்வு பெற்று விட்டாலும் தொடர்ந்து விளம்பரங்களில் தோன்றுவதன் மூலமும், ஐபிஎல் அணியில இடம் பெற்றுள்ளதன் மூலமும் அவருக்கு கணிசமான வருமானம் என்பது கிடைத்து வருகிறது.
அது மட்டும் இல்லாமல் பல்வேறு நிறுவனங்களிலும் அவர் முதலீடு செய்து இருக்கிறார் .சென்னை கிங்ஸ் அணியின் மூலம் தோனிக்கு 4 கோடி ரூபாய் சம்பளம் கிடைக்கிறது. அது தவிர விளம்பரங்களில் தோன்றுவதற்கு ஒரு விளம்பரத்திற்காக 6 கோடி ரூபாய் அவர் சம்பளம் பெறுகிறார். கார்ஸ்24, கருடா ஏரோஸ்பேஸ், கதா புக் போன்ற பல்வேறு நிறுவனங்களிலும் அவர் பெரிய அளவில் முதலீடு செய்திருக்கிறார். தோனியின் மனைவி ஒரு திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார்.


Click it and Unblock the Notifications