MSCI Global Investable Market Indexes-ல் தனது வழக்கமான பிப்ரவரி மாதம் ஆய்வுக்குப் பின்பு அதானி குழுமத்தின் செக்யூரிட்டிகள் குறித்த தகுதிகளைக் குறைப்பதாக அறிவித்த நிலையில் புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பில் 2 நிறுவனங்களின் தகுதி குறைப்பை ஒத்திவைப்பதாக அறிவித்தது.
இது அதானி குழுமத்திற்கும், அதானி குழு பங்குதாரர்களுக்கும் சாதகமாக மாறியுள்ளது. இதன் எதிரொலியாக இன்று அதானி குழுமத்தின் பங்குகள் உயர்வுடன் முடிந்தது மட்டும் அல்லாமல் அதானி பங்குகள் விலை குறைவாக இருக்கும் நிலையில் இதைப் பணமாக்க நீண்ட கால அடிப்படையில் புதிய முதலீடுகள் குவிந்து வருகிறது.
இதற்கிடையில் தான் MSCI 2 நிறுவனங்களின் தகுதி குறைப்பை ஒத்திவைப்பதாக அறிவித்தது.
MSCI அமைப்பு
MSCI அமைப்பு அதானி எண்டர்பிரைசஸ் உட்பட அதானி டோட்டல் கேஸ், அதானி டிரான்ஸ்மிஷன், அதானி குழுமத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் ACC என மொத்தம் 4 அதானி குரூப் நிறுவனங்களின் ப்ரீ ப்ளோட் வெயிட்டேஜ் குறைப்பதாக அறிவித்துள்ளது. 4 நிறுவனங்களின் ப்ரீ ப்ளோட் பங்கு அளவீடுகளை ஆய்வு செய்து அதன் பின்பு எடுக்கப்பட்ட முடிவு எனக் கடந்த வாரம் அறிவித்தது.
ஒத்திவைப்பு
இந்த நிலையில் MSCI அமைப்புப் புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பில் 2 நிறுவனங்களின் தகுதி குறைப்பை ஒத்திவைப்பதாக அறிவித்தது. இதன் மூலம் அதானி டோட்டல் கேஸ் மற்றும் அதானி டிரான்ஸ்மிஷன் நிறுவனங்களின் தகுதி குறைப்பை மே பென்ச்மார்க் மறுஆய்வுக்கு ஒத்திவைப்பதாக அறிவித்தது.
சிறப்புக் கவனிப்பு
MSCI அமைப்பு பிப்ரவரி மாதம் துவக்கத்தில் இருந்து அனைத்து அதானி குழும நிறுவனங்களுக்குச் சிறப்புக் கவனிப்பு அளிப்பதாகத் தெரிவித்துள்ளது. MSCI அமைப்பின் ப்ரீ ப்ளோட் வெயிட்டேஜ் குறைப்பு குறித்தும், இதில் 2 நிறுவனங்களின் தகுதி குறைப்பை மே மாதத்திற்கு ஒத்திவைப்பது குறித்தும் அதானி குழுமம் இதுவரையில் எவ்விதமான அறிவிப்புகளையும் வெளியிடவில்லை.
ப்ரீ ஃப்ளோட் தகுதி
ப்ரீ ஃப்ளோட் தகுதி என்பது சர்வதேச சந்தை முதலீட்டாளரால் பொதுப் பங்குச் சந்தைகளில் வாங்குவதற்குக் கிடைக்கக்கூடிய பங்குகளின் விகிதமே ஒரு செக்யூரிட்டி-யின் ப்ரீ ஃப்ளோட் தகுதியை வரையறுக்கிறது. இதேபோல் ஒரு செக்யூரிட்டி-யின் குறிப்பிட்ட நிலையற்ற தன்மை கொண்டு இருந்தால் மட்டுமே ப்ரீ ஃப்ளோட் தகுதி நீக்கப்படும்.
அதானி குழும பங்குகள் விலை
MSCI அமைப்பின் அறிவிப்புக்குப் பின்பு அதானி குழு பங்குகளின் தற்போதைய நிலை
அதானி எண்டர்பிரைசஸ் - 1.00 சதவீதம் உயர்வு
அதானி போர்ட்ஸ் - 1.45 சதவீதம் உயர்வு
அதானி பவர் - 4.97 சதவீதம் உயர்வு
அதானி டிரான்ஸ்மிஷன் - 4.93 சதவீதம் சரிவு
அதானி கிரீன் எனர்ஜி - 0.69 சதவீதம் சரிவு
அதானி டோட்டல் கேஸ் - 5.00 சதவீதம் சரிவு
அதானி வில்மார் - 5.00 சதவீதம் உயர்வு
ஏசிசி லிமிடெட் - 0.55 சதவீதம் சரிவு
அம்புஜா சிமெண்ட்ஸ் - 0.99 சதவீத உயர்வு
NDTV - 4.99 சதவீதம் உயர்வு
டிபி பவர் நிறுவன டீல்
அதானி பவர் நிறுவனம் சுமார் 7,017 கோடி ரூபாய் மதிப்பிலான டிபி பவர் நிறுவனத்தைக் கையகப்படுத்த ஒப்பந்தம் செய்யப்பட்ட நிலையில், இந்தப் பரிவர்த்தனையை நிறைவு செய்யும் காலக்கெடு முடிவடைந்ததால் புதன்கிழமை அதிகாரப்பூர்வமாக டிபி பவர் நிறுவனத்தைக் கையகப்படுத்துவதில் இருந்து அதானி பவர் வெளியேறியுள்ளது.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications