MSCI குறியீடு அமைப்பு வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பில் அதானி குழுமத்தின் சில செக்யூரிட்டிகள் ப்ரீ ப்ளோட் தகுதி பெற்ற கூடாது என்றும், இதன் தகுதிகளை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.
கௌதம் அதானி தலைமை வகிக்கும் அதானி குழும நிறுவனங்களின் MSCI அமைப்பின் சில குறியீடுகளில் இடம்பெறுவதற்கான தகுதிகள் குறித்துக் கேள்வி எழுப்பப்பட்ட நிலையில் இந்த மறு ஆய்வு முடிவை எடுத்துள்ளது.
MSCI Global Investable Market Indexes-ல் தனது வழக்கமான பிப்ரவரி மாதம் ஆய்வுக்குப் பின்பு அதானி குழுமத்தின் செக்யூரிட்டிகள் குறித்த தகுதிகளை அறிவிக்கும் என விளக்கம் கொடுத்துள்ளது. ஆனால் இன்று காலை வரையில் தகுதிகளில் எவ்விதமான மாற்றமும் செய்யப்படவில்லை.
MSCI குறியீடு
MSCI உலகளாவிய முதலீட்டு சந்தை குறியீடுகளுக்கான (GIMI) அதானி குழுமத்துடன் தொடர்புடைய குறிப்பிட்ட பத்திரங்களின் தகுதி மற்றும் ப்ரீ ஃப்ளோட் தகுதி நிர்ணயம் குறித்துச் சந்தை பங்கேற்பாளர்களிடமிருந்து MSCI பல கருத்துக்களைப் பெற்றுள்ளது," என்று அது ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
பிப்ரவரி மாதம் ஆய்வு
இதைத் தொடர்ந்து தான் தனது வழக்கமான பிப்ரவரி மாதம் ஆய்வில், அதானி குழுமத்தின் செக்யூரிட்டிகள் குறித்த தகுதிகளை ஆய்வு செய்து இன்று அதன் முடிவுகளை வெளியிட உள்ளது. கடந்த மாதம் MSCI சந்தை பங்கேற்பாளர்களிடமிருந்து கருத்துக் கேட்பதாக அறிவித்தது.
ப்ரீ ஃப்ளோட் தகுதி
சர்வதேச சந்தை முதலீட்டாளரால் பொதுப் பங்குச் சந்தைகளில் வாங்குவதற்குக் கிடைக்கக்கூடிய பங்குகளின் விகிதமே ஒரு செக்யூரிட்டி-யின் ப்ரீ ஃப்ளோட் தகுதியை வரையறுக்கிறது. இதேபோல் ஒரு செக்யூரிட்டி-யின் குறிப்பிட்ட நிலையற்ற தன்மை கொண்டு இருந்தால் மட்டுமே ப்ரீ ஃப்ளோட் தகுதி நீக்கப்படும். இதற்கான ஆய்வை தான் இன்று MSCI செய்ய உள்ளது.
கௌதம் அதானி
கௌதம் அதானி தலைமையிலான நிர்வாகம் சில பங்கு அடிப்படையிலான கடன்களை முன்கூட்டியே அடைத்த நிலையில் அதானி குழும பங்குகள் கடந்த 3 நாட்களாகத் தொடர்ந்து உயர்ந்து உயர்வு பாதையில் இருந்தது. இன்று MSCI அமைப்பின் அறிவிப்பு வெளியான பின்பு அடுத்தடுத்து சரிய துவங்கியது.
ஹிண்டன்பர்க் அறிக்கை
ஹிண்டன்பர்க் அறிக்கை மூலம் அதானி குழும பங்குகள் பெரும் பாதிப்பை எதிர்கொண்டு வந்தாலும் ஆர்பிஐ, நிதியமைச்சகம் இந்திய வங்கி அமைப்புகளின் வலிமை, நிலைத்தன்மை குறித்து உறுதியாக இருக்கும் காரணத்தால் தொடர்ந்து வேகமாக வளர்ச்சி அடைந்தது.
அதானி குழு முதலீட்டாளர்கள்
இந்த நிலையில் அதானி குழு முதலீட்டாளர்களும் நீண்ட காலச் சரிவுக்குப் பின்பு தொடர்ந்து உயர்வை பதிவு செய்து வந்த காரணத்தால் மகிழ்ச்சியுடன் இருந்த நிலையில் MSCI அமைப்பின் அறிவிப்பில் அதானி குழு முதலீட்டாளர்களும் முதலீட்டு மதிப்பில் ஓட்டை விழுந்துள்ளது.
அதானி குழும பங்குகள் விலை
MSCI அமைப்பின் அறிவிப்புக்கு பின்பு அதானி குழு பங்குகளின் தற்போதைய நிலை
அதானி எண்டர்பிரைசஸ் - 8.25 சதவீதம் சரிவு
அதானி போர்ட்ஸ் - 3.19 சதவீதம் சரிவு
அதானி பவர் - 5.00 சதவீதம் சரிவு
அதானி டிரான்ஸ்மிஷன் - 5.00 சதவீதம் சரிவு
அதானி கிரீன் எனர்ஜி - 4.10 சதவீதம் சரிவு
அதானி டோட்டல் கேஸ் - 5.00 சதவீதம் சரிவு
அதானி வில்மார் - 4.85 சதவீதம் உயர்வு
ஏசிசி லிமிடெட் - 2.18 சதவீதம் சரிவு
அம்புஜா சிமெண்ட்ஸ் - 5.07 சதவீதம் சரிவு
NDTV - 2.55 சதவீதம் சரிவு


Click it and Unblock the Notifications