MSCI Global Investable Market Indexes-ல் தனது வழக்கமான பிப்ரவரி மாதம் ஆய்வுக்குப் பின்பு அதானி குழுமத்தின் செக்யூரிட்டிகள் குறித்த தகுதிகளை அறிவிக்கும் என நேற்று விளக்கம் கொடுத்த நிலையில் இன்று, முக்கிய அறிவிப்பை வெளியிட்டு உள்ளது .
MSCI அமைப்பு அதானி எண்டர்பிரைசஸ் உட்பட 4 அதானி குரூப் நிறுவனங்களின் ப்ரீ ப்ளோட் வெயிட்டேஜ் குறைப்பதாக அறிவித்துள்ளது. 4 நிறுவனங்களின் ப்ரீ ப்ளோட் பங்கு அளவீடுகளை ஆய்வு செய்து அதன் பின்பு எடுக்கப்பட்ட முடிவாகும்.
MSCI அமைப்பின் முடிவு கட்டாயம் மும்பை பங்குச்சந்தையில் எதிரொலிக்கும்.
ஹிண்டன்பர்க் அறிக்கை
ஜனவரி 24 ஆம் தேதி ஹிண்டன்பர்க் அறிக்கையில் அதானி குழுமம் முறையற்ற வகையில் வரிச் சலுகை அதிகம் கொண்ட நாடுகளில் இருக்கும் கணக்குகளைப் பயன்படுத்தியும், பங்கு விலையைச் செயற்கையாக உயர்த்தப்பட்டது எனப் பல குற்றச்சாட்டுகளை அடுக்கி வைத்தது.
அதானி குழும பங்குகள்
இந்த அறிக்கை வெளியானதில் இருந்து அதானி குழும பங்குகள் அதிகளவிலான சரிவைப் பதிவு செய்து சுமார் 110 பில்லியன் டாலர் அளவிலான சந்தை மதிப்பீட்டை இழக்க வைத்தது. இதில் முக்கியமான அதானி குழுமத்தின் 7 நிறுவனங்களும் சரிவை சந்தித்தது.
MSCI அமைப்பு
தற்போது MSCI அமைப்பு அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் ப்ரீ ப்லோடிங் தகுதியை நீக்க முடிவு செய்துள்ளது மட்டும் அல்லாமல் அதானி டோட்டல் கேஸ், அதானி டிரான்ஸ்மிஷன், அதானி குழுமத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் ACC ஆகிய 3 நிறுவனங்களின் தகுதிகளையும் நீக்க உள்ளதாகத் திட்டமிட்டு உள்ளது என அறிவித்துள்ளது.
4 நிறுவனங்கள்
அதானி எண்டர்பிரைசஸ், அதானி டோட்டல் கேஸ், அதானி டிரான்ஸ்மிஷன், ACC ஆகிய 4 நிறுவனங்கள் MSCI எமர்ஜிங் மார்கெட்ஸ் இன்டெக்ஸ்-ன் ஜனவரி 30 நிலவரப்படி 0.4 சதவீத வெயிட்டேஜ் கொண்டு உள்ளது. மேலும் இந்த 4 நிறுவனங்களின் தகுதி வருகிற மார்ச் 1 முதல் நடைமுறைக்கு வருவதாகவும் அறிவித்துள்ளது.
ஆய்வு
MSCI உலகளாவிய முதலீட்டு சந்தை குறியீடுகளுக்கான (GIMI) அதானி குழுமத்துடன் தொடர்புடைய குறிப்பிட்ட பத்திரங்களின் தகுதி மற்றும் ப்ரீ ஃப்ளோட் தகுதி நிர்ணயம் குறித்துச் சந்தை பங்கேற்பாளர்களிடமிருந்து MSCI பல கருத்துக்களைப் பெற்ற நிலையில், அதை அடைப்படையாக வைத்து பிப்ரவரி மாத ஆய்வில் மறுஆய்வு செய்யப்பட்டுத் தகுதிகளைக் குறைக்கப்பட்டு உள்ளது.
ப்ரீ ஃப்ளோட் தகுதி
ப்ரீ ஃப்ளோட் தகுதி என்பது சர்வதேச சந்தை முதலீட்டாளரால் பொதுப் பங்குச் சந்தைகளில் வாங்குவதற்குக் கிடைக்கக்கூடிய பங்குகளின் விகிதமே ஒரு செக்யூரிட்டி-யின் ப்ரீ ஃப்ளோட் தகுதியை வரையறுக்கிறது. இதேபோல் ஒரு செக்யூரிட்டி-யின் குறிப்பிட்ட நிலையற்ற தன்மை கொண்டு இருந்தால் மட்டுமே ப்ரீ ஃப்ளோட் தகுதியை நீக்கப்படும்.
பங்கு விற்பனை
MSCI அமைப்பு அதானி எண்டர்பிரைசஸ் உட்பட 4 அதானி குரூப் நிறுவனங்களின் ப்ரீ ப்ளோட் வெயிட்டேஜ் குறைப்பதாக அறிவித்துள்ள நிலையில், முதலீட்டாளர்கள் இந்தப் பங்குகளை விற்பனை செய்யத் தூண்டும் எனப் பெரிஸ்கோப் அனலிட்டிக்ஸ் ஆய்வாளர் ப்ரையன் தெரிவித்துள்ளார்.
அதானி குழும பங்குகள் விலை
MSCI அமைப்பின் அறிவிப்புக்கு பின்பு அதானி குழு பங்குகளின் தற்போதைய நிலை
அதானி எண்டர்பிரைசஸ் - 2.63 சதவீதம் சரிவு
அதானி போர்ட்ஸ் - 1.43 சதவீதம் உயர்வு
அதானி பவர் - 4.97 சதவீதம் சரிவு
அதானி டிரான்ஸ்மிஷன் - 5.00 சதவீதம் சரிவு
அதானி கிரீன் எனர்ஜி - 4.74 சதவீதம் சரிவு
அதானி டோட்டல் கேஸ் - 5.00 சதவீதம் சரிவு
அதானி வில்மார் - 1.18 சதவீதம் உயர்வு
ஏசிசி லிமிடெட் - 0.86 சதவீதம் சரிவு
அம்புஜா சிமெண்ட்ஸ் - 0.91 சதவீத உயர்வு
NDTV - 2.77 சதவீதம் சரிவு
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications